Showing posts with label அமலாக்கத்துறை. Show all posts
Showing posts with label அமலாக்கத்துறை. Show all posts

Friday, February 27, 2026

மோடிஷா அரசியல் செய்ய முடியாதே ஜட்ஜய்யா?

 


ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்,  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி உயர் நீதிமன்றம் ஊழல் வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுவித்துள்ளது. 

மோடி, அமித்ஷாவின் ஏவல் நாய்களாக செயல்பட்டு வரும் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு ஆகியவைகளுக்கு கிடைத்த சவுக்கடி இத்தீர்ப்பு.

தென் பகுதி மக்களை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கு வேறு குட்டு வைத்துள்ளது. 


சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு போன்றவை இனியாவது தங்களது சுயேட்சைத் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களின் அடிமைகளாய் இருப்பதை நிறுத்த வேண்டும்.

அப்படி செயல்பட்டால் மட்டுமே மோடி-அமித்ஷா வகையறாக்களின் வாஷிங் மிஷின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


Saturday, January 10, 2026

அடாவடியில் மம்தாவின் முன்னோடி விஜயபாஸ்கர்

 


மோடியின் அமலாக்கப் பிரிவு நேற்று முன் தினம் தேர்தல் சகுனி பிரஷாந்த் கிஷோரின் ஐ.பேக் நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகத்திலும் பிரஷாந்த் கிஷோரின் கூட்டாளி பிரதீக் ஜெயின் வீட்டிலும் ரெய்ட் நடத்தியுள்ளது. மம்தாவிற்கு இப்போது வழிகாட்டுவது பிரதீக் ஜெயின் தான். 

ரெய்ட் நடத்திய இரண்டு இடங்களுக்கும் தன் குண்டர்களோடு சென்ற மம்தா பானர்ஜி பல முக்கியமான ஆவணங்களை தூக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டார்.

அந்த ஆவணங்களில் என்ன ரகசியம் இருந்தது என்பது அவருக்கே வெளிச்சம்.

அமலாக்கப்பிரிவை ஏவுவது என்பது மோடியின் அராஜகம். உள்ளே புகுந்த ஆவணங்களை தூக்கி வருவது மம்தாவின் அராஜகம்.

இது போல முன்பு  எப்போதாவது நடந்துள்ளதா?

ஆம்.

அதுதான் தமிழ்நாட்டின் பெருமை.

ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவையில் கலைஞரின் உடல் குறைபாட்டை நக்கலடித்து  அமைச்சர் பதவியை பெற்றவர் விஜயபாஸ்கர். எடப்பாடி காலத்திலும் அவர் சுகாதாரத்துறை அமைச்சர்.

அவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட் நடத்திய போது அவரது செயலாளர்களில் ஒருவர், பல முக்கியமான ஆவணங்களை தூக்கி வந்து வெளியே வீச, காத்திருந்த தோண்டர்கள் அதனை தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்கள்.

ஆக  அடாவடி செய்வதில் விஜயபாஸ்கர் முன்னோடியாக இருந்துள்ளார்.


Sunday, March 17, 2024

யானையை பிச்சையெடுக்க் வைப்பது போல ED

 


வலிமையான, கம்பீரமான, பிரம்மாண்ட உருவம் படைத்த யானைகளை எப்படி பிச்சையெடுக்க வைத்தார்களோ, 


அது போல, சுயேட்சையாக, நேர்மையாக செயல்பட வேண்டிய அமலாக்கப் பிரிவை தேர்தல் பத்திரங்களுக்காக பிச்சைக்காரர்கள் போல ரெய்ட் அனுப்பிய பெரிய பிச்சைக்காரர்கள் பாஜக ஆட்சியாளர்கள். 

ஏன் மோடி என்னென்னமோ கெட் அப் போட்டீங்க, கொள்ளைக்காரன் மாதிரியும் பிச்சைக்காரன் மாதிரியும் ஏன் கெட் அப் போடலை? அதுதானே உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருந்திருக்கும்!


Wednesday, January 3, 2024

அலோ, அமலாக்கப் பிரிவா?

 


நீதி, நேர்மை, நாணயம் ஆகிவற்றை நிலை நாட்டுவதற்காக அவதாரம் எடுத்துள்ள அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த உத்தம புத்திரர்களே, இங்கே வாருங்கள்.

 


ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரிடமும் விசாரணை நடத்தி இருவரையுமே தூக்கி உள்ளே போடுங்கள்.

ஆனால் பாவம், நீங்கள் என்ன செய்ய முடியும்!

மதுரையில் ஒரு அமலாக்கப்பிரிவு அதிகாரி லஞ்சம் வாங்கி கம்பி எண்ணுகிறார். மாநிலத்தின் தலைமையில் உள்ள ஆட்களோ பாஜக கயவர்களின் நில ஆக்கிரமிப்புக்கு துணை போய் அதிகார துஷ்பிரயோகம் செய்து அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


Friday, December 1, 2023

இதுதான் அமலாக்கத்துறை லட்சணம்

 


அமலாக்கத்துறை என்பது டிமோவின் ஏவல் நாய் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பாஸ் யாரை கைகாட்டுகிறாரோ அவர்களை கடித்துக் குதறும் விசுவாசமிக்க நாய் என்பதும் தெரியும்.

 




முதலாளி சொல்வதை மட்டும் கேட்டால் தான் எப்படி செழிப்பாக இருப்பது என்ற எண்ணத்தில் அலைகிற திருட்டு நாயும் கூட என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

இந்த லட்சணத்துல இந்த ஏவல் நாய்கள்தான் ஊழலை அழிக்கும் கருவிகளாம் . .