Showing posts with label குமுதம். Show all posts
Showing posts with label குமுதம். Show all posts

Saturday, January 2, 2021

ரஜினி-குமுதம்-மிச்சம்-லட்சம்

 


ஆமாம். ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் குமுதம் முதலாளிக்கு ஒரு லட்ச ரூபாய் மிச்சமானது.

எப்படி?

கீழே உள்ள விளம்பரங்களைப் பாருங்கள்



ரஜினியின் கட்சியின் பெயரை கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்று அறிவித்திருந்தார்கள்.

இப்போது அந்த பணம் மிச்சம்தானே!

ஆனால் பாவம்! 

எத்தனை கனவுகளோடு பில்ட் அப் கொடுத்தார்கள்! அவையெல்லாம் தகர்ந்து போனதால் எப்படி வேதனைப்பட்டிருப்பார்கள்! 

அந்த வேதனையை மறைக்க முடியாமல்தான் மூத்த பத்திரிக்கையாளர் லீக்வான் க்யூ பதிவை எழுதியிருப்பாரோ?

Sunday, February 21, 2016

குமுதத்திற்கு ஏன் இந்த அவசரம்?




இந்த வார குமுதம் இதழ் ( 29.02.2016 தேதியிட்டது) படித்து அதிர்ந்தே போனேன். 




மகாமகத்தின் முக்கியமான நிகழ்வு நாளை 22.02.2016 அன்றுதான். அது மிக சிறப்பாக நடைபெற்றது என்று குமுதம் இதழோ முன்பே அச்சிடுகிறது. நான் வாங்கியது இன்று. நேற்றே அச்சடித்திருந்தால் மட்டுமே இன்று தமிழகம் எங்கும் விற்பனை செய்வது சாத்தியம்.

இதிலே மிகப் பெரிய காமெடி என்னவென்றால் "ரஜனிகாந்த் வருகிறார், விஜயகாந்த் வருகிறார் என்று பரவிய வதந்திகளும் அதை சமாளித்த காவல்துறையும்"  என்று போட்டுள்ள செய்திதான். ஒரு வேளை நாளை இவர்களே வதந்திகளை பரப்புவார்களா?

செய்திகளை முந்தித் தருவது என்பது முக்கியம்தான். அதற்காக இவ்வளவு முந்தியா? 

அடுத்த வார இதழில் பிரசுரிப்பதற்காக எழுதி வைத்திருந்ததை யாராவது தவறாக இந்த வாரமே  அச்சுக்கு அனுப்பியிருப்பார்களோ?

எது எப்படியானாலும் நல்லதொரு காமெடி

 

Friday, November 20, 2015

“குமுதம்” கதையின் பின்னணி





கடந்த வார குமுதம் இதழில் பிரசுரமான எனது ஒரு பக்க கதையை 16.11.2015 அன்று பதிவிட்டிருந்தேன். அதன் பின்னணியை நாளை சொல்வதாகவும் எழுதியிருந்தேன்.

ஆனால் அதற்கான அவகாசம் இன்றுதான் கிடைத்தது.

செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் எனக்கு ஒரு மணி ஆர்டர் வந்துள்ளதாகவும் அதை மறுநாள் காலை தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு தபால்காரர் சொல்லி விட்டுச் சென்றார் என்று சொன்னார்கள்.

மறுநாள் காலை சென்றால் அது குமுதம் பத்திரிக்கையிலிருந்து வந்த நூறு ரூபாய். நான் குமுதம் பத்திரிக்கைக்கு எதுவும் எழுதி அனுப்பாதபோது எதற்கு பணம் அனுப்பியுள்ளார்கள் என்று குழப்பம் வந்தது.

வாராவாரம் குமுதம் வாங்குவதோடு சரி. ஒரே ஒரு தொடர்பு என்னவென்றால் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அவசியமில்லை என்று எனது வலைப்பக்கத்தில் எழுதியதை எடுத்து பிரசுரித்து இருந்தார்கள். அதற்காக 750 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தினார்கள். அந்த தொகையையும் கூட எங்கள் சங்க இதழான Insurance Worker க்கு நன்கொடையாக அனுப்பி விட்டேன்.

பிறகு குமுதம் அலுவலகத்திற்கு ஒரு இரண்டு முறை தொலைபேசி செய்து விசாரித்த போது ஒரு குறிப்பிட்ட இதழில் எனது ஒரு பக்க கதை வந்திருப்பதாக சொன்னார்கள். அதனை புரட்டிப் பார்த்தால் அந்த கதையை எழுதியவர் பெயரும் எஸ்.ராமன்.

அவருக்கு போக வேண்டிய தொகை எனக்கு வந்து விட்டது. ரிப்போர்ட்டர் கட்டுரையால் வந்த குழப்பம் என்று நினைக்கிறேன். அந்த தொகையை மீண்டும் குமுதம் அனுப்பி விட்டேன்.

அந்த அனுபவத்தையே கொஞ்சம் கற்பனை சேர்த்து ஒரு பக்க கதையாக்கி குமுதத்திற்கே அனுப்பி வைத்தேன். அதுவும் பிரசுரம் ஆனது.