Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts

Sunday, December 15, 2024

புது ராணுவ ஓவியம் – மத்யமர் சங்கிகளுக்கு தெரிந்தால்?

 


ராணுவ தலைமையகத்தில் மோடியால் வைக்கப்பட்டுள்ள புதிய் மொக்கை ஓவியத்தை வரைந்தது யார் என்று தெரிந்தால் சங்கிகள், அதிலும் குறிப்பாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சங்கிகளுக்கு தெரிந்தால் எப்படி ஜாகீர் உசேன்  ஸ்ரீரங்கம் கோயிலுக்குக் கொடுத்த வைரக்கற்கள் பதித்த மாணிக்கக் கிரீடத்திற்கு எதிராக பொங்கினார்களோ, அது போல பொங்கி எழுந்து எழுதித் தள்ளி விடுவார்கள்.

ஆம்

அதை வரைந்தவர்

சென்னை ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப்டிணன்ட் கர்னல் தாமஸ் ஜேக்கப்.

ஆமாம்,

சங்கிகளின் மொழியில் பாவாடை.

இந்த தகவல் மட்டும் தெரிந்தால் போதும் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சிகண்டிகள் (பெண்களின் பெயரில் ஒளிந்து கொண்டுள்ள ஃபேக் ஐடிகள்) மோடியை விட்டு விட்டு இந்திய ராணுவத்தை ஒரு வழி செய்து விடுவார்கள்.

ஆமாம்.

அவர்கள் அவ்வளவு நேர்மையானவர்கள், மத வெறி விஷத்தை கக்குவதில் . .

Sunday, May 7, 2023

இளம் கலைஞருக்கு வாழ்த்துக்கள்

 


வேலூர் மாவட்டத்தின் மக்கள் தலைவரும் குடியாத்தம் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினருமாகவும் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் கே.ஆர்.சுந்தரம் அவர்களின் நூற்றாண்டு பற்றி நேற்று முன் தினம் எழுதியிருந்தேன்.

மழை காரணமாக கூட்டம் தொடங்கி சிறிது நேரமான பின்பே செல்ல முடிந்தது. 

அரங்கத்தின் உள்ளே நுழைந்த போது ஒரு வாலிபர் ஏதோ வரைந்து கொண்டிருந்ததை கவனித்தேன். 

அதன் பின்பு ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும். ஓவியம் முடிந்து விட்டது.

நீங்கள் மேலே பார்த்த சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் கே.ஆர்.எஸ் அவர்களின் ஓவியம்தான் அவர் லைவ்வாக வரைந்த அந்த ஓவியம்.


மருந்துவியல் முதலாண்டு படிக்கும் ஸ்ரீகாந்த் என்ற இந்த வாலிபர்தான் அந்த இளம் கலைஞர். கை கொடுத்து பாராட்டினேன். கதவடைப்பு காலத்திலிருந்துதான் ஓவியம் வரைய ஆரம்பித்ததாகச் சொன்னார்.

அபாரம்!




மக்கள் கூடியிருக்க, படு வேகமாகவும் அதே நேரம் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் வரைந்த இளம் கலைஞர் ஸ்ரீகாந்திற்கு பாராட்டுக்கள். மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.



Wednesday, February 15, 2023

இதுக்கும் ரெய்டுண்டா மோடி?

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து சுட்டது.

 இது ஒரு ஓவியம் என்றால் நம்ப முடிகிறதா?

 ஆம். நிஜமாகவே ஓவியம்தான்.எவ்வளவு நுணுக்கமாக வரையப்பட்டுள்ளது பாருங்கள்.

 அந்த ஓவியக் கலைஞரின் பெயர்

 Tuan Nguen Anh, வியட்னாம் நாட்டைச் சேர்ந்த ஓவியர்.

பின் குறிப்பு: உங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியாளரின் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேனே மோடி, இதற்கும் வருமான வரித்துறையை என் வீட்டுக்கு  ரெய்டு அனுப்புவீர்களா? ஏனென்றால் விவஸ்தை கெட்ட அரசல்லவா உங்களுடையது!

Friday, December 9, 2022

இதயத்துள் நிறைத்திடுங்கள்

மறைந்த ஓவியர் மனோகர் தேவதாஸ் குறித்து மக்களவை உறுப்பினருமான எழுத்தாளர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய நெகிழ்ச்சியூட்டும் பதிவு. பாக்யராஜின் "இது நம்ம ஆளு" படத்தில் "அம்மாடி இதுதான் காதலா?" என்ற பாடலை இப்பதிவு நினைவுபடுத்தியது என்பதுதான் உண்மை.

திரு மனோகர் தேவதாஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.

அவரைப் பற்றிய தோழர் சு.வெ வின் இன்னொரு பதிவையும் அவரது ஓவியங்களையும் நாளை பகிர்ந்து கொள்ள வேண்டும். 



 மஹிமாவின் இதயத்துள் நிறைத்திடுங்கள் மனோ

சு.வெங்கடேசன்.
மனோ - மஹிமாவின் காதல் எழுதித்தீராது. வாஞ்சையின் வடிவம் மனோ. வெடித்துச் சிரிக்கும் மனோவின் வாழ்வெல்லாம் நிறைந்திருந்தார் மஹிமா. அப்படித்தான் மஹிமாவின் வாழ்வெல்லாம் நிறைந்து இருந்திருப்பார் மனோ. அவரின் ஒவ்வொரு நேர்ப்பேச்சிலும் தாங்கள் கொண்ட காதலின் திளைப்பைப் பேசிக்களிப்பார்.

அவரைக் காணும் ஒவ்வொரு முறையும் புத்துணர்ச்சியின் பேரலை நம்முள் இருந்து மேலெழும். மனிதனின் மகத்துவத்தை, அன்பின் வலிமையை, நம்பிக்கையின் எல்லையில்லா ஆற்றலை மனோவிடமிருந்து உணர்வதற்கு நிகராக இன்னொருவரிடம் உணரமுடியுமா என்று தெரியவில்லை.

ஒவ்வொரு முறை அவரின் வீட்டுக்குச் செல்லும்பொழுதும் ஆற்றலின் விசைகூடித்தான் வெளியே வருவோம். ஒருமுறை அவரின் வீட்டுக்குச் செல்லும்பொழுது வழக்கத்தைவிட அதிகக் குதூகலத்துடன் இருந்தார். வாசலில் கோலம் போட்டு “வருக சு.வெ” என்று எழுதியிருந்தார்.

அவர் வரவேற்க நின்றிருந்தைப் பார்த்து உற்சாகத்தோடு வேகமாக கைகுலுக்கப் போனேன். அருகிற்போன பிறகுதான் கோலத்தையும் எழுத்தையும் பார்த்தேன். உடல்கூசி நின்றுவிட்டேன். ”ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கோபித்தேன். “காவல்கோட்டம் எழுதிய எழுத்தாளனை இதைவிடச் சிறப்பாக எப்படி வரவேற்பது! மதுரைக்கோட்டை இடிப்பை நீங்கள் எழுதியுள்ளதை நான் ஓவியமாக வரைய வேண்டும். அது எனது பெருங்கனவு” என்று சொல்லியபடி உள்ளே அழைத்துச்சென்றார்.

மனோவின் பேச்சு மஹிமாவில் தொடங்கும் வேறு எந்த ஒன்றைப்பற்றிப் பேசினாலும் மஹிமாவில் நிறையும். அடுத்த அறையில் இருப்பவரைப் பற்றிய பேச்சின் பாவனையில்தான் இருக்கும். மதிய உணவுக்குப் பின்னும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மாலை நெருங்கியதும் ”இன்று ஒரு இடத்துக்கு உங்களை அழைத்துச்செல்லப் போகிறேன், வாருங்கள்” என்று சொல்லிப் புறப்பட்டார். மனோவின் உற்சாகத்துக்கு இசைந்து செல்வதே அழகு. அவருடன் காரில் புறப்பட்டேன்.

சிறிது தொலைவுப் பயணத்துக்குப் பிறகு காரை நிறுத்தச்சொல்லி இறங்கினார். எனது தோளில் அவரது கை இருந்து. எங்கே அழைத்துச்செல்கிறார் என்பது புரியத் தொடங்கியது. கல்லறைத்தோட்டதினூடே நடந்து சென்றோம். எப்படி எதிர்கொள்வது என மனம் தடுமாறிக் கொண்டிருந்தது. அவரது மஹிமா துயில்கொள்ளும் இடத்தைக் காண்பித்தார். நான் அதிர்ந்து நின்றேன்.

அருகிருந்த ஒருவர் நீர் கொண்டுவர அக்கல்லறையை நீரூற்றிக் கழுவினர். அந்தக் கல்லறையை அவரது கைகள் தொடும்பொழுது அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் மஹிமாவையே பார்த்துக் கொண்டிருந்து தெரிந்து. அவரது கண்களில் இருந்து மஹிமா எப்பொழுதும் நீங்கியதில்லை என்பதும் தெரிந்தது. மறைவில் இருக்கும் ஒன்று இல்லாத ஒன்றாக ஆகிவிடாது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மறைந்தும் ஒளிந்தும் திளைக்கத் திளைக்க விளையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் வாழ்ந்த வாழ்வைப்பற்றி அவர் பேசியதெல்லாம் மிகமிகக் குறைவு என்பதை அவரது முகத்தின் பேரொளி சொல்லிக் கொண்டிருந்தது.

மனோவின் முகத்தையே நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். கல்லறையின் நடுவில் கைவைத்து ”இதனைப் பார்த்தீர்களா சு.வெ?” என்றார். நான் அப்பொழுதுதான் குனிந்து பார்த்தேன்.

மஹிமாவின் கல்லறையின் மேல் இடப்பட்டிருந்த சிலுவை குறியின் நடுவில் ஒரு துளை இருந்தது. அந்த துளையின் மேல் விரல் வைத்து, ”இந்தத் துளை ஏன் தெரியுமா சு.வெ?” என்று கேட்டார்.

மனோ ஒரு காவியக்காட்சியை வரைந்து காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிந்து. மற்றபடி அவர் சொல்லப்போகும் பதிலை எதிர்நோக்கி இருந்தேன்.

மனோ சொன்னார். ”என் மறைவுக்குப் பின் எனது சாம்பலை இத்துளையில் நிரப்ப வேண்டும். நான் என் மஹிமாவுடனே துயில வேண்டும்” என்றார்.

நான் உறைந்து நின்றேன்.

”இவ்விடம் வாருங்கள்” என்றார். ”இது உங்களுக்கான இடம் மனோ. நீங்கள் மட்டும் நில்லுங்கள்” என்று சொல்லி எனது செல்போனின் புகைப்படம் எடுத்தேன்.

காலம் அன்பையும் துயரத்தையும் வலியையும் வல்லமையும் தந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் இவற்றை எதிர் கொண்டு கடக்கிற பொழுது நாம் என்னவாகிறோம் என்பதே முக்கியம்.

எல்லாவற்றையும் எதிர்கொண்ட பின்பும் மனோ மஹிமாவின் காதல் மலர்ந்த தருணத்தின் மகிமை குறையாமல் காலம் முழுவதும் அப்படியே இருந்தது.

மனோ மஹிமா போல காதல்கொள்ள வேண்டும். கொண்ட காதலைக் கொண்டாடித்தீர்த்த வேண்டும். காவியங்கள் பாடியது குறைவு. மனிதன் அதனினும் செழிப்பாய் வாழ்வான்.

மனோ.. உங்கள் விருப்பப்படி மஹிமாவின் இதயத்துள் நிறைத்திடுங்கள்.

Wednesday, August 3, 2022

தொழுத கைகளுக்குப் பின்னே . . .

கவிஞர் டி.கே.கலாபிரியா அவர்கள் எழுதிய ஒரு பதிவு. மிகவும் உருக்கமான ஒன்று. அதனால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



 ஒரு பழைய கட்டுரை புதிய வாசகர்களுக்காக வும்

மதுரைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் போது, ஆல்ஃப்ரெட் என்றொரு நண்பர் அறிமுகமானார். உயிரியல் துறையில், முனைவர் பட்டம் பெற்ற கையோடு ஆய்வு உதவியாளராகச் சேர்ந்தார். அற்புதமான மனிதர். `ஆல்ஃபி’ என்று அழைப்போம். சாப்பாடு, கொண்டாட்டம், அரட்டை எல்லாவற்றிலும் சம ரசனை உள்ளவர்.முக்கியமாக மாதக் கடைசியில் கேட்காமலேயே ஐந்து, பத்து கொடுத்து உதவுவார்.இருவரும் சேர்ந்து மூன்றாவது பீர் வாங்கினால் முக்கால் வாசியை எனக்கே கொடுத்து விடுவார்.

அந்த வருட கிறிஸ்துமஸுக்கு ஊருக்குப் போய் வந்தவர், சில
அருமையான
வாழ்த்து அட்டைகள் கொண்டு வந்தார்.அதில் ஒன்று ரொம்ப அற்புதமாக இருந்தது. தளர்ந்த இரண்டு கரங்கள் தொழுதபடி இருந்தது.செம்பழுப்பு நிறத்தில் இருந்த அந்த ஓவியம் மனதை என்னவோ செய்தது.அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆல்ஃபி என் முகத்தைப் படிக்காது இருந்திருந்தால்தான் ஆச்சரியம். இதன் பின்னணி உனக்குத் தெரியுமா, இந்தக் கைகளின் சொந்தக்காரன் பெயரும் ஆல்பெர்ட் தான் என்றார்

ஜெர்மனியில், நூரம்பெர்க் அருகேயுள்ள ஒரு சின்ன கிராமத்தில் `பெரிய’ஆல்ப்ரெக்ட் ட்யூரருக்கு பதினெட்டு குழந்தைகள். அவர் ஒரு நகைத்தொழிலாளி. 18 குழந்தைகளின் சாப்பாட்டிற்காக நாள் முழுதும் கடுமையாக உழைக்க வேண்டும்.அவருடைய இரண்டு மகன்கள், `சின்ன’ஆல்ப்ரெக்ட் ட்யூரர், ஆல்பெர்ட், இருவருக்கும் ஓவியப் பள்ளியில் சேர்ந்து ஓவியம் கற்பதுதான் ஒரே கனவு. ஆனால் குடும்பப் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்காதென்று நன்றாகத் தெரியும்.தினமும் இரவில் நெருக்கியடித்துக் கொண்டு எல்லோரும் தூங்கும் போது இவர்கள் இருவரும் கண் துஞ்சாது, ஓவியம் கற்பது பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆல்பெர்ட்டுக்கு ஒரு யோசனை வந்தது. நாம் பூவா தலையா போட்டுப் பார்ப்போம். வெற்றி பெற்றவன் ஓவியம் பயில ஓவிய அகாடமியில் சேரவேண்டும், மற்றவன் அருகிலுள்ள சுரங்கத்தில் உழைத்து அதற்கான கட்டணங்களைச் செலுத்தவேண்டும்.நான்கு ஆண்டுகள் பயிற்சி முடிந்ததும் இரண்டாமவன் ஓவியம் பயில முதலாமவன் எப்படியாவது உழைத்து உதவ வேண்டும்.

காசு, ஆல்ப்ரெக்டுக்கு சாதகமாக விழுந்தது. அவன் ஓவியக் கல்லூரிக்குப் போனான். ஆல்பெர்ட் சுரங்கத்தின் கடின உழைப்பில் தன்னை அமிழ்த்திக் கொண்டு சகோதரனின் கலை வளர உதவினான். கனவு நனவானது, ஆல்ப்ரெக்ட் மிகத் தேர்ந்த ஓவியனாகி பேரும் புகழும் பணமும் பெற்றான்.

அவன் கிராமத்துக்குத் திரும்பியதை ஊரே கொண்டாடிற்று. பெரிய விருந்து. விருந்து மேஜையில் நடுநாயகமாக ஓவியன் ஆல்ப்ரெக்ட் ட்யூரர். அவன் எழுந்து, மதுக் கோப்பையை உயர்த்தி, ”என் அன்புச் சகோதரன் ஆல்பெர்ட்டின் தியாகத்திற்காக” என்று அறிவித்து; ”என் சகோதரனே இனி நீ ஓவியம் கற்கப் போ நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன்” என்றான். எல்லோரும் மேசையின் கடைசியில் இருந்த ஆல்பெர்ட்டையே பார்த்தனர். அவனது குனிந்த தலை, இல்லை இல்லை என்று ஆடிற்று.

திரும்பத் திரும்ப அதையே சொல்லியபடி அமர்ந்திருந்தவன் கடைசியாய் எழுந்து,சுரங்கத்தில் கல் உடைக்கும் போது பட்ட பல அடிகளால் எலும்பெல்லாம் நொறுங்கி விரல்கள் வளைந்த கரங்களைச் சிரமத்துடன் சேர்த்து உயர்த்தி வணங்கியபடிச் சொன்னான்,”இனி என்னால், முடங்கிவிட்ட இந்தக் கரங்களால் ஓவியம் வரைய முடியாது.” “சுரங்கம் பலி வாங்கிய கரத்தால் என்னால் என் மதுக்கோப்பையை உயர்த்தி உனக்கு வாழ்த்துச் சொல்லக்கூட முடியாது” என்று..

ஆல்ப்ரெக்ட் ட்யூரெர் எத்தனையோ புகழ் பெற்ற ஓவியங்களை வரைந்துள்ள போதும் (அப்போகலிப்ஸின் நான்கு குதிரை வீரர்களின் –THE FOUR HORSEMEN OF APOCALYPSE- ஓவியம் மிக பிரபலமானது) அவர் வரைந்த, அவரது சகோதரன் ஆல்பெர்ட்டின் நலிந்த தொழும் கரங்கள் ஐந்து நூற்றாண்டுகளாகப் `பிரார்த்தனை புரியும் கைகள்’ என்று பெயர் பெற்று விளங்குகிறது. இது தியாகத்தைச் சொல்லும் கதை

இங்கே இது போலவே ஒரு கர்ண பரம்பரைக் கதை ஒன்று நிலவுகிறது.ஆனால் நேர் எதிரானது. மகாபாரத்ததில் இல்லாத, `செவி வழி’ பாரதக் கதைகள் நிறைய உண்டு. அவற்றில் இது ஒன்று.

‘உண்மையில் சகுனி துரியோதனின் நன்மைக்காக அவனுடன் சேர்ந்திருக்கவில்லை’. `பகையாளி குடியை உறவாடிக் கெடு’, என்கிற மாதிரி துரியோதனனுக்கு முந்திய தலைமுறை ஏதோ ஒன்றில் சகுனியும் அவனைச் சேர்ந்தவர்களும் அனுபவித்த துயரங்களுக்குப் பழி வாங்க சகுனியின் சகோதரர்கள் பாதாளச் சிறையில் திட்டமிடுகிறார்கள்.அவர்கள் ஐந்து பேருக்கு தினமும் ஒரு கவளம் சோறு மட்டுமே தரப் படுகிறது. இது ஒருவருக்குக் கூடக் காணாது. அதனால் அவர்கள் ஒரு முடிவு செய்கிறார்கள். அந்த ஒரு கவளம் சோற்றை சகுனி மட்டும் சாப்பிட்டு எப்படியாவது தப்பித்து, திருதராஷ்ட்ரன் வம்சத்தை அழிக்க வேண்டும்.அப்படியே மற்றவர்கள் பசியால் இறந்து விட சகுனி தப்பித்து, துரியோதனனை உறவாடிக் கெடுத்தான் என்றொரு கதை உண்டு.

மகாபாரதத்தில் இல்லாத இது போன்ற செவி வழி கதைகளைச் சேகரிக்க, கி.ராஜநாராயணன் மாமாவும் நானும் கை கோர்த்த முயற்சி நிறைவேறாமலேயே இருக்கிறது. அது ஒரு தனிக் கதை.

Sunday, January 16, 2022

வித்தியாசமான வள்ளுவர்கள் - அவசியமும் கூட

 

இன்று முக நூலில் பார்த்த மூன்று வித்தியாசமான வள்ளுவர்கள்.

காவி உடுத்தி திருவள்ளுவருக்கே சங்கிகள் விபூதி அடித்துவிடும் இந்த கால கட்டத்தில் வித்தியாசமான வள்ளுவர்கள் தேவைதான்/

ஓவியர் தோழர் ரவி பாலேட் கைவண்ணம்.



ஓவியர் சந்தோஷ் நாராயண்



ஓவியர் கோபி OVN



Wednesday, November 10, 2021

இது ஆட்டுக்கார பிரியாணி

 


படகுச்சவாரி நாடகம் நடத்திய ஆட்டுக்கார அண்ணாமலையை பிரியாணி போட்டு விட்டார்கள்.

ஆமாம்.

அவரைப் போட்டுத்தாக்கிய படங்களில் நான் பார்த்து ரசித்தவை கீழே.







ஆனால் ஆட்டை விட்டு விடலாம். 

ஏனென்றால்

ஆட்டுக்கு அண்ணாமலையை விட அறிவு அதிகம்.

Tuesday, September 28, 2021

கேமரா மேன் 😜😜😜

 



 ஓவியர் தோழர் ரவி பாலேட் அவர்களின் ஓவியம். எந்த ஒரு விளக்கமும் தேவையில்லை.

 இருப்பினும்

 இந்த படத்தையும் பாருங்கள். அதுவும் சொல்லாமல் சொல்லும்.



Saturday, June 19, 2021

பிரமிக்க வைக்கிறார் அவர் . . .

 

சமீபத்தில் என்னை வியக்க, பிரமிக்க, திகைக்க வைத்த ஓர் ஓவியம் இது. 



திரையின் பெரும்பகுதி கடும் மழைக்கு முன்னோட்டமாய் அச்சுறுத்தும் அடர் கரு மேகக் கூட்டம். கொஞ்சமாய் பாதை. பெரும் திரையின் சிறு புள்ளியாய் விரைந்து செல்லும் புரவியின் மீதொரு வீரன். அவன் முகம் கூட தெரியவில்லை. ஆனால் நான்கு கால் பாய்ச்சலில் செல்லும் குதிரையின் வேகத்தை மட்டும் நம்மால் உணர முடிகிறது.

பிரமிக்க வைக்கும் ஓவியத்தை வரைந்த தோழர் ரவி பாலேட் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Monday, June 7, 2021

அன்று அதிசயிக்கவைத்தவர் இன்றில்லை

 


கீழேயுள்ள பதிவு பத்து வருடங்களுக்கு முன்பாக வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய காலத்தில் எழுதியது. மின்னஞ்சலில் வந்த ஓவியங்கள் அதிசயிக்க வைத்தது. எனக்கு மின்னஞ்சல் அனுப்பியவருக்கும் யார் அவற்றை வரைந்தது என்று தெரியவில்லை.

முகநூலில் பகிர்ந்து கொண்ட பிறகுதான் அந்த படைப்பாளி இளையராஜா என்று தெரிய வந்தது.

இன்று அவர் காலமானார்.

புகைப்படம் போல ஓவியங்களை தீட்டிய படைப்பாளிக்கு என் மனமார்ந்த அஞ்சலி

Thursday, May 26, 2011

பாருங்கள், பாராட்டுங்கள்








இவை இன்று எனக்கு மின்னஞ்சலில்  வந்த படங்கள்.  எதோ புகைப்படம்
போல இந்த ஓவியங்கள்  தத்ரூபமாக உள்ளதல்லவா?  இவற்றை 
வரைந்த அந்த கலைஞன் யாரென்று  தெரியவில்லை.  யாராக 
இருந்தாலும்  எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். 
நீங்களும்  பாராட்டுவீர்கள்தானே! 
அந்த கலைஞன் யார் என்று தெரிந்தால்  சொல்லுங்களேன்....

Sunday, July 5, 2020

புகைப்படம், ஓவியம், கவிதை -அற்புத உணர்வு


நேற்று ஓவியர் தோழர் ரவி பாலேட் அவர்களின் முக நூல் பக்கத்தில் பார்த்த புகைப்படமும், அதனால் உந்தப்பட்டு அவர் வரைந்த ஓவியமும் அதற்கு சமர்ப்பணமாக மனுஷ்ய புத்திரனால் இன்று பகிர்ந்து கொள்ளப்பட்ட கவிதையும் அற்புதமான உணர்வுகளின் வெளிப்பாடு. நெகிழ்சியாகவும் இருந்தது. 

அவற்றை அனைவரும் அறிய வேண்டும் என்ற ஆவலில் ஓவியர் தோழர் ரவி பாலேட் மற்றும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆகியோருக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன்



சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு வெண்குதிரையின் கடிவாளப்பட்டையை Abdul Hameed Sheik Mohamed மனுஷ்யபுத்திரன் பற்றிக்கொண்டிருக்கும் அந்தப்படம் ஏனோ என்னை நாளெல்லாம் தொந்தரவு செய்துகொண்டேயிருக்கிறது.

இந்த மனிதனின் புன்னகை வழியாக உள்ளே அமிழ்ந்திருக்கும் உள்ளத்தின்கதியினை உணர்கையில் நெஞ்சம் ஆதரவாய் அன்பில் கசிகிறது.

அந்தப்படத்தை நான் புறக்கணித்துக்கொண்டேயிருந்தாலும், விடாமல் என்னைத் துரத்திக்கொண்டிருத்தலிலிருந்து தப்பித்தலுக்காகவும், என் ஆசுவாசத்திற்காகவும் அந்த மனுஷ்யபுத்திரனை ஒரு ஓவியத்தின் வழியாக கடக்க முயல்கிறேன்.


இது மனுஷ்ய புத்திரனின் சமர்ப்பணக் கவிதை


ஓவியர் Ravi Palette வுக்கு பின் வரும் இந்தக் கவிதையை சமர்ப்பணம் செய்கிறேன், அவர் வரைந்த இந்த ஓவியம் என்பால் அன்பு கொண்ட நண்பர்கள் பலரையும் மனம் கசியச் செய்துவிட்டது. எனக்கு நெருக்கமான நண்பர்கள் அனைவரும் நான் நடப்பதுபோல கனவு கண்டதாக அடிக்கடி கூறியிருக்கின்றனர். பலர் கண்ட ஒற்றைக்கனவு அது. நான் ஒரு கல்யாண குதிரையை சக்கர நாற்காலியிலிருந்து பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தைக் கண்டு உந்தப்பட்டு ரவி இந்தப்படத்தை வரைந்திருக்கிறார். மிக மோசமான ஒரு மனநிலை கொண்டிருந்த நாளில் இந்தக் குதிரை வந்து என் அருகில் நின்று ’வா போகலாம்’ என்று அழைக்கிறது. எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும், நான் ஒரு புல்லட் வாகனத்தை வேகமாகச் செலுத்திக்கொண்டு செல்வதுபோல. என் கவிதைகளால் எத்தனையோ பேரின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறேன். இன்று ரவி என் கனவுக்கு ஒரு வண்ணம் தீட்டியிருக்கிறார். நாம் எல்லோரும் குதிரையேறிச் செல்லும் ஒரு பொன்னான காலம் வரும்.
- மனுஷ்ய புத்திரன்
சித்திரக் குதிரையேற்றம்
………………………………………..

கால்களில்லாத இளவரசனை
புரவியிலேற்றி அனுப்ப
விரும்பினான் சித்திரக்காரன் ஒருவன்


புரவியேறும் கனவில்
வாழ்நாளெல்லாம்
தூங்காதிருந்த
கால்களற்ற இளவரசன்
லாயத்துக் குதிரைகளின்
கடிவாளங்களை தினமும் முத்தமிட்டு
கண்ணீர் சிந்தினான்
அந்த துக்கம் சித்திரக்காரனையும்
மனம் உடையச் செய்துவிட்டது


காதலின் உன்மத்தவேகம் கொண்ட
சித்திரக் குதிரையொன்றை
இரவெல்லாம் தீட்டி முடித்தான்
கால்களற்ற இளவரசனுக்காக


நிஜக்குதிரைகள் போலல்ல
சித்திரக் குதிரைகள்
அவை செல்லும் வேகம்
ஒரு சொல்லின் வேகத்தைவிடவும் அதிகம்
மனதின் வேகத்தைவிடவும் அதிகம்
அவன் இழந்த நடை அனைத்தும்
சித்திரக் குதிரையின் கால்களில்
பாய்ந்து பெருகியது
அவனது உடைந்த கனவுகளின் பாழ்நிலங்களை
அந்தக் குதிரை மின்னலென கடந்து சென்றது


சித்திரக்குதிரையிலேறி
மேகக்கூட்டங்களினூடே
செல்லும் கால்களற்ற இளவரசனை
ஒரு அதிசயம் போல
அன்ணாந்து பார்க்கின்றனர்
ஊர் மக்கள்
கால்களற்ற மனிதர்கள் எது செய்தாலுமே
அது ஆச்சரியம்தான்


பாதிவழியில் திரும்பிப்பார்த்த
கால்களற்ற இளவரசனுக்கு
அப்போதுதான் உறைத்தது
தனக்குப்பின்னால்
இளவரசி இல்லையே என்று


இளவரசியற்ற இந்த பயணம்
பாதிப்பயணமே எனும் துக்கம் மேலிட
குதிரையின் வழியை திசை மாற்றி
சித்திரக்காரனிடம் பாய்ந்து சென்று
’ ஏனிந்த அநீதியை இழைத்தாய் ?’ என்றான்
கண்கள் சிவக்க


சித்திரக்காரன்
கால்களற்ற இளவரசனை
சமாதானம் செய்தான்
’ நீ இப்பிறவியில்
தனித்திருந்து சண்டையிட்டு
அழிய விதிக்கபட்டவன்
சண்டைக் குதிரைகளின் பின்னே
இளவரசிகள் அமரமாட்டார்கள்’


4.7.2020
மாலை 5.27
மனுஷ்ய புத்திரன்

Friday, April 17, 2020

இளம் கலைஞனின் எழில் ஓவியங்கள்


















மேலே உள்ள ஓவியங்களை வரைந்த ஓவியர் கீழே உள்ளார்.




எங்கள் புதுவை 2 கிளையில் பணியாற்றும் தோழர் எஸ்.செல்வராஜ் அவர்களின் மகன் செல்வன் அனீஷ் பாரதி.

ஏழாவது படிக்கும் இச்சிறுவன் கறுப்பு வெள்ளை நிறங்களை பயன்படுத்தி வரையும் ஓவியங்கள் அபாரமாக உள்ளது. 

மேலும் கீ போர்டில் வாசிக்கும் திறனும் உள்ளது. யூட்யூப் இணைப்பு இங்கே உள்ளது

எதிர்காலத்தில் உயரங்களை தொட வாழ்த்துக்கள்

Saturday, November 3, 2018

41 முதல் 51 வரை

தமுஎகச நடத்திய கருத்துரிமை போற்றுதும் நிகழ்வை முன்னிட்டு பல்வேறு ஓவியர்கள் வரைந்த 40 ஓவியங்களை முன்னரே பகிர்ந்துள்ளேன்.

கருத்துரிமை போற்றும் ஓவியங்களின் வரிசையின் இறுதி பகுதி இங்கே














Friday, October 5, 2018

முப்பது முடிந்தது. . .

கருத்துரிமை போற்றும் ஓவியங்கள் வரிசையில் அடுத்த பத்து ஓவியங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இதுவரை முப்பத்தி ஓரு ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இப்பக்கத்தில் நேற்று வரை பகிர்ந்து கொள்ளப் பட்ட ஓவியங்கள் இருபது. இன்றோடு சேர்த்து முப்பது. 

நாற்பது ஓவியங்கள் வெளியிடப்பட்ட பின்பு மீண்டும் அவற்றோடு வருவேன்.