Showing posts with label மனித நேயம். Show all posts
Showing posts with label மனித நேயம். Show all posts

Wednesday, August 25, 2021

வென்றது வெள்ளி, உள்ளமோ தங்கம்



 

இணையத்திலிருந்து சுட்ட ஒரு நிறைவான, நெகிழ்ச்சியான செய்தி.

 

குழந்தை ஒன்றின் அறுவை சிகிச்சைக்காக  ஒலிம்பிக்  இல் கிடைத்த வெள்ளி  பதக்கத்தை  ஏலம் விட்ட போலந்து நாட்டு விராங்கனை 

 

 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில், பெண்களுக்கான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மரியா தான் இன்று விளையாட்டு உலகின் சென்சேஷன். தன்னுடைய செயலால் வானளவு உயர்ந்து நிற்கிறார்.

 

போலந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்து எட்டு மாதமே ஆன மிலோசெக் மலிசா என்ற ஆண் குழந்தைக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கு தேவையான தொகை எவ்வளவு தெரியுமா? 3,85,088 டாலர். அதாவது, இந்திய ரூபாய்க்கு கிட்டத்தட்ட 3 கோடி. இந்த தகவலை பேஸ்புக் மூலம் அறிந்த மரியா, அந்த குழந்தைக்கு எப்படியாவது உதவி புரிய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு, ஒலிம்பிக் போட்டியில் தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார்.

 

எனினும், 3 கோடி ரூபாயில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை குழந்தையின் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் திரட்டி விட்டனர். மீதமுள்ள தொகையை தன் பதக்கத்தை ஏலம் விடுவதன் மூலம் திரட்ட முடிவு செய்தார். இதுகுறித்து அவர், "பதக்கத்தின் உண்மையான மதிப்பு என்றும் என் இதயத்தில் இருக்கும். பதக்கம் என்பது வெறும் பொருள் மட்டுமே. ஆனால், பலருக்கு அது மிகவும் மதிப்பு வாய்ந்தது. என்னுடைய வீட்டில் இருந்து தூசி அடைவதை விட இந்த வெள்ளிப் பதக்கம் ஒரு உயிரை காப்பற்றட்டும். அதனாலேயே நோய்வாய்பட்ட குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இதை ஏலத்தில் விட முடிவு செய்தேன்" என்று தன் பதக்கத்தை ஏலத்தை விடுத்தார்.

 

இந்நிலையில், போலந்து நாட்டைச் சேர்ந்த Zabka எனும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 1,25,000 அமெரிக்க டாலர் செலுத்தி அவரது மெடலை ஏலத்தில் வென்றது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார் மரியா. குழந்தையின் பெற்றோரிடம் அந்த பணத்தையும் அவர் ஒப்படைத்தார். இதில் வியக்கத்தக்க மற்றொரு தகவல் என்னவெனில், ஏலத்தில் வென்ற அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம் வெள்ளிப் பதக்கத்தை மீண்டும் மரியாவிடமே கொடுத்துவிட்டது. இதுகுறித்து அந்த நிறுவனம், "மரியாவின் மனிதநேயத்தை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். டோக்கியோவில் வென்ற அவரது வெள்ளிப் பதக்கம் என்றும் அவரிடமே இருக்கட்டும்" என்று கூறி நெகிழ வைத்திருக்கிறது.


Sunday, July 19, 2020

சங்கிகளின் மனசாட்சிக்கு (இருந்தால்?)

எங்கள் மதுரைக் கோட்டத் தோழர் பகத்சிங் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

சங்கிகளுக்கு மனசாட்சி இருந்தால் அவர்கள் பரப்பும் நச்சு நியாயமா என்று ஒரு நிமிடம் சிந்திக்கட்டும். 


தஞ்சை மாவட்ட பாஜக தலைவர் இளங்கோவின் மாமா திரு கருணாநிதி கொரானோ தொற்றினால் மரணமடைந்தார்.

 குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று அவரது சடலத்தைப் பட்டுக்கோட்டை பண்ணவயலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இந்து முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.

 கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் மதங்கள் வெல்லாது, மனிதம்தான் வெல்லும்

Tuesday, November 12, 2019

வார்த்தைகள் அவசியமில்லை . . .

தோழர் பிணராயி விஜயன் எனும் மகத்தான தலைவர் பற்றி புகழ வார்த்தைகள் அவசியமில்லை. கீழே உள்ள புகைப்படங்கள் போதும்...




மனித நேயத்தின் அற்புதமான வெளிப்பாடு இது . . .

இதனைக் கூட மதிமாறன் போன்ற தோசை பார்ட்டிகள் நக்கலடிக்கிறார்கள் என்றால்

அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

பொறாமை உச்சத்திற்கு போய் விட்டது

அல்லது

பைத்தியம் தலைக்கேறி விட்டது. 

Thursday, January 24, 2019

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உருக்கமான நினைவலைகள்.




ஒரிஸாவில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்று முக நூலில் பதிவிட்டிருந்ததை ஒரு தோழர் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்தியாவின் கறுப்பு தினமான கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் படுகொலை பற்றிய அந்த பதிவு உள்ளத்தை உருக்குவதாக இருந்திருந்தது.

திரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்லி அவர் பதிவை தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொண்டுள்ளேன்.










இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்து விட்டன.  கண் சிமிட்டும் நேரம் போல கடந்து விட்டன.

1999 ம் வருடம் இதே நாளில்தான் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் பிலிப் (பத்து வயது), டிமோத்தி (ஆறு வயது) ஆகியோர் கந்துஜார் மாவட்டத்தில் மனோஹர்பூர் என்ற கிராமத்தில் தங்களின் ஸ்டேஷன் வேகன் வேனில் தூங்கிக் கொண்டிருக்கையில் கொடூரமான முறையில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

அந்த சமயத்தில் நான் அருகிலிருந்த மயூர்பஞ்ச் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாகவும் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தலைநகரான பரிபாடாவில்தான் கிரஹாம் ஸ்டெய்ன்ஸூம் அவர் குடும்பத்தினரும் வசித்து வந்ததால் அவரை நான் நன்கு அறிவேன்.

கிரஹாம், அவரது மனைவி கிளாடிஸ், மகள் எஸ்தர், இரண்டு மகன்கள் பிலிப்  மற்றும் டிமோத்தி ஆகியோர் அந்த கோரமான கொலை நடப்பதற்கு முப்பது மணி நேரத்திற்கு முன்பாகத்தான் எங்கள் வீட்டிற்கு வந்து சில மணி நேரங்களை எங்களோடு கழித்து விட்டுச் சென்றனர் என்பதை வேதனையோடு நினைத்துப் பார்க்கிறேன்.

அவர் எப்படி தன் தாய்நாடான ஆஸ்திரேலியாவிலிருந்து மயூர்பஞ்ச் வந்து சேர்ந்தார் என்பதை அவரோடு விவாதித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரால் ஒடியா மற்றும் சந்தாலி மொழிகளில் சரளமாக பேச முடியும்.

கிரஹாம் ஒரு உன்னதமான ஆத்மா. தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதிலும் அவர்களுக்கான மறு வாழ்விலும் அவர் தன்னலமின்றி பாடுபட்டு வந்தார். அவரது அர்ப்பணிப்பு மிக்க பணியை பல முறை அருகிலிருந்து பார்த்து “இந்த மனிதனால்  எவ்வாறு இப்படி இருக்க முடிகிறது” என்று வியந்து போயிருக்கிறேன்.

சம்பவம் பற்றி அறிந்ததும் நானும் என்னுடைய காவல்துறை கண்காணிப்பாளரும் உடனே அங்கே விரைந்தோம். மாவட்டத்தின் இன்னொரு பக்கத்திலிருந்த இருந்த அப்பகுதிக்குச் செல்ல நான்கு மணி நேர பயணமானது.

நான் சொல்லவொண்ணா துயரத்தில் மூழ்கிப் போனேன். தற்காலிக சவப்பெட்டிகளை தயார் செய்தோம். கட்டாக்கில் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் சடலங்கள் பரிபாடாவிற்கு கொண்டு வரப்பட்டன. சவ அடக்கம் மற்றும் பாதுகாப்புப் பணிகளை செய்து கொண்டிருந்தோம்.

சவ அடக்கம் செய்யும் இடத்தை விரல்களையும் பாதங்களையும் இழந்த சில தொழு நோயாளிகள் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்ததை நான் பார்த்தேன்.. அவர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர்.

நானும் மௌனமாக கதறினேன். ஆனால் வடிந்து கொண்டிருக்கும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. தன்னுடைய கணவனையும்  இரு மகன்களையும் இழந்த கிளாடிஸ் என்னையும் என் மனைவியையும் தேற்றினார் என்பதை என்னால் மறக்க முடியாது.

சில வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா திரும்புவதற்கு முன்பாக மயூர்பஞ்ச் தொழு நோயாளிகளில் இல்லத்தில் ஒரு சிறிய கட்டிடத்தை திறந்து வைக்க கிளாடிஸ் என்னை அழைத்திருந்தார். அதன் பின்பு நான் டெல்லிக்கு சென்று விட்டேன்.

ஒடிசா மாநிலத்தின் தொழுநோயாளிகள் மத்தியில் ஆற்றிய பணிக்காக இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய விருதான பத்மஸ்ரீ விருது 2005 ல் கிளாடிஸிற்கு வழங்கப்பட்டது. சமூக நீதிக்காக வழங்கப்படும் அன்னை தெரஸா நினைவு விருதை அவர் 2016 ம் ஆண்டு பெற்றார்.

கிளாடிஸ் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவரது மகள் எஸ்தருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. எப்போதெல்லாம் கிளாடிஸ் இந்தியா வருகிறாரோ அப்போதெல்லாம் வாய்ப்பிருந்தால் சந்திப்போம். 2010 ல்  என் உடல் நிலை சரியில்லாத தருணத்தில் என்னை நலன் விசாரிக்க சென்னை வந்திருந்தார்.

கடந்தாண்டு நான் ஆஸ்திரேலியா சென்ற போது ஒரு நாள் இடைவெளியில் அவரைப் பார்க்கத் தவறி விட்டேன்.

கிரஹாம் படுகொலைச் சம்பவத்தை என்னால் மறக்க இயலாது. என் ஆழ் மனதில் ஏற்பட்ட நிரந்தர வடு இது. எந்நாளும் அப்படியே நிலைத்திருக்கும்.

கிரஹாம், பிலிப், டிமோத்தி அமைதியாய் துயிலிலிருக்கட்டும்.

கிளாடிஸ், எஸ்தர் மற்றும் அவர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.

மனிதமும் கருணையும் அன்பும் வாழிய, வாழியவே . . .

ஆர்.பாலகிருஷ்ணன்