Showing posts with label அமைச்சர்கள். Show all posts
Showing posts with label அமைச்சர்கள். Show all posts

Monday, April 15, 2024

அனைவரும் அமைச்சராயிடுவாங்கய்யா . . .

 


இன்று சாலையை கடக்கையில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் பிரச்சாரத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஏ.சி.சண்முகம் " ஆல் இன் ஆல் அழகுராஜா நல்லவரு, வல்லவரு" என்று கவுண்டமணி ஸ்டைலில் பேசிக் கொண்டிருந்த ஒருவர் நீங்க ஓட்டு போடப் போறது எம்.பி க்கு இல்லை, மந்திரிக்கு என்று ஒரு பெரிய ஐஸ் பாரை தூக்கி அவர் தலையில் வைத்தார்.

நீங்கள் அமைச்சருக்குத்தான் ஓட்டு போடப்போறீங்க என்று சங்கிகள் இதுவரை 

ஆட்டுக்காரன்,

பொன்னார்,

டமில் ம்யூசிக்

எல்.முருகன்,

நயினார் நாகேந்திரன்

கார்த்தியாயணி

சௌம்யா அன்புமணி

ஏ.சி.சண்முகம்

பாரிவேந்தர்

போலி பேராசிரியர் ராம.சீனு

ஆகியோரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் யாரும் வெல்லப்போவதில்லை. மோடியும் வெல்லப் போவதில்லை.

பின் என்ன தைரியத்தில் எல்லோரும் அமைச்சர் கனவில் மிதக்கிறார்கள்?

முகமது பின் துக்ளக் திரைப்படத்தில் சோ எப்படி அனைத்து எம்.பி க்களையும் துணைப் பிரதமராக்கினாரோ அது போல மோடி பின் துக்ளக் அமைச்சராக்கிடுவார் என்ற நம்பிக்கையோ!

Sunday, May 27, 2018

வேலையைப் பாருங்க மந்திரிங்களே!!!!

விளையாட்டுத்துறை மந்திரி ஆரம்பித்து வைத்தது வினையாகிக் கொண்டிருக்கிறது.

தாங்கள் எப்படி உடற்பயிற்சி செய்கிறோம் என்று ஒவ்வொரு மத்திய மந்திரியும்  வீடியோ போட ஆரம்பித்து விட்டார்கள். சவால் வளையத்தை விரிவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

கீழே உள்ளது உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு வின் சாதனை. இதை அவர் செய்வது அவர் அலுவலகத்தில். பின்னணியில் வேறு மோடியின் படம்.




ஐய்யா, மத்திய மந்திரிகளே,  நீங்கள் அமைச்சராக இருப்பது உங்கள் உடற்பயிற்சி சாதனைகளை உலகத்துக்கு சொல்வதற்காக அல்ல. அமைச்சராக அதைத் தாண்டி பல கடமைகள், வேலைகள் இருக்கிறது.

அதைச் செய்யுங்கள்.

ஆனால் நீங்கள் எல்லாம் மோடியின் மந்திரிகள் அல்லவா? தலை எப்படி இருக்கிறதோ, அதைப் போலத்தானே வால்களும் இருக்கும்? 

உங்கள் பிரதமர் பார்ப்பதே வெட்டி வேலைகள் எனும் போது நீங்கள் மட்டும் என்ன உருப்படியான வேலைகளை செய்யப் போகிறீர்கள்?

Wednesday, April 29, 2015

ஆச்சார்யா வருகை - அம்மாவிற்கு கிலியா?




இப்படி ஒரு தலைப்போடு எந்த தமிழ் நாளிதழாவது இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளதா என்று தெரியாது.

ஆனால் அப்படி தலைப்பு இருந்தால் அது பொருத்தமாகவே இருக்கும்.

பவானிசிங்கின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பு முதல் அடி என்றால் மீண்டும் ஆச்சார்யா வருவது அடி மேல் அடி. இனி புதிய விசாரணை அவசியமில்லை, ஆச்சார்யா வந்தால் என்ன? வராவிட்டால் என்ன என்ற கேள்வி எழலாம்.

ஆனால் கர்னாடக உயர்நீதி மன்றத்தோடு  முடிகிற பிரச்சினை இல்லை. மீண்டும் உச்ச நீதி மன்றம் செல்லும் போது அங்கே ஆச்சார்யாதான் வாதிடப் போகிறார், இந்த முறை மைக்கேல் குன்ஹா  கொடுத்த தீர்ப்பு என்ற பெரும் ஆயுதம் வேறு அவர் கைவசம் இருக்கப் போகிறது.

உச்ச நீதி மன்றத்தில் ஏதாவது "துண்டுக்கு அடியில் விரல்" மூலம் ஏதாவது அதிசயம் நடக்காவிட்டால்???

நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

ஓ.பி.எஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் சடாமுடி சாமியார்களாகவே மாறி விடுவார்களே!

Thursday, November 13, 2014

கடன்கார மந்திரி, காணாமல் போன மந்திரி, கிரிமினல் மந்திரி

அடடா. அடடா, யாருக்கய்யா கிடைக்கும் இந்த பெருமை!

உலக அரசியல் வரலாற்றிலேயே இப்படி பொறுக்கியெடுத்த முத்துக்களை அமைச்சர்களாக்கி அழகு பார்க்கும் பெருமை நம்ம மோடிஜியைத் தவிர வேறு யாருக்கு உண்டு,

 

வங்கிகளில் கடன் வாங்கி திருப்பித் தராத மோசடிப் பேர்வழிகளின் பட்டியலில் உள்ள திரு வொய்.எஸ்.சவுத்ரி என்பவரை தனது அமைச்சர்களின் பட்டியலில் இணைக்கும் தைரியம் மோடியைத் தவிர உலகில் வேறு யாருக்காவது உண்டா? வெறும் 316 கோடி ரூபாய்தான் ஜெண்டில்மேன், அவ்வளவு கம்மியான தொகையைத்தான் நம்ம கடன்கார திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். அவரிடம் அந்தப் பணம் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும். வங்கியில் போட்டால் திருடர்கள் கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்றுதானே விளக்கம் சொல்லப் போகிறீர்கள்.

காணாமல் போன மந்திரிக்கு இன்னொரு பெயரும் உண்டு. கற்பழிப்பு மந்திரி. ஆமாம் ராஜஸ்தான் மாநிலம் தந்த பொக்கிஷம் நிகால்சந்த் மேஹ்வால். இவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பும். அவரைப் பிடித்துத் தரச் சொல்லி போலீசுக்கு சம்மன் அனுப்பும். தார் பாலைவனம் வரை தேடி விட்டு அவரைக் காணோம் என்று ராஜஸ்தான் போலீஸ் கோர்ட்டுக்கும் சொல்லி விடும். அவரு எப்படி கிடைப்பாரு? அவர்தான் மோடி அண்ணன் பக்கத்துலயே பத்திரமா இருக்காரே.

அடுத்தவர் .ராம்பால் கேதாரியா. இவர் மீது இருபத்தி ஒன்று கிரிமினல் வழக்குகள்தான் இருக்கு. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என எல்லாமே உண்டு. இப்படி ஒரு வீர தீர சூரனை மந்திரியாக்காவிட்டால் எப்படினு இப்பத்தான் அமைச்சர் பதவி கொடுத்து அவரது வீரத்துக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார் மோடிஜி. திறமைகளை வேற எப்படிய்யா கௌரவிக்க முடியும்.

உங்களையும் என்னையும் பாகிஸ்தானுக்கு போகச் சொன்ன கிரிராஜ்சிங் அண்ணனுக்கும் இப்பத்தான் மந்திரி யோகம் கிடைச்சது. 
 

ஏற்கனவே பழம் தின்னு கொட்டை போட்ட மந்திரிங்க வி.கே.சிங், உமா பாரதி, நிதின் கட்காரி என்ற பெரிய பட்டியல் இருக்கு. 

இருக்கிற மந்திரிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் கிரிமினல் என்ற சிறப்பு மோடிஜிக்கு மட்டுமே உண்டு. சகாக்கள் கிரிமினல் என்றால் மோடி ? அவர்தாங்க பாஸ்.


Monday, September 29, 2014

கண்டிப்பாக தவற விடக் கூடாத காட்சிகள் - பட்டியல் இரண்டு

சிறைக்குள்ளே இருக்கும் அம்மாவிற்கு தங்கள் கண்ணீரை காணிக்கையாக்கி  மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட  அழுகாச்சி காவியம். இது உலக வரலாற்றில் மிகவும் முக்கியம்தான்.

ஆம், உலகிலேயே ஒரு அமைச்சரவை பதவியேற்பு இவ்வளவு சோகத்துடனும் கண்ணீரோடும் எங்காவது இதுவரை நடந்ததுண்டா?

ஆக இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க புகைப்படங்களை காணத் தவறாதீர்கள். 

ஒன்றிரண்டு படங்களே நேரடியாக கிடைத்தது.

மற்றவையெல்லாம் யூட்யூபுலிருந்து  ஒவ்வொரு அமைச்சராக பார்த்து  பாஸ்  ( Pause)  செய்து பிறகு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து  பெயிண்டில் சேவ் செய்து  பிக்சர் எடிட்டர் மூலம் கிராப் செய்து   எடிட்  செய்து  போட்டது. 

ஒரு வரலாற்று ஆவணத்திற்கு இவ்வளவு கூட மெனக்கெடவில்லையென்றால் எப்படி?





















Saturday, August 30, 2014

அமைச்சர்களை நியமிக்க பிரதமருக்கு உச்சநீதி மன்ற அறிவுரை – இவ்வளவு அப்பாவிகளா நம் நீதிபதிகள்?



http://supremecourtofindia.nic.in/images/scmid.gif
அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக பிரதமருக்கும் மாநில முதல்வர்களுக்கும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அறிவுரையை பார்க்கையில் நிஜத்தில் எனக்கு சிரிப்புதான் வந்தது.

முதலில் இந்த அறிவுரையெல்லாம் மோடிஜிக்கு பொருந்தாது. தீர்ப்பு கொடுத்தாலே அதை ஒதுக்கி வைத்து விட்டு தனது இஷ்டத்திற்கு கவர்னர்களை பந்தாடிக் கொண்டு இருப்பவருக்குப் போய் அறிவுரையா? அதிலும் அமைச்சர்களை நியமிக்கும் உரிமை பிரதமருடையது என்று சொன்ன பின் “எங்களுக்கு எதுக்கு அறிவுரை? நாங்க கறை படிஞ்சவங்களுக்கும் மந்திரி பதவி கொடுப்போம். அமைச்சர் பதவி கொடுத்துட்டு கறை படிஞ்சவங்களா மாத்துவோம்” என்றல்லவா அவர் செயல்படுவார்!

சரி பிரதமர்தான் நிஜமாகவே அமைச்சர்களை முடிவு செய்கிறாரா?

கடந்தகால அனுபவங்கள் அப்படியெல்லாம் கிடையாது என்றெல்லவா சொல்கிறது…

நிதியமைச்சராக யார் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க முதலாளிகள்தான் முடிவு செய்வார்கள் என்பதை யஷ்வந்த் சின்ஹா, ப.சிதம்பரம் ஆகியோரின் கடந்த கால நியமனமும் தோற்றுப் போனாலும் அருண் ஜெய்ட்லி இரண்டு முக்கிய துறைகளில் அமைச்சராக இருப்பதும் சொல்கிறது. இவர்கள் அனைவருமே நிதித்துறை சீர்திருத்தம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளின் நலனுக்காக வங்கி, பென்ஷன் மற்றும் காப்பீட்டுத்துறையை திறந்து விடத் துடிப்பவர்கள்.

வர்த்தக அமைச்சராக ஆனந்த் ஷர்மா நமக்கு சரிப்பட்டு வருவாரா என்று ஹில்லாரி கிளிண்டன் கேட்டது விக்கி லீக்கில் அம்பலமானதை மறக்க முடியுமா?

கூட்டணியில் யார் அமைச்சராக வேண்டும் என்பதை அந்த கட்சியின் தலைவர்தான் முடிவு செய்ய முடியுமே தவிர பிரதமர் அல்லவே. டி.ஆர்.பாலுவை நியமிக்க மன்மோகன்சிங்கிற்கு விருப்பமில்லை என்ற தகவலும் நினைவுக்கு வருகிறதே!

ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதியை ராஜினாமா செய்ய வைத்து மறுநாள் வேறு ஒருவரை மம்தா ரயில்வே அமைச்சராக அழகு பார்த்ததும் நினைவிற்கு வந்து தொலைக்கிறதே!

வி.பி.சிங் காலத்தில் கூட அவர் வைகோவை அமைச்சராக்க விரும்பினார் என்றும் கலைஞர் முரசொலி மாறனை முன்னிறுத்திய காரணத்தால் “நகர்ப்புற அபிவிருத்தி” என்ற டம்மி அமைச்சகத்தை அவருக்கு ஒதுக்கினார் என்ற தகவல் பல காலம் உலவி வந்ததே!

பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பாஜக என்றால் கூடுதலாக ஆர்.எஸ்.எஸ் இவர்கள்தான் அமைச்சர் யார் என்பதை முடிவு செய்யக் கூடியவர்களே தவிர பிரதமர் அல்ல என்பது யதார்த்தம், அது வலிமை மிக்கவராக சொல்லப்படும் மோடியாக இருந்தால் கூட.

மேலே சொன்னதை விட இன்னும் முக்கியமானவர்களும் உண்டு. உண்மையில் சொல்லப் போனால் அவர்கள்தான் சக்தி மிக்கவர்கள். ஆம் நீரா ராடியா போன்ற தரகர்கள்தான்.

இப்படிப்பட்ட சூழலில் கறைபடிந்துள்ளவர்களை எல்லாம் அமைச்சராக்கக் கூடாது என்று அறிவுரை சொல்லும் நீதிபதிகள் எவ்வளவு அப்பாவிகள்!!!!!!