Showing posts with label காவிரி. Show all posts
Showing posts with label காவிரி. Show all posts

Tuesday, October 18, 2022

பொன்னி நதி பார்த்த பொழுது.

 







மேலே உள்ள படங்கள் எல்லாம் காவிரி நதி கர்னாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் ஓடுகிற காட்சிகள்.

நதியின் அழகோ, அது பாய்ந்து செல்லும் வேகமோ, மேலே உள்ள மேகக் கூட்டங்களோ இப்படங்களை மீண்டும் பார்க்கும் போது நினைவுக்கு வராது. துயரம் மட்டுமே வரும்.
ஆமாம்.

நாங்கள் ஞாயிறன்று ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு சென்றது சனிக்கிழமையன்று பெங்களூரில் காலமான என் அம்மாவின் அஸ்தியைக் கரைக்கத்தான்.

Tuesday, February 27, 2018

காவிரி - கோதாவரி. கட்காரி- கண்றாவி



மோடியின் மந்திரியான நிதின் கட்காரி நேற்று சென்னையில் அளித்த பேட்டியில்

"காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அவ்வளவு சுலபமாக விரைவில் அமைக்க முடியாது. கர்னாடகமும் தமிழகமும் என் கண்கள். இரண்டையும் பாதுகாக்க வேண்டும்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து கோதாவரியையும் காவிரியையும் இணைத்து அதன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் தருவேன்"

உடனடியாக காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற ஆணையை முடியாது என்று சொல்கிற நிதின் கட்காரி மீது அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்.

தேர்தல் வரப் போகிற கர்னாடகத்தின் கண்ணில் வெண்ணெய் வைப்பதற்காக தமிழகத்தின் கண்களில் வைக்க சுண்ணாம்பு தயாராகிறது.

காவிரி - கோதாவரி இணைப்பு என்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியம் இல்லாதது.

ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அது அம்பானி, அதானி என்று ஏதாவது முதலாளியின் கஜானாவுக்குச் செல்லும். 

அதில் ஒரு பகுதி கட்காரியின் பைக்கும் செல்லும்

Friday, February 16, 2018

கழுதை தேய்ந்த கதையாய் . காவிரி



காவிரி நடுவர் மன்றம்  தனது இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று ஆணையிட்டது.

அதே காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி தண்ணீர் தந்தால் போதுமானது என்று முடிவு செய்தது.

உச்ச நீதி மன்றமோ இப்போது 192 என்பதையும் குறைத்து 177.25 டி.எம்.சி தண்ணீர் தருவது மட்டுமே போதுமானது என்று உத்தரவிட்டுள்ளது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்ற  சொற்றொடரை நிரூபித்த பெருமை நமது உச்ச நீதி மன்றத்துக்கே பொருந்தும்.

இந்த தீர்ப்பிற்கு மேல்முறையீடு கிடையாது.
பதினைந்து ஆண்டுகளுக்கு இந்த தண்ணீர் அளவு பொருந்தும்.
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கர்னாடகம் புதிய அணைகள் கட்டக் கூடாது
ஆகியவை  இத்தீர்ப்பின் இதர முக்கியமான அம்சங்கள்.

205 வேண்டாம்
192 வேண்டாம்
இப்போது உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள 177.25 டி.எம்.சி தண்ணீரை கர்னாடக மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் சரியாக தருமா?  தமிழகம் மறுத்தாக்ல்

காவிரி நதி நீர்  மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு இனியாவது அமைத்திடுமா?

இது இரண்டுமே நடக்காவிட்டால் (நடந்தால்தான் அதிசயம்) உச்ச நீதிமன்றம் என்ன செய்யும்?

கர்னாடக அரசின் மீதோ அல்லது மத்தியரசு மீதோ நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உச்ச நீதி மன்றத்துக்கு இருக்கிறதா?

காவிரியில் ஓடும் தண்ணீரில் பெரும் பகுதி கர்னாடகா திறந்து விடுவதோ அல்லது தமிழகத்தில் பெய்யும் மழையோ அல்ல, தன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழகத்து விவசாயிகள் விடும் கண்ணீர் துளிகளின் சங்கமம்தான்.


கண்ணீர் துளிகள் தொடரும் என்பதுதான் சோகமான யதார்த்தம்

Tuesday, October 4, 2016

மோடியின் துல்லியமான தாக்குதல் – தமிழகத்தின் மீது





காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றும் அந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் மத்தியரசு சொல்லியுள்ளது ஒன்றும் அதிர்ச்சியளிக்கவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அவர்களுக்கு என்றுமே விருப்பம் கிடையாது. உச்ச நீதிமன்றம்தான் அதற்குத் தடையாக இருக்கிறது என்று தமிழக பாஜக ஆட்கள் மட்டும்தான் கதை கட்டிக் கொண்டிருந்தார்கள்.

இப்பிரச்சினையில் தலையிட முடியாது என்று மோடி கைவிரித்ததே, தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட முடியாது என்பதால்தான். இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

ஏற்கனவே பெங்களூருவில் கலவரம் செய்து ஆதாயக் கணக்கை தொடங்கி விட்டார்கள். இந்த முடிவின் மூலம் கர்னாடகக் காவலர்கள் என்று இன்னொரு பிம்பத்தையும் பெற்று விட்டார்கள். அப்படியே அந்த வெறியை இன்னும் தக்க வைக்க வேறு ஏதாவது கூட செய்வார்கள்.

ஹொகனேக்கலில் பரிசலில் பயணம் செய்துதானே யெடியூரப்பா முதல்வரானார்! இப்படியெல்லாம் செய்தால்தானே மீண்டும் கர்னாடகாவில் ஆட்சியைப் பிடிக்க முடியும்?

எப்படியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. தமிழகத்து பாஜகவினர் வொர்த் வெறுமனே பிரியாணி திருடுவதும் செல்போன் திருடுவதும்தான் என்பது மோடிக்கும் தெரியுமல்லவா?

சரி, தமிழகத்தின் மீது மோடி நிகழ்த்திய இந்த துல்லியமான தாக்குதலை யாரெல்லாம் பாராட்டப் போகிறார்கள்?

Tuesday, September 13, 2016

கர்னாடக அரசை கலைக்கச் சொல்வது மூடத்தனம்




கர்னாடகத்தில் நடக்கும் கலவரங்களை முன்வைத்து அங்கேயுள்ள சித்தராமய்யா அரசை கலைத்திட வேண்டும் என்ற கருத்துக்கள் பரப்பப் படுகின்றன.

கர்னாடகா தனி நாடாகவும் இந்தியா தனி நாடாகவும் பிரிந்து பன்னாட்டு விதிகள் படி பேசித் தீர்த்துக் கொள்வோம், இந்தியப் பிணத்தை சுமப்பதில் இருந்து விடுதலை பெற காவிரித்தாய் வழி வகுத்ததாக தியாகு பேசியதாக ஒரு ஆடியோ வாட்ஸப்பில் உலா வருகிறது.

இதையெல்லாம் விட மூடத்தனம் எதுவும் இருக்க முடியாது.

தமிழகமும் கர்னாடகமும் தனி நாடுகளாவது போன்ற கற்பனைகள் எதுவும் இருக்க முடியாது. 

இக்கலவரங்களின் பின்னணியில் முதன்மையாக இருப்பது பாஜக வைச் சேர்ந்த ரௌடிகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படி இருக்கையில் கர்னாடக மாநிலத்தை கவர்னர் ஆட்சிக்குக் கீழே கொண்டு வருவது என்பது கலவரத்தை கையிலெடுத்தவர்கள் கையில் கர்னாடக மாநிலத்தை ஒப்படைப்பதாகவே இருக்கும்.

கொதிக்கும் பாத்திரத்திலிருந்து தப்பிக்க எரியும் அடுப்பில் குதிக்கச் செய்யும் மூடத்தனத்தை பரிந்துரைக்காதீர்கள். திருடர்கள் கையிலே சாவியை ஒப்படைக்க முடியுமா?

காவிரியைப் பயன்படுத்தி காவிகள் ஆட்சிக்கு வர விரும்புவதற்கு ஊக்க மாத்திரை அளிக்க வேண்டாம். 

உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு, கள்ள மௌனத்தை கடை பிடிக்கும் மத்தியரசு, கையாலாகத கர்னாடக அரசு ஆகியோர் செயல்பட வேண்டும் என்று ஒற்றுமையோடு குரல் கொடுப்பதுதான் உடனடித் தேவை. 

 

காவிரி - பொறுப்புணர்வுதான் முதலில் வேண்டும்

தண்ணீருக்கான பிரச்சினை கண்ணீரை வரவழைக்கிறது. மூன்றாம் உலகப் போர் என்று நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுவது உண்மையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நாகரீங்கள் நதிக்கரைகளில் வளர்ந்தது  என்று சொல்லப்படுகிறது. நதியை முன்வைத்து நாகரீகங்கள் இன்று மறைந்து கொண்டிருக்கிறது.

தண்ணீர் விவசாயத்துக்கான ஜீவ நாடியாக. வாழ்வதற்கான அடிப்படையாக இருந்தவரை பிரச்சினையில்லை. அரசியல் நடத்துவதற்கான ஆதாரமாக மாறியதன் பின்னேதான் அத்தனை பிரச்சினைகளும்.

கலவரங்களை தூண்டி விடுவதில் அரசியல் ஆதாயம் உள்ளதென்றால் அதனை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதிலும் கூட அரசியல் உள்ளது. 

இன்றைய சூழலையும் அதன் பின்னே உள்ள அரசியலையும் தோழர் ஸ்ரீரசா அவர்கள் பகிர்ந்து கொண்ட பல படங்கள் உணர்த்துகின்றன. நாம் புரிந்து கொள்ளவும், தீய சக்திகளை அம்பலப்படுத்தவும் இங்கே நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.









 

Saturday, April 23, 2016

வேறு யார் பொருத்தம்?





இலக்கியங்களில் காவிரி பற்றி சொல்லப்பட்டுள்ளதா?
வரலாற்றில் காவிரி பற்றி என்ன பதிவாகியுள்ளதா?
காவிரி எங்கே எப்படி தொடங்கி எதுவரையில் ஓடுகிறது?
பேச்சுவார்த்தைகள் மூலம் நதி நீர் பிரச்சினைகள் எங்காவது தீர்ந்துள்ளதா?
காவிரி கர்னாடகாவிலும் தமிழகத்திலும் எவ்வளவு தூரம் ஓடுகிறது?
தமிழகத்தில் முன்பு காவிரி மூலம் பாசனம் செய்யப்பட்ட நிலப்பரப்பின் அளவு என்ன? உற்பத்தியின் அளவு என்ன?
கர்னாடகத்தில் முன்பு காவிரி மூலம் பாசனம் செய்யப்பட்ட நிலப்பரப்பின் அளவு என்ன? உற்பத்தியின் அளவு என்ன?
காவிரி பிரச்சினை எப்போது தொடங்கியது? அது முற்றியது எவ்வாறு?
காவிரிப்பிரச்சினையில் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் மைசூர் அரசின் நடவடிக்கைகள் என்ன? அப்போது தமிழக நிர்வாகப் பொறுப்பில் இருந்த வெள்ளை அரசு என்ன செய்தது?
சுதந்திர இந்தியாவில் பிரச்சினையைத் தீர்க்க மத்தியரசு செய்தது என்ன? செய்யத் தவறியது என்ன?
நீதிமன்ற வழக்குகளை வாபஸ் வாங்கியது யார்? அதற்காக அளிக்கப்பட்ட உறுதி மொழி என்ன? அது காப்பாற்றப்பட்டதா?
காவிரி நதி நீர் தீர்ப்பாணையம் இடைக்கால தீர்ப்பாக அளித்தது என்ன? இறுதித் தீர்ப்பாக சொன்னது என்ன?
தீர்ப்பாணையத்தில் கர்னாடகம் செய்த அடாவடிகள் என்ன?
காவிரி நதி நீர் ஆணையத்தையும் கண்காணிப்புக்குழுவையும் செயலற்ற ஒன்றாக கர்னாடக அரசு எப்படி மாற்றியது?
அரசிதழில் வெளியான தீர்ப்பாணை நடைமுறையில் உள்ளதா?
மேட்டூர் அணை ஒவ்வொரு வருடமும் எப்போது திறக்கப்பட்டது?

இப்படிப்பட்ட ஏராளமான கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவையாறு தொகுதி வேட்பாளர், தோழர் வெ.ஜீவகுமார் எழுதி பாரதி புத்தகாலயம்,  முப்பது ரூபாயில் வெளியிட்டுள்ள “காவிரி : பிரச்சனையின் வேர்கள்” என்ற நூலைப் படியுங்கள்.

“ஒரு நதியை பொறுத்தவரை அது பாயும் நிலப்பரப்பு மட்டும்தான் அந்த நதி சம்பந்தப்பட்டது. மாநில எல்லைக் கோடுகள் நதிகளுக்கு கிடையாது. காவிரி தான் ஓடுவதை, பாய்வதை, பயன் தருவதை இயற்கையாக தீர்மானித்திருந்தது. மாநில எல்லைக் கோடுகள் பின்னர் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டன.

பல நூற்றாண்டுகளுக்குச் சொந்தமாகி வாரி வழங்கிய காவிரி தம்மைச் சுற்றி வரும் சோக செய்திகளால் கெட்டி இறுக்கமாகி விட்டாள். பாரம்பரியமாக காவிரிமடியில் தலை சாய்த்து அமுதுண்டவர்கள் தற்கொலை செய்து மடிகிறார்கள். காவிரி கலங்குகிறாள். காவிரியின் கரைகளில் கண்ணகி நீதி கேட்டு நடந்தது ஒரு காலம். இப்போது காவிரியே நீதி கேட்டு தெருவில் அலைகிறாள்.

இப்போதும் நெல்லி மரத்தடியில் காவிரி ஊற்றாகத்தான் பிறப்பெடுத்து ஓடி வருகிறாள். அதன் தண்ணீர் முன் போல் தேன் கனியாக இனிக்கவில்லை. கண்ணீரால் உப்பு கரிக்கிறது.”

எவ்வளவு அற்புதமான வரிகள்! “மாநில எல்லைக் கோடுகள் நதிகளுக்கு கிடையாது” என்பதை காவிரையை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிற கர்னாடக மாநில அரசியல்வாதிகள் உணர்ந்திட வேண்டும்.

காவிரி பாயும் திருவையாறு தொகுதியில் விவசாயிகளின் பிரச்சினைகளை முழுமையாக உணர்ந்துள்ள இவரன்றி வேறு யார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பொருத்தமாக இருக்க முடியும்?


Wednesday, October 10, 2012

கர்நாடகம் மட்டும் இந்தியா அல்ல; மாண்டியா மட்டும் கர்நாடகம் அல்ல




 


 சிபிஎம் மாநிலச் செயலாளர் ஸ்ரீராமரெட்டி விமர்சனம்

 பெங்களூரு, அக். 9-கர்நாடக மாநிலத்தில் பாசனத் துயரங்களை களைவதற்கு ஆட்சி யாளர்களிடம் அரசியல் உறுதி இல்லை. ஆனால், காவிரி நீர் விவ காரத்தில் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களாக செயல்படுகிறார் கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநிலச் செய லாளர் ஸ்ரீராமரெட்டி சாடினார்.

கோலாரில் திங்களன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் தண்ணீர் பற்றாக் குறை தொடர் பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டு, விவசாயிகளி டையே ஸ்ரீராமரெட்டி பேசினார்.அப்போது அவர் கூறுகையில், தற்போது நிலவிவரும் காவிரி நீர் பங்கீடு பிரச்சனையில் நுட் பமான அணுகுமுறை தேவை. இந்த விஷயத் தை சில விஷமச் சக்திகள் கையில் எடுத்துக்கொண்டு தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக செயல்படுகின்றன எனக் குற்றம் சாட்டினார்.

தமிழகத்திற்கு காவிரி நீரை கர் நாடகம் திறந்துவிட வேண்டும் என் கிற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்யாவிட்டால் தீவிரவாதத்தில் ஈடுபடுவோம் என சில தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் கள். இந்த அறிவிப்பை வெளியிட்ட தலைவர்கள் நாட்டின் உயர் அரசி யலமைப்பு சட்ட நிர்வாகத்திற்கு மிரட்டல் விடுகிறோம் என்பதை உணர வேண்டும் என ஸ்ரீராம ரெட்டி கூறினார்.மாண்டியா மாவட்டம் சிக்பல்ல பூர் மற்றும் கோலார் ஆகிய மாவட் டங்களைக் காட் டிலும் மிகச்சிறந்த பாசன வசதி பெற்று உள்ளது. 

ஆனால் இதர மாவட்டங் களில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. உணர்ச்சிமயமான விஷயமாக காவி ரிப்பிரச்சனை உள்ள நிலையில் சில அரசியல் தலை வர்கள் அதனுள் புகுந்துவிட்டனர். ஹைதராபாத்-கர் நாடகம், மத்திய கர்நாடகம் ஆகிய பகுதிகளில் நிலவுகிற மக்கள் பிரச் சனையைப் பற்றி யாரும் பேசவில்லை என்றும் ஸ்ரீராமரெட்டி கூறினார்.

தமிழகத்திற்கு தண்ணீர் பங்கீடு செய்வதில் நியாயமான நிலைப்பாடு கள் உள்ளன. தமிழக விவசாயிகளும் இந்தியர்கள்தான். கர்நாடகம் மட்டும் இந்தியா அல்ல. மாண்டியா மட்டும் கர்நாடகம் அல்ல. கர்நாட கத்தில் தண்ணீர் பிரச்சனை கடுமை யாக உள்ளதாக கூறப்படும் மாண் டியாவில் காவிரி நீரை அம்மாநிலத் தின் 45 சதவீத மக்கள்தான் சார்ந்துள் ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு ஒவ்வொரு முறை யும் தண்ணீர் திறந்துவிடும் போது எதிர்ப்பு காட்டுவதைக் காட்டி லும், மாநில அரசு அபரிமிதமான தண் ணீர் இருக்கும் போது சேமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத் தினார்.

நன்றி - தீக்கதிர் நாளிதழ்