Showing posts with label ஆணவம். Show all posts
Showing posts with label ஆணவம். Show all posts

Tuesday, April 16, 2024

மதுரை வாக்காளர்களே செய்வீர்களா?

 


மதுரையில் பாஜக வேட்பாளராக தோற்கப் போகும் போலிப் பேராசிரியன் ராம.சீனு பேசும் காணொலி ஒன்றை பார்த்து மிகவும் கடுப்பாகி விட்டேன்.

கம்யூனிஸ்டுகள் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் கடைசி ஆணியை அந்த ஜந்து மதுரையில் அடிக்கப் போகிறதாம்.

அந்த ஜந்துவிற்கு சில விஷயங்களை நினைவு படுத்த வேண்டும்.

ராம.சீனு இருக்கும் கிரிமினல் கூட்டத்தின் முன்னோடி சர்வாதிகாரி ஹிட்லர். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவரான மூஞ்சே தங்கள் அமைப்பை உருவாக்க ஆலோசனை கேட்டது இன்னொரு சர்வாதிகாரியான முசோலினி யிடம்.

ஹிட்லர், முசோலினி இருவரையும் வீழ்த்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். செஞ்சேனை நெருங்கிய செய்தி கிடைத்ததும் விஷம் குடித்து செத்தான்.

முசோலினியின் சடலத்தை விளக்குக் கம்பத்தில் தலை கீழாக தொங்க விட்டவர்கள் கம்யூனிஸ்டுகள்.

பாஜக கிரிமினல் கூட்டம் ஒட்டி உறவாடும் அமெரிக்காவை அலற விட்டு புறமுதுகிட்டு ஓட வைத்தது சின்னன்சிறு நாடான வியட்னாமின் கம்யூனிஸ்டுகள்தான்.

அமெரிக்காவை நடு நடுங்க வைத்த பிடல் கேஸ்ட்ரோவும் செகுவாராவும் ஹூகோ சாவேஸும் இன்னும் பலரும் கம்யூனிஸ்டுகள்தான்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிருக்கு அஞ்சாமல் போராடியவர்களும் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களும் கம்யூனிஸ்டுகள்தானே தவிர மன்னிப்பு கேட்டு காட்டிக் கொடுத்த சங்கிகள் கூட்டமல்ல.

சபரிமலை கோயில் விவகாரத்தை உசுப்பேற்றி காங்கிரஸோடு கள்ளக் கூட்டணி வைத்ததால் போன மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு கேரளாவில் பின்னடைவுதான். ஆனால் அனைத்து ஆரூடங்களையும் தகர்த்து கேரள வரலாறு காணாத அதிசயமாக இரண்டாவது முறையாக முதல்வரானார் தோழர் பினராயி விஜயன் எனும் கம்யூனிஸ்ட்.

இழந்த தளங்களான மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் நம்பிக்கை மலர்கள் துளிர் விட்டுள்ளன. அது நாளை விருட்சமாகும்.

மதுரை மக்களின் பாசத்துக்குரிய மக்கள் பிரதிநிதிகளாக தோழர் என்.சங்கரய்யா, தோழர் கே.பி.ஜானகியம்மா, தோழர் பி.மோகன், தோழர் என்.நன்மாறன் ஆகியோரின் பாரம்பரியத்தில் மக்கள் பணி செய்து வரும் தோழர் சு.வெங்கடேசனைக் கண்டு அஞ்சுவதால் பிதற்றுகிறது அந்த ஜந்து.

கம்யூனிஸ்டுகளின் சவப்பெட்டிக்கு ஆணி அடிப்பேன் என்று சொன்ன அந்த ஜந்து யார்?

பூரி ஜகன்னாதர் கோயில் தேர்த்திருவிழாவிற்கு வந்த பக்தர் திரளை அயோத்திக்கு வந்ததாக போட்டோஷாப் பொய்ப் பிரச்சாரம் செய்த ஃப்ராடு பேர்வழிதான் இது.

இதன் ஆணவத்திற்கு பாடம் புகட்டும் பொறுப்பு மதுரை வாக்காளர்களுக்குத்தான் உள்ளது.

தோழர் சு.வெங்கடேசன் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதோடு போலிப் பேரா ராம.சீனு டெபாசிட்டை இழக்க வேண்டும். அதை விட முக்கியம் நோட்டா வை விடவும் குறைவாக அந்த ஜந்துவின் வாக்குகள் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்.

ஆணவப் பேய்களை வேப்பிலை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மீதேற்றி ஊர்வலம் விட வேண்டும்.

செய்வீர்களா மதுரை வாக்காளர்களே!

செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்

 

Thursday, March 14, 2024

நாவை அடக்கவும் குஷ்பு

 


திமுக, காங்கிரஸ் கட்சிகளில் குப்பை கொட்டி விட்டு இப்போது பாஜகவில் குப்பை கொட்டும் குஷ்பு அம்மையார் ஆணவம் தலைக்கேறி பேசிக் கொண்டிருக்கிறார்.

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, அதை பெறுபவர்களுக்கு எந்த உறுத்தலும் வரக்கூடாது என்பதற்காக "மகளிர் உரிமைத் தொகை" என்று அழகாக பெயர் வைத்துள்ளார்கள். அதை பிச்சை என்று சொல்வது அவரின் சங்கிக் கொழுப்பு, காசுக் கொழுப்பு.

தமிழர்கள் காசு கொடுத்து அவர் நடித்த படங்களைப் பார்த்ததால்தான் அவருக்கு என்று பெயரும் சொத்தும். அதை தமிழர்கள் போட்ட பிச்சை என்றால் ஏற்றுக் கொள்வார்களா?

முன்பும் இப்படித்தான் "என்னால் சேரி மொழியில் பேச முடியாது" என்று சொன்னார்கள்.

இவர் பேசுவது அசிங்கமென்றால் அதற்கு கொடுக்கும் விளக்கங்கள் ஆபாசம்.

திருமதி குஷ்பு சுந்தர் அவர்களே, நாவை அடக்கவும். இல்லையெனில் உங்கள் புகைப்படத்துக்கு கொடுத்த மரியாதையை தமிழ்நாட்டுப் பெண்கள் நாளை உங்களுக்கு நேரடியாக கொடுக்கும் நிலை உருவாகும்.

Tuesday, February 21, 2023

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை . . .

 


நீங்கள் தமிழ்நாட்டு மக்கள், எங்களுக்கு ஓட்டு போடாமல் எங்களை தோற்கடித்தீர்கள். நாங்கள் ஜெயித்திருந்தால் அமைச்சராகி இருப்போம். இருந்தாலும் எங்கள் திறமையை புரிந்து கொண்ட மோடி எங்களை கவர்னராக்கினார். 

இது தமிழிசை அம்மையார் உதிர்த்த பொன்மொழி

தோற்றுப் போன எல்.முருகனை மந்திரியாக்கினார் என்பதை அவருக்கு நினைவு படுத்தி, மக்களால் நிராகரிக்கப்பட்ட உங்களை கவர்னராக்கியது பெருமை அல்ல, உங்களை நிராகரித்த ஜனநாயக நடைமுறைக்கு செய்யப்படும் அசிங்கம். ஆணவம்.

இதே அசிங்கத்தை இதர கட்சிகள் கூட சில முறை செய்துள்ளனர் என்பது இந்திய ஜனநாயகத்தின் களங்கம்.

Tuesday, December 6, 2022

இதுதான் சங்கித் திமிர்

 


 பாஜகவுக்கு அடியாட்கள் சப்ளை செய்கிற அர்ஜூன் சம்பத் கட்சி இன்று அண்ணல் அம்பேத்கருக்கு தயாரித்துள்ள சுவரொட்டியை பாருங்கள்.



 இந்து மதமே வேண்டாம் என்று பௌத்த மதத்திற்கு மாறியவருக்கு காவி உடையும் விபூதியும் அணிவித்து காவித் தலைவரே என்று அழைப்பதெல்லாம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

 திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடித்த கூட்டம் இப்போது அண்ணல் அம்பேத்கருக்கும் செய்கிறது என்றால் இதனை திமிர், ஆணவம், அயோக்கியத்தனம், பொறுக்கித்தனம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.

 அர்ஜூன் சம்பத்திற்கு ஒரு சின்ன ஆலோசனை.

 அர்ஜூன் சம்பத், ஆட்டுக்காரன், எச்.ராசா மூவரும் ஒரே நேரத்தில் சங்கர மடத்திற்கு செல்லட்டும். மூவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கிடைத்ததா என்பதை மனசாட்சிப் படி சொல்லட்டும்.

 அதன் பின்னும் அந்த மனிதன் காவியை உயர்த்திப் பிடித்தால் அந்தாள் எல்லாம் மனிதன் என்று மதிக்கப்பட லாயக்கில்லாத ஜந்து என்று அர்த்தம்.

 வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை, சுய மரியாதை இதெல்லாம் இருந்தால் அந்தாள் ஏன் சங்கியாக இருக்கப் போகிறார் என்றுதானே கேட்கிறீர்கள்.

 அதுவும் சரிதான் . . .

 பின் குறிப்பு

 டிசம்பர் ஆறு என்றால் இப்போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாள் என்பதுதான். படுபாவி சங்கிகள் திட்டமிட்டு தேர்ந்தெடுத்த நாளல்லவா! இந்தியாவின் ஒற்றுமையின் மீது நடந்த தாக்குதல் மசூதி இடிப்பு என்றால் இந்திய நீதித்துறை மீதான நம்பிக்கையின் மீது நடந்த தாக்குதல் இடித்தவர்களிடமே நிலத்தை ஒப்படைத்த தீர்ப்பு எனலாம்.

Friday, June 18, 2021

இதுதான் சங்கி புத்தி

 


நேற்று மிகவும் எரிச்சலூட்டிய ஒரு பதிவு


அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு சிலரை மிக மோசமாக பாதித்துள்ளது.

அதனால்தான் இப்படி ஒரு பதிவு.

தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், கலாச்சாரக் காவலர்கள் என்ற மேட்டிமை புத்தி மற்றவர்களை இழிவாக பார்க்க வைக்கிறது. சிதம்பரம் கோயில் அர்ச்சகர் பக்தரை தாக்கியதையும் தேவாரம் திருவாசகம் பாட முனைந்த ஆறுமுகசாமி ஓதுவாரை தீட்சிதர்கள் கெட்ட வார்த்தையில் திட்டி அடித்து நொறுக்கியதெல்லாம் இந்த பெண்மணிக்கு தெரியாது போல . . .

ஏதோ இவர்கள் வாயிலிருந்து மரியாதையான வார்த்தைகள் மட்டுமே வரும் என்று ஒரு நினைப்பு. மேலே சொல்லப்பட்டுள்ளதை விட கேவலமாக பேசுகிற  சமபிரதாயக் காவலர்கள் ஏராளமானவர்களை நான் அறிவேன்.

தோற்றுப் போயிருக்கிற போதே இவர்களுக்கு இவ்வளவு திமிர் என்றால், தமிழகத்தில் மட்டும் அதிமுக கூட்டணி வென்றிருந்தால் எவ்வளவு ஆட்டம் போட்டிருப்பார்கள்!

பிகு 1: இது போட்டோஷாப் இல்லை. அந்த பெண்மணியின்  ட்விட்டர் பக்கம் சென்றேன். இந்த குறிப்பிட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது. மற்ற பதிவுகள் இதே ரகம். கடைந்தெடுத்த சங்கி என்று நன்றாகவே தெரிகிறது. முந்தைய பதிவை ஏன் நீக்கினாய் என்று பலரும் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. 

பிகு 2 : இந்த பெண்மணி சரளமாக பேசியுள்ளதில் இருந்து கெட்ட வார்த்தைகள் பேசுவது அவருக்கு சர்வ சாதாரணம் என்று தெரிகிறது.

பிகு 3  :  கருத்துச் சுதந்திரத்தையும் அவதூறையும் பலர் குழப்பிக் கொள்கிறார்கள். அவதூறு என்பது இதுதான்.


Wednesday, February 3, 2021

திரையில் நாயகி, நிஜத்தில் வில்லி

 


இப்போதே இவ்வளவு ஆட்டமென்றால்

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த செய்தி கீழே உள்ளது.

 உலகப் புகழ் பெற்ற பாடகி ரியான்னா மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்தவர். இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். ட்விட்டரில் இவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடி.

இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாம் ஏன் பேசுவதில்லை என்று இவர் செய்த ட்வீட் லட்சக் கணக்கில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.



 ரியானாவுக்கு மோடி வகையறாக்களின் பிரதான பிரச்சார பீரங்கியான நடிகை கங்கனா ரவுத் போட்டுள்ள பதிலை பாருங்கள்.

 


போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொல்வது மட்டுமல்ல, ரியானாவை வேறு “உட்கார் முட்டாளே, தேசத்தை விற்க நாங்கள் ஒன்றும் உங்களைப் போல டம்மிகள் அல்ல” என்று வேறு திட்டுகிறார்.

 ஆணவமும் திமிரும் கர்வமும் தலைக்கேறியிருப்பதால்தான் இப்படியெல்லாம் பேச முடிகிறது.

 இப்போதே ஆட்டம் இவ்வளவு ஓவராக இருக்கிறதே, நாளை இந்த பெண்மணியெல்லாம் அமைச்சரானால் எவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்?

 திரையில் நாயகியாக வலம் வந்தாலும் நிஜத்தில் சரியான வில்லி இவர்.

Monday, October 19, 2020

குப்பைத் தொட்டியில் வீசியெறியுங்கள் எடப்பாடி

 


நமக்கு தெரிந்தவர் வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் ஆறுதல் சொல்வது என்பது ஒரு நாகரீகமான பண்பு.

 ஆறுதல் சொல்வதைக் கூட பெறுபவர் அறியாத, தாங்கள் தமிழகத்தில் திணிக்க முயலும் மொழியில்தான் சொல்வது என்பது திமிர் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.



 நாகரீகம் என்பதும் பண்பு என்பதும் காவிக்கயவர்களுக்கு கெட்ட வார்த்தைதானே!

 உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் அந்த மனிதன் அனுப்பிய கடிதத்தை  குப்பைத் தொட்டியில் வீசியெறியுங்கள் எடப்பாடி.

பிகு 1 : இதிலே அமித்து கையெழுத்திட்டிருப்பது அவருடைய தாய் மொழியான குஜராத்தியில் என்று சொல்கிறார்கள். உண்மையா என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பிகு 2: எழுதி ஐந்தாறு  நாளாச்சு. அதனால் என்ன எதிர்ப்பை தெரிவிப்பதுதானே மிகவும் முக்கியம்!

 

Sunday, July 7, 2019

வேலூர் மெட்ரோவைக் காணோம் மேடம்



"நீங்கள் வசதியாக பயணம் செய்வதற்காக நான் மெட்ரோ ரயில்கள் அமைத்துத் தருவேன். ஆனாலும் நான் என்னுடைய காரில் நான் மட்டும்தான் பயணிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தால் பெட்ரோல் விலை உயர்வையும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும்"

நிர்மலா அம்மையாரின் இந்த பேட்டியை காலையில் ஹிந்து நாளிதழில் படித்தவுடன் காபி கூட குடிக்காமல் வேலூர் நகரம் முழுதும் சுற்றிப் பார்த்தேன், காட்பாடியில் வழக்கமான ரயில்கள் கூட ஓடிக் கொண்டிருந்ததே தவிர மெட்ரோ ரயிலைக் காணவே இல்லை.

ஆகவே முதல் வேலையாக வேலூரில் காணாமல் போன மெட்ரோ ரயிலை உடனடியாக கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா முழுதும் இதுவரை கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய மாநகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்கள்  ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த நகரங்களில் அவற்றில் பயணிக்காமல் ஒத்தை ஆளாக காரில் செல்பவர்களுக்கு மட்டும்தான் பெட்ரோல் விலை உயர்வு என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது போல ஆணவமாக பேசுகிறார் அம்மையார்.

இந்தியா முழுதும் கிராமங்களிலும் நகரங்களிலும்  சாதாரண இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை பல கோடி. அவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்.

அதை அப்படியே மறைத்து விட்டு ஏதோ பெரு நகரங்களில் கார்களில் பயணிப்பவர்களுக்குத்தான் பாதிப்பு, அவர்கள் கூடுதல் விலை கொடுக்கட்டுமே என்ற ரீதியில் திமிராகப் பேசுவதுதான் பாஜக ஆணவம். நிர்மலா அம்மையார் வெளிப்படுத்துவது அந்த ஆணவத்தைத்தான்.


Saturday, May 12, 2018

த.செ வை பணியிடை நீக்கம் செய்யுங்கள் . . .


வாரங்கள் பல கடந்து கொண்டே இருக்கிறது.

முன் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கோடை மழை வருமோ என்று அதிசயிக்கப்படக் கூடிய விதத்தில் உயர் நீதி மன்றம் குட்டு வைத்துக் கொண்டே இருக்கிறது.

ஆனாலும் காமெடி வில்லன் எஸ்.வி.சேகரை தமிழக காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை.

அதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும்.

அதிகார பலம், அதிகார ஆணவம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

திருமதி கிரிஜா வைத்யநாதன் தலைமைச் செயலாளராக இருக்கும் வரை கைது நடக்கப் போவதில்லை.

எனவே

ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் தரும் அம்மையாரை உடன் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

ஆனால் 

எடுபிடி அரசு அதனைச் செய்யாது என்பதே யதார்த்தம் . . .

இந்த லட்சணத்தில் மத்தியரசின் முதன்மைச் செயலாளராக அம்மையார் முயற்சிக்கிறாராம். 

அப்படி ஒரு கொடுமை நடந்தால்

இன்டர் போல் கூட சிப் சேகரை கைது செய்யாது.

தமிழக காவல்துறையின் வீரம் எல்லாம் போராடுகிற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதுதான் பாயும்.