Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts
Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts

Saturday, April 18, 2026

76 லட்ச ரூபாய் தாமோதர்தாஸ் சொத்தா மோடி?

 


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய அரசு 76 லட்ச ரூபாய் அளவில் விளம்பரங்கள் கொடுத்துள்ளது என்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.


ஏன் மிஸ்டர் மோடி,

ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு.

இரண்டு முறை தடை செய்யப்பட்ட அமைப்பு.

இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு நிதி பெறும் அமைப்பு.

பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் குரு பீடமாக ஆர்.எஸ்.எஸ் இருக்கலாம். ஆனால் அதற்காக அரசு பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்க வேண்டிய அவசியம் என்ன?

தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக முதலாளிகளிடமிருந்து மிரட்டி கொள்ளையடித்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!

பி.எம். கேர்ஸ் என்ற பெயரில் மக்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏமாற்றி சேர்த்து வைத்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!

ஒரு வேளை நீங்கள் கொடுத்த அந்த 76 லட்ச ரூபாய், உங்கள் அப்பா தாமோதர் தாஸ் சம்பாதித்த சொத்துக்களிலிருந்து கொடுத்ததா?

Saturday, April 11, 2026

எரிந்த ரூபாய் நோட்டுக்களும் புனிதமாகும் முயற்சியும்

 


டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த தீ விபத்தின் போது சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. 

அவரை இடை நீக்கம் செய்வதற்குப் பதிலாக அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.

உச்ச நீதிமன்றம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது. அவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையை நாடாளுமன்றம் தொடங்கியது. இதில் ஏதோ சிக்கல் வர துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தாங்கர் பதவி விலகினார். அந்த மர்மம் என்ன என்பதை இன்று வரை தெரியவில்லை.

இப்போது தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தன் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் விவரித்து ஜனாதிபதிக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் காரணங்களை தெரிவிக்கவில்லை என்று அக்கடிதத்தில் எழுதியுள்ளாராம்.

இது அவர் தன்னை ஒரு புனிதனாக காண்பித்துக் கொள்ளும் முயற்சி.  எந்த கேள்விக்கும் விசாரணைக்கும் உட்படாமல் தப்பித்துக் கொள்வதற்கான உத்தி.

ஜனாதிபதி இந்த ராஜினாமாவை நிராகரிக்க வேண்டும். ஏற்றுக் கொண்டால் யஷ்வந்த் வர்மாவின் புரவலர்கள் மோடி வகையறாக்கள், மோகன் பகவத் கூட்டத்தினர் என்பது தெளிவாகும்.

Wednesday, February 11, 2026

தின மலர் மீது கேஸ் போடுமா அனாமதேய சங்கி?

 


இந்துக்கள் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் பேசியதை கண்டித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

நேற்று இரவு அதற்கு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. 

Any one can file case on this post, because you are posting some thing not verified and personal. I will forward this to bjp it cell for handling your fake messages.

மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு பின்னூட்டம். 

அந்த அனாமதேயம் பாஜக ஐ.டி விங்கிற்கு அனுப்பிய கடிதத்தை எனக்கு பின்னூட்டமாக போட்டிருந்தது. அந்த கடிதத்திலும் பெயர் இல்லை, மொட்டைக் கடிதம் போல.

அதன் பின்பு ஒரு பதில் எழுதினேன்.

சர்சங்சாலக் பற்றிய பதிவு தொடர்பாக மிரட்டியுள்ள சங்கிக்கு ஒரு தகவல். அந்த தகவல் தவறென்றால் அதற்கு பொறுப்பு சங்கிப் பத்திரிக்கையான தின மலர் தான். அதிகம் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பல சங்கிகள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். அதனால் இது சங்கிகளின் நிலைப்பாடுதான். எனக்கு எந்த பயமும் இல்லை. அதனால்தான் வெளிப்படையாக பதிவிட்டுள்ளேன். என்னை மிரட்டிய சங்கிதான் அனாமதேயமாக ஒளிந்து கொண்டு விட்டது.

அதன் பின்பு அந்த சங்கியிடமிருந்து எந்த பின்னூட்டமும் இதுவரை இல்லை. 

பாவம் அந்த சங்கி தன் அமைப்பைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள் போல. 

அது அனுப்பிய கடிதத்தையும் அதற்கான எதிர்வினையையும் நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.

மோகன் பகவத் சொன்னதாக நான் எழுதியிருந்தது பொய்ச் செய்தியா?

நான் அதனை எடுத்ததே தின மலரின் ட்விட்டர் (X) பக்கத்திலிருந்துதான்.

அந்த பக்கத்திற்கெல்லாம் நானாக செல்வதில்லை. ட்விட்டரே காண்பிப்பதுதான்.

ட்விட்டரில் மட்டும் தின மலர் வெளியிடவில்லை. தினமலர் தன் முக நூல் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருந்தது.



இத்தோடு நிற்கவில்லை.

தின மலரின் இணைய தளத்திலும் இருக்கிறது.


ஆகவே இந்த செய்தி பொய்ச்செய்தி என்றால் அந்த சங்கி தினமலர் மீதுதான் வழக்கு போட வேண்டும். 

நான் சொன்ன பக்கங்களில் தேடிப்பார்த்து வழக்கு போடட்டும்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, இஸ்லாமியர்களை குறி வைத்து சுட்ட காணொளியை அஸ்ஸாம் மாநில பாஜக நீக்கியது போல தின மலரும் நீக்கியிருந்தால் . . .

அந்த அனாமதேயேம் தன் உண்மையான அடையாளத்துடன் என்னை அணுகினால் நான் வேண்டுமானால் நான் எடுத்து வைத்துள்ள ஸ்க்ரீன் ஷாட்டுக்களை அனுப்பி வைக்கிறேன்.

சங்கிப் பத்திரிக்கை தின மலர் மீது வழக்கு தொடுக்கும் தைரியம் அந்த அனாமதேய சங்கிக்கு உண்டா அல்லது அது முறையிட்டுள்ள பாஜக ஐ.டி விங்கிற்குத்தான் உண்டா?

பைத்தியக்காரப் பசங்க!!!!

Tuesday, February 10, 2026

மூவரைப் பெற்றால் சர்சங்சாலக் சோறு போடுவாரா?

 


இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத, அடிப்படைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் உதிர்த்த முத்து கீழே உள்ளது.


அவர் சொல்லும் முதல் விஷயம் விஷம். வழக்கமான விஷம். மத வெறியை தூண்டுவதை மட்டுமே நூறாண்டுகளாக செய்து கொண்டிருக்கும் கேவலமான அமைப்பு இது.

கடந்த பல பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் சிறுபான்மையினரின் சதவிகிதம் அதிகரிக்கவே இல்லை என்பதுதான். அது மட்டுமல்ல, கடைசி இரண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புக்கள் இஸ்லாமியர்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இந்துக்களை விட குறைவாகவே இருந்திருக்கிறது. 

2021 ல் எடுக்கப்பட வேண்டிய மக்கட்தொகை கணக்கெடுப்பை இதுவரை துவக்காமல் இருப்பது கூட ஆர்.எஸ்.எஸ் அளந்து கொண்டிருக்கும் கட்டுக்கதை அவர்கள் ஆட்சியிலேயே அம்பலமாகி விடும் என்பதுதான்.

நிற்க

மூன்று பேரை பெற்றெடுக்க வேண்டும் என்று சொல்கிற மோகன் பகவத் திருமணமாகாதவர். அவருக்கு குடும்பத்தை நடத்துவதில் உள்ள சிரமங்கள் தெரியாது. வெங்காயம் சாப்பிடாதாதால் எனக்கு வெங்காய விலை உயர்வு பற்றி தெரியாது என்று சொன்ன நிர்மலா அம்மையார் கேடகிரிதான் இவர்.

இவருக்கு குழந்தைகளை வளர்ப்பதற்காக ஆகும் உணவுச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு, திருமணச் செலவு ஆகியவற்றைப் பற்றி தெரியுமா?

வேலையின்மை பிரச்சினையைப் பற்றி தெரியுமா?

குடும்ப பாரம் சுமக்காத இவருக்கு குடும்பத்தை பெருக்கச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

மூன்று குழந்தைகளுக்கான செலவுகளை அரசு கொடுக்குமா? இது என்ன பழைய சோவியத் யூனியன் அரசா?

கார்ப்பரேட்டுகளிடம் லஞ்சம் வாங்கி கொழுத்துப் போயிருக்கும் பாஜக அளிக்குமா?

முடியாது அல்லவா?

SO SHUT UP MR MOHAN BHAGAWATH

Monday, March 31, 2025

மோடியை துரத்துதா RSS?

 


75 வயதை நிறைவு செய்வதால் "உன் சேவை, இனி தேவை இல்லை" என்று ஆர்.எஸ்.எஸ் முடிவெடுத்து மோடியிடம் சொல்லி விட்டதாக தகவல் உலா வருகிறது


மோடி செல்வது நல்லது. புதிதாக வரப் போகிற யார் மீதும்  எந்த பிரமையும் இல்லை.

ஏனென்றால் எரிகிற எல்லா சங்கி கொள்ளிகளும் கெட்ட கொள்ளிகள்தான். 

Saturday, March 15, 2025

மோடி இந்து கிடையாதா மோகன் பகவந்த்?

 


மோகன் பகவந்த் உதிர்த்த முத்து கீழே . . .


 இங்கே பாருங்கள் மோகன் பகவந்த் – மோடி பாரம்பரிய ஆடையை அணியாமல் ட்ராக் சூட் அணிந்து கங்கையில் குளிக்கிறார். பாரம்பரிய ஆடையான கோவணம் கட்டாமல் பேண்ட் போட்டிருந்த  ஒரு சாமியாரை மற்ற சாமியார்கள் அடித்து கலாச்சாரத்தை பாதுகாத்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் மோடி அணிந்திருப்பது பாரம்பரிய உடை அல்ல.

 ஆங்கிலம் தெரியாவிட்டாலும் கூட வெள்ளைக்காரன், உங்கள் மொழியில் பாவாடை கண்டுபிடித்த டெலி ப்ராம்ப்டர் வழியாக தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுகிறார்.

 அவர் விரும்பி உண்ணும் உணவு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காளான். இதுவும் பாரம்பரிய உணவு அல்ல.

 ஆக உங்கள் வரையறைப்படி மோடி இந்துவே இல்லை போலிருக்கிறதே சர்சங்சாலக் மோகன் பகவந்த்?

 என்ன செய்யப் போகிறீர்கள்?