Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Friday, January 14, 2022

இணைந்தே வர …..

 



பொங்கல்
இனிமையின் அடையாளம்.
கரும்பு
சுவையின் அடையாளம்.
மஞ்சள்
நறு மணத்தின் அடையாளம்.
சீறும் காளை
வலிமையின் அடையாளம்.
 
அனைத்தும் இணைந்ததாய் வாழ்வு ருசிக்க
 

இனிய பொங்கல்,  தமிழர் திரு நாள்  நல் வாழ்த்துக்கள்.

Saturday, January 14, 2017

நன்றி மட்டும் போதாது



அனைவருக்கும் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாட்ஸப்பில்  வந்த அருமையான வீடியோவை கீழே இணைத்துள்ளேன். ஆர்.ஜே.பாலாஜி  உள்ளிட்ட பலரின் உழைப்பால் வந்துள்ளது இந்த காணொளி. இன்றைய நாளில் மிகவும் அவசியமான ஒன்று.



நன்றி சொல்வதோடு மட்டும் நாம் நிறுத்திக் கொள்ளக் கூடாது. அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்திட வேண்டும். 

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்திச் செலவில் 150 % ஆக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுப்போம்.

கார்ப்பரேட் ஆன்லைன் சூதாடிகளின் பிடியில் விவசாயம் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்போம்.

அடுத்த வருட பொங்கலாவது உழவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும் திருவிழாவாய் அமையட்டும்.. 

Thursday, January 12, 2017

இடையில் யார் இந்த மோடி?




பொங்கல் விடுமுறை பிரச்சினை தீர்ந்து விட்டது. ஒரு வேளை ஜல்லிக்கட்டு பிரச்சினைக்குக் கூட தீர்வு வரலாம்.

ஆனால் பணப் பிரச்சினை?

மூடப்பட்ட ஏ.டி.எம் களும் அபூர்வமாய் திறந்து இருக்கும் ஏ.டி.எம் முன்பான நீண்ட வரிசைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ செலவுகள் காத்துக் கிடந்தாலும் அதற்கான பணம், உழைத்துச் சேர்த்த பணம், ஒரு மூடனின் மூர்க்கத்தால் வங்கிக் கணக்கில் உறங்கிக் கொண்டிருக்கிறது. 

பொங்கலைக் கொண்டாட பணம் வேண்டும். அதை கொடுக்கச் சொல்லுங்கள். 

அது மோடியின் அப்பன் வீட்டு சொத்தா? ஒரு வாரத்துக்கு எவ்வளவு எடுக்க வேண்டும் என அவர் நிபந்தனை போட.

என் பொங்கல், என் பணம், என் உரிமை.

இடையில் மோடிக்கென்ன வேலை?