Showing posts with label சட்டசபை. Show all posts
Showing posts with label சட்டசபை. Show all posts

Sunday, January 9, 2022

நீங்களே நீக்கினீங்களா மாலன்?

 


சட்டமன்ற கூட்டத் தொடங்கிய நாளன்று விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் ரவிக்குமார், ஆளுனரின் அணுகுமுறையைக் கண்டித்து ஒரு பதிவெழுதியிருந்தார்.


இந்த பதிவைக் கண்டு வெகுண்ட மூமூமூமூத்த்த்த்த்த்த்த மாலன், ஆளுனருக்கு ஜால்ரா அடித்து, ஆளுனர் உரையை உங்கள் கட்சி(இதில் திமுக என்று சொல்லி அவரது குதர்க்க புத்தியை வேறு காண்பித்தார். ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் நின்றார் என்பதை ஞாபகப் படுத்துகிறாராம்)  புறக்கணிக்குமா? என்று கேள்வி வேறு எழுப்பினார்.

மாலனை கேள்வி கேட்ட ஒருவருக்கு இதுதான் அவரது பிழைப்பு என்று நான் பதில் சொல்லி இருந்தேன்.



அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள், ஆளுனர் உரையை புறக்கணித்து வெளி நடப்பு செய்து வந்ததும் அந்த புகைப்படத்தை (முகப்பில் உள்ள படம்தான்) அதே பதிவில் மாலனின் பின்னூட்டத்திலேயே போட நினைத்தேன். 

ஆனால் அந்த பின்னூட்டம்  அங்கே இல்லை. 

வெட்கப்பட்டு நீங்களே நீக்கிட்டீங்களா மாலன்?

உங்களுக்கு வெ.மா.ரோ.சூ.சொ எல்லாம் இருக்கிறதா என்ன?

Saturday, June 16, 2018

சபாநாயகராக இருப்பினும் அவரும் . . .



மாண்புமிகு என்ற வார்த்தைகள் எப்போதோ அர்த்தம் இழந்து விட்டது. மரபுகள் என்று சொல்லப்படுபவையெல்லாம் காணாமல் போய் விட்டது.

தமிழக சட்ட மன்றத்தைத்தான் சொல்கிறேன்.

"இருட்டு அறையில் . . ." என்று ஒரு படம் வந்ததாமே. மிகவும் கேவலமான படம் என்று பலரும் விமர்சித்திருந்தார்கள்.

தமிழக சட்டமன்றத்தைப் பார்த்துத்தான் இரட்டை அர்த்தமும் ஆபாசக் காட்சிகளையும் எடுத்தோம் என்று நாளை எந்த இயக்குனராவது சொல்வாரோ என்று அச்சமாக உள்ளது.

ஒரு பெண் உறுப்பினர் இழிவு செய்யப்படுகிறார். இரட்டை அர்த்தத்தோடும் ஆபாச சைகையோடும் அதைச் செய்பவர் சட்டமன்றத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டிய சபாநாயகர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதைப் பார்த்து சிரிக்கிறார்கள்.  சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்த கட்சியின் அடிமைகள் அல்லவா? 

எதிர்க்கட்சி உறுப்பினர்களோ சிறிய அளவில் கூட கண்டிக்காமல் கௌரவ சபையில் வீற்றிருந்த பெரியோர் போல மௌனம் காக்கிறார்கள்.

சபாநாயகராக இருப்பினும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று யாராக இருந்தாலும்

தாங்கள் அடிப்படையில் 

ஆண்கள்,
ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள்

என்பதை நிரூபித்துள்ளனர்.

ம்ம்ம்ம்.

ஒரே ஒரு இடதுசாரி உறுப்பினர் உள்ளே இருந்திருந்தால் இப்படி ஒரு அவலம் நிகழ்ந்திருக்குமா? 

அன்று திரௌபதியின் அவலக்குரல் கேட்டு ஆடை கொடுத்த கண்ணன் கூட இடதுசாரி உறுப்பினர்கள் இல்லாத அவைக்கு வர அஞ்சிடுவான் அல்லவா?


Friday, May 18, 2018

நாளை 4 மணிக்கு என்ன நடக்கும்?


உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாளை நான்கு மணிக்கு கர்னாடக சட்டப்பேரவையில் யெடீயூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாக வேண்டும்.

நாளை நான்கு மணிக்கு என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு?

பல்லாயிரம் கோடி முதலீட்டில் நடந்து கொண்டிருக்கிற குதிரை பேரம் ஒரு வேளை வெற்றி பெற்றிருந்தால் எந்த சிக்கலும் இல்லாமல் யெடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறலாம்.

ஒரு வேளை பதினைந்து நாள் அவகாசம் குறைக்கப்பட்டதால் குதிரை பேர முயற்சிகள் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் அப்போது என்னவெல்லாம் நடக்கலாம்?

குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் யெட்டி வெற்றி பெற்றதாகக் கூட தற்காலிக சபாநாயகர் அறிவிக்கலாம். அதற்குத் தகுந்தாற்போலத்தான் ஒரு மோசடிப் பேர்வழியை தற்காலிக சபாநாயகர் அறிவித்துள்ளார் என்பது கவனத்திற்குரியது.

காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை சட்டப் பேரவையிலிருந்து அடித்து துரத்த ரௌடிகளை சட்டமன்றத்துக்கு உள்ளே பாஜக அனுப்பலாம்.

சட்டப்பேரவைக்கு உள்ளேயே ஏதாவது பிரச்சினையை உருவாக்கி  காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றி விட்டு உள்ளே உள்ள பாஜக உறுப்பினர்களை மட்டும் வாக்களிக்க வைத்து யெட்டி ஜெயித்ததாக அறிவிக்கலாம்.

நீதிபதி குமாரசாமி பாணியில் தற்காலிக சபாநாயகர் தப்புக் கணக்கு கூட அறிவிக்கலாம்.

ஒரு வேளை இந்திய அரசியல் வானில் மிகப் பெரிய அதிசயம் நிகழ்ந்து நேர்மையோடு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் யெட்டி தோற்றுப் போய் ராஜினாமா செய்யலாம். 

காத்திருப்போம்.

நாளை நல்லதே நடக்கும் என்று.




Friday, February 17, 2017

கூவாத்தூர் சுகபோகம் இன்றோடு????????

கீழேயுள்ள படங்கள் எல்லாம் கூவாத்தூர் கோல்டன் பே  ரிசார்ட்டின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

தமிழகத்தின் மானமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த சுகபோக வசதிகள் இன்றோடு  முடிந்து விடும் என்று நினைக்கிறேன். நாளைக்கு சட்டமன்றத்திற்கு கூட்டிப்போய் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டால் ஆடுகளை பட்டியிலிருந்து அவிழ்த்து விட்டு விடுவார்கள் அல்லவா?

பாவம் அவர்களாலும்தான் எத்தனை நாள் கட்டிப்போட்டு மேய்க்க முடியும்?

பின் குறிப்பு : ஏராளமானவர்கள் அந்த இணையதளத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள் போல. சர்வர் பிஸி, பேண்ட்வித் வரம்பைக் கடந்து விட்டது என்று சொல்லி ஒரு கட்டத்தில் காணாமல் போய் விட்டது.


















Tuesday, March 31, 2015

சட்டசபையில வேற என்னய்யா பேசறது?

 Governor K. Rosaiah addresses the Tamil Nadu Assembly on Friday. Photo: V. Ganesan

நேற்றைய தினம் தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற காட்சி

எதிர்க்கட்சி : திருவாரூரில் நடைபெற்ற கட்டிட விபத்து

சபாநாயகர் : அனுமதி மறுக்கப்படுகிறது

எதிர்க்கட்சி : திருநெல்வேலியில் தற்கொலை செய்து கொண்ட பொறியாளர்

சபாநாயகர் : அனுமதி மறுக்கப்படுகிறது

எதிர்க்கட்சி : வேலூர் மாவட்ட ஆட்சியரால் விபத்து

சபாநாயகர் : அனுமதி மறுக்கப்படுகிறது

எந்த ஒரு பிரச்சினை பற்றி பேசுவதற்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றால் சட்டசபையில் வேறு என்னதான் பேசுவது?

புரட்சித் தலைவி அம்மா வாழ்க என்று எதிர்க்கட்சிகளும் கோஷம் போட வேண்டுமா?
 

Wednesday, March 21, 2012

அசிங்கமாக மாட்டிக் கொள்ள பா.ஜ.க வுக்கு போட்டி யாரேனும் உண்டா?




கலாச்சாரக் காவலர்கள், இந்தியப் பண்பாட்டைப் 
போற்றுபவர்கள்,  பிறன் மனை நோக்காமை  
பேராண்மை  என்று வாழ்ந்த ராம பிரானுக்கு
கோயில் கட்டுவதையே கொள்கையாகக் 
கொண்டவர்கள், மாறுபட்ட  அரசியல் கட்சி,
 உயரிய, உன்னதக் கட்சி  என்றெல்லாம் 
பாரதீய ஜனதா  கட்சி, தன்னைப் பற்றி ரீல் ரீலாக   
கதை விட்டுக் கொள்ளும்.

ஆனால் பாவம், அந்தக் கட்சிக் காரர்கள்தான் 
அடிக்கடி அசிங்கமாக மாட்டிக் கொள்கின்றனர்.

கர்னாடக சட்டசபையில் மூன்று அமைச்சர்கள்
ஆபாசப்படம்  பார்த்து மாட்டிக் கொண்டனர்.
அந்தக் களங்கம் மறையும் முன்னர் இப்போது
குஜராத் மாநிலத்தில்  இரண்டு சட்டப்பேரவை
உறுப்பினர்கள், ஆபாசப் படம் பார்த்துள்ளனர்.
வழக்கம் போல  பத்திரிக்கையாளர்கள் 
கையும் களவுமாக பிடித்து விட்டனர்.

பாஜக உறுப்பினர்கள்  சட்டசபைக்கு  எதற்குப்
போகின்றனர் ? மக்கள் பிரச்சினைகளை 
விவாதிக்கவா? இல்லை ஆபாசப் படம்
பார்க்கவா? 

இந்த எழவையெல்லாம் வீட்டிலே பார்த்துத்
தொலைக்கக் கூடாதா? சட்டசபையில்தான்
பார்க்கனுமா என்று நிதின் கட்காரி தனது
கட்சிக்காரர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பப்
போவதாக தகவல்,

எனக்கு இன்னொரு யோசனை.

பாஜக ஆளும் மாநிலங்களில் சட்ட சபை
நடக்கும் போது, கேள்வி நேரம், பூஜ்ஜிய 
நேரம் என்பது போல ஆபாசப் பட நேரம்
என்று வைத்து தினமும் ஒரு மணி நேரம்
பிரம்மாண்டத் திரையில் பிட் படம் போட்டுக்
காட்டி விட்டால் அது சட்டபூர்வமாகி விடும்.
பத்திரிக்கையாளர்களின் புலனாய்வுக்கு
எல்லாம் வேலையே இருக்காது.

கட்காரி ஜீ, யோசனை பகுத் அச்சாவா?