Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

Friday, January 19, 2024

ராம் கி பாடி - அர்த்தமே வேறடா

 


அயோத்தியில் டிமோ அரசு வைத்துள்ள பலகைகள் கீழே . . .



முன்னாடி படேல் சிலைக்கு தமிழில் "ஸ்டேட்டுக்கே ஓப்பி யுனிட்டி" என்று தமிழாக்கம் செய்த அதே தமிழறிஞர்தான் (Micro Irrigation என்பதை சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்த எச்.ராசாவாக இருக்குமோ)   "ராம் கி பாடி" யை கண்டு பிடித்திருக்க வேண்டும்.

அடேய்களா, உங்கள் தமிழ்க்கொலை கொடுத்துள்ள விபரீத அர்த்தம் புரிகிறதா இல்லையா?

புரியவில்லையென்றால் மேலே உள்ள படத்தை பார்க்கவும். இப்போதும் புரியாதவர்கள் "சாமி" படத்தை பார்க்கவும்.

பாவம்யா ராமரு!

Monday, January 15, 2024

ராமரே வரலியாமே டிமோ!


 அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக சங்கிகளும் சனாதனவாதிகளும் அடித்து வரும் கேலிக்கூத்துக்களுக்கு இணையான கூத்து ஒன்றை செய்துள்ளார் லாலு பிரசாத் யாதவின் பையன்.


பாவம் ராமர் என்று பரிதாபப்படத்தான் தோன்றுகிறது. இதெல்லாம் தெரிந்திருந்தால் வால்மீகி ராமாயணமே எழுதியிருக்க மாட்டார். 

Thursday, June 9, 2022

இதுவல்லவோ திருமண உடை !!!!!


மணமகன் அணிந்துள்ள திருமண ஆடையை இதற்கு முன்பாக பார்த்துள்ளீர்களா?

ஆண்ட பரம்பரை வீரத்தை வெளிப்படுத்துகிறாராம்!

பாவம் அந்த மணமகள் !!!!! 

பிகு : முகம் அவசியமில்லை என்பதால் மறைத்து விட்டேன். காவியோடு ஐக்கியமான கட்சி என்பதால் முகத்தில் காவி வண்ணத்தை பூசி விட்டேன்.

Sunday, August 22, 2021

மோடியால் கூட நம்ப முடியாத உருட்டு

 


ஜாதி மேலாதிக்க, மத வெறி பதிவுகள் அதிகமாக இருந்தாலும் "மத்யமர்" குழுவில் நீடிப்பதற்கு காரணமே, அங்கே கிடைக்கும் தரமான காமெடி பதிவுகள்தான்.

அப்படி ஒரு காமெடி பதிவை நீங்களும் ரசித்து சிரியுங்கள்.






இதை இட்லி என்றால் சட்னியே நம்பாது என்ற ரேஞ்சில் மோடியால் கூட நம்ப முடியாத அளவிற்கு காமெடியில் பின்னி எடுக்கிறார்கள் மத்யமர் சங்கிகள்.

இதையெல்லாம் நிஜம் என்று அவர்களே சீரியஸாக நம்புவதுதான் பதிவை விட பெரிய காமெடி.


Wednesday, September 11, 2019

ஏகாதசி அன்று சந்திராயனை ஏவியிருந்தால்


விண்கலத்தை ஏகாதசி நாளில் ஏவினால் நிலவில் இறங்கிவிடும் ... அமெரிக்காவே அப்படித்தான் செய்ததாம்...


மும்பை:
இஸ்ரோ, நிலவுக்கு அனுப்பிய ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு கிடைக்காதது, விஞ்ஞானிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனினும், விக்ரம் லேண்டரை மீண்டும் இயக்குவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். 


இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தற்போது மகராஷ்டிராவில் ‘சிவ பிரதிஸ்தான் ஹிந்துஸ்தான்’ என்ற அமைப்பைநடத்தி வருபவருமான சாம்பாஜி பிதே,விக்ரம் லேண்டர் பிரச்சனைக்கு உள்ளானதற்கான ‘காரணத்தை’ கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்.

“அமெரிக்காவானது, நிலவுக்கு விண் கலனை அனுப்ப 38 முறை முயன்று தோற்றது. இதையடுத்து அமெரிக்காவின் விஞ்ஞானிகளில் ஒருவர் இந்திய நேரமுறையை பின்பற்றி நிலவுக்கு விண்கலம் அனுப்பலாம் என யோசனை தெரிவித்தார். இதனடிப்படையில் ஏகாதசி நாளன்று அமெரிக்காவின் விண்கலம் 39-ஆவது முறையாகநிலவுக்கு அனுப்பப்பட்டது. அந்த முயற்சிவெற்றியும் பெற்றது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

அதாவது, ஏகாதசி நாளில் விண்கலத்தை ஏவாததே பிரச்சனைக்கு காரணம் என்பது போலவும், அன்றைய தினம் அனுப்பியிருந்தால் விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்கி இருக்கும் என்பது போலவும் கூறி, இதில், அமெரிக்க கதை ஒன்றையும் பின்னிணைப்பாக சேர்த்துள்ளார்.

“தனது தோட்டத்தில் விளையும் மாம் பழங்களை சாப்பிடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும்” என்று உளறியவரும் இதே சாம்பாஜிதான். அவ்வப்போது, ஒன்றும் தெரியாத அப்பாவி போல பேசினாலும், 2018-இல் பீமாகோரேகானில் தலித் மக்கள் மீது நடத்தப் பட்ட வன்முறையின் சூத்திரதாரி சாம்பாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தீக்கதிர் 11.09.2019

Saturday, April 21, 2018

எடப்பாடி சாமியாம்! தைரியம்யா உங்களுக்கு !!!




எடுபிடி, அடிமை, ஊழல் பேர்வழி, அமைதிப்படை அமாவாசை போல முதலமைச்சரானவர், லாயக்கில்லாதவர் என்றெல்லாம் தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுகிற எடப்பாடிக்கு ஆனாலும் அளவுக்கதிகமான தைரியம்தான்.

அரசின் பணத்தில் “எடப்பாடியை சாமி”யாக சொல்கிற விளம்பரத்தைத் தான் சொல்கிறேன்.






ஜெயலலிதா கூட தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டதாக நினைவில்லை.


தமிழக மக்களின் கடுமையான வெறுப்பில் இருக்கும் போதே இப்படி ஒரு விளம்பரம் என்றால்?????

Tuesday, December 19, 2017

அவரைப் பத்தி . . . நீங்களே சிரிங்க . . .

நான் எந்த முன்னுரையும் எழுதப் போவதில்லை. 

இணைப்பின் மூலம் காணொளியைப் பார்த்து நீங்களே மனம் விட்டு சிரியுங்கள். 

அண்ணன் மட்டும் இல்லையென்றால் தமிழகம் என்ன ஆகும்?

 


கண்டிப்பா இந்த இணைப்பை பாருங்க, வாய் விட்டு சிரிங்க

Wednesday, December 13, 2017

அவரும் "நாய் சேகர்" போல ரௌடியாம் !!!!!!!!



தலைநகரம் "நாய் சேகரை" இப்படி புலம்ப வைத்தது இவர்தான்.

Saturday, April 22, 2017

ஒரு உண்மையை மட்டும் சொல்லுங்க சாரே




அமைச்சர் செல்லூர் ராஜூ தானாகவே ஜிந்திச்சு இந்த ஐடியாவை கண்டுபிடிச்சாரா?

இல்லை எவனாவது வில்லங்கமான எதிர் கோஷ்டிக்கார ஸ்லீப்பர் செல் அமைச்சரை இப்படி மாட்டி வைச்சானா?

மெத்தப் படிச்ச ஐ.ஏ.எஸ் கலெக்டருங்க, பொதுப்பணித்துறை பொறியாளருங்க, இவங்க எல்லாம் அமைச்சர் அசிங்கப்படட்டும்னு சும்மா இருந்தாங்களா அல்லது அவங்களும் அமைச்சர் மாதிரியே காமெடி பீஸூங்கதானா?

அடுத்த புரட்சிகர அறிவியல் சோதனை என்ன?

இப்படி பல கேள்விகள் இருந்தாலும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க சாரே,

தெர்மகோல் வாங்க பத்து லட்சம் ரூபாய் செலவு செஞ்சதில எவ்வளவு ரூபாய் கமிஷன் அடிச்சீங்க? யார்யாருக்கு எவ்வளவு பங்கு?