Showing posts with label போலிகள். Show all posts
Showing posts with label போலிகள். Show all posts

Wednesday, July 12, 2023

சிவ பக்தர்கள் பொங்குங்கய்யா

 


தீட்சிதர்கள் (அதிலும் குட்டி பசங்க வேற) காலில்  ஆட்டுக்காரன் விழுந்ததற்கு ஒரு சங்கி கொடுத்த  அபத்தமன முட்டு என்னவென்று  பாருங்கள்.

 


ஆட்டுக்காரன் அப்பராம், அந்த குட்டி தீட்சிதர்கள் சம்பந்தர்களாம் (திருஞான சம்பந்தர் பற்றி கட்டமைத்த கதைகள் மீது மாற்றுக் கருத்துக்கள் உள்ளது என்பதும் 3000 சமணர்களை கழுவேற்றிய கறை எத்தனை பாக்கெட் சர்ஃப் போட்டாலும் மறையாது என்பதும் வேறு விஷயம்)

 சம்பந்தர் தமிழ் பாடியவர். அவர் ஒன்றும் சமஸ்கிருதத்தில் பாடவில்லை. அப்படியென்றால் வேத சிறுவன் என்று சொல்வதன் காரணம் என்ன? ஜாதியை நேரடியாக சொல்லத் தயங்கி இப்படி சொல்கின்றார். அதாவது அந்த ஜாதியைச் சேர்ந்தவர் சிறுவனாக இருந்தாலும்  அவன் காலில் விழுவது சரிதான் என்று சொல்லி அப்பட்டமாக மனுதர்மத்தை தூக்கிப் பிடிக்கும் பதிவு இது.

 64 நாயன்மார்களில் முதன்மையான அப்பர் ரேஞ்சிற்கு ஆட்டுக்காரனையும் தற்குறி சிறுவர்களை சம்பந்தராக சொல்வதற்கும்

 உண்மையான சிவ பக்தர்களாக இருந்தால் பொங்க வேண்டும். அப்படி பொங்காத பக்தர்களும் ஆட்டுக்காரன் போல தீட்சிதர்கள் போல மோசடிப் பேர்வழிகள்தான்.

 

 

 

Sunday, August 15, 2021

போலியோடு ஜாலியாய் உரையாடினால் . . .

 


கொஞ்ச நாட்கள் முன்பாக மறைந்த தென் மண்டல முன்னாள் தலைவர் தோழர் எம்.எம்.ஜோசப் அவர்களின் பெயரில் ஒரு நட்பழைப்பு ஒரு போலியால் வந்து உரையாடி கேள்வி கேட்டதும் என்னை ப்ளாக் செய்ததை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

சில நாட்கள் முன்பாக திருச்சி தோழர் புகழ் அமுதன் பெயரிலும் ஒரு நட்பழைப்பு வந்திருந்தது. அவர் இவ்வாறு நடப்பதாக முக நூலில் பதிவு செய்திருந்தார். அதனால் அந்த போலியோடு உரையாடத் தொடங்கினேன். ஒரு கேள்வி கேட்டவுடனேயே அவன் ப்ளாக் செய்து ஓடி விட்டான்.

நான்கு நாட்கள் முன்பாக எங்கள் ராஜமுந்திரி கோட்டத்தின் மூத்த தலைவர் தோழர் கே.எஸ்.மூர்த்தி அவர்களின் பெயரிலும் இப்படி ஒரு நட்பழைப்பு. அதைப் பார்த்து பேசுவதற்கு முன்பாகவே அந்த கணக்கு செயலிழந்து விட்டது.

நேற்று இரவு உறங்கச் செல்லும் முன்பாக எங்கள் போளூர் கிளைச்சங்கச் செயலாளர் தோழர் சங்கரிடமிருந்து ஒரு நட்பழைப்பு. ஒரு மணி நேரம் முன்பாகத்தான் ஒரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்ததால் வந்த அழைப்பு மோசடி அழைப்பு என்று தெளிவாகத் தெரிந்தது.



சரி, கொஞ்சம் விளையாடுவோமே என்று நட்பழைப்பை ஏற்றால் அடுத்த நொடியே இன் பாக்ஸில் செய்தி வந்தது. எங்கே உள்ளீர்கள் என்ற கேள்விக்கு அமெரிக்கா என்று பதில் சொன்னேன். கொஞ்சமும் தயங்காமல் கூகிள் பே, போன் பே இருக்கிறதா என்று கேட்க, நான் முந்திக் கொண்டேன். எனக்கு பணம் வேண்டும், ஐயாயிரம் டாலர் வேண்டும் என்று கேட்க மீண்டும் ப்ளாக் செய்து ஓடி விட்டான்.

போலிகளோடு இவ்வாறு விளையாடுவது ஜாலியாகத்தான் உள்ளது, 

போலி என்று தெரிந்த முகமறியாதவர்களோடு இவ்வாறு உரையாட முடிகிற நம்மால், போலி என்று தெரிந்த முகமறிந்தவர்களை எதுவும் செய்ய முடிவதில்லையே!

மோடி ஒரு போலி என்பதை நாம் குறைந்த பட்சம் ஒப்புக் கொள்ளவாவது செய்கிறோமா? 

Friday, June 18, 2021

சுடுகாட்டில் திருமண மந்திரம்

 


முன் குறிப்பு : பெண்கள் கொள்ளி வைக்கலாமா என்று ஒரு விவாதம் சில வாரங்கள் முன்பு நடந்தது நினைவிலிருக்கலாம். அப்போதே எழுதிய  இரு பதிவுகளை  ட்ராப்டிலேயே வைத்திருந்தேன்.  அனைத்து ஜாதியினரும் பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு வந்த பின்பு “சடங்கு, சம்பிரதாயம், கலாச்சாரம், லொட்டு, லொசுக்கெல்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கூச்சல் எழுவதால்  அப்போது எழுதியதன் முதல் பகுதியை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.  நேரடியாக கோவில் அர்ச்சனை தொடர்பான அனுபவம் கிடையாது என்றாலும் கலாச்சார காவலர்களின் செயல்பாடுகள் பற்றியது இது.

 பல வருடங்கள் முன்பு நிகழ்ந்தது. என் அத்தையின் இறப்பிற்காக என் அப்பாவையும் அம்மாவையும் வாடகைக் கார் ஏற்பாடு செய்து கொண்டு சென்னை அழைத்துச் சென்றேன். தாம்பரத்திற்கு அருகில் ஒரு புற நகர் பகுதி. அப்போதுதான் வளர்ந்து கொண்டிருந்தது. முதுமை காரணமாக சில உடல் உபாதைகள் இருந்த போதும் நான் கண்டிப்பாக மயானத்திற்கு வருவேன் என என் அப்பா அடம் பிடித்ததால்  அவரை அழைத்துக் கொண்டு நான் சென்றேன்.

 சடலத்தை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி வைத்து சில சடங்குகளுக்குப் பின்பு தகன மேடையில் கட்டை, வறட்டிகள் வைத்து அடுக்கி வைக்கும் நேரத்தில் இயற்கை அழைப்பிற்காகவும் புகை பிடிக்கவும் ஒரு புதர் நோக்கி நகர்ந்தேன்.  என் பின்னால் இன்னொருவர் வந்தார்.  அவர் தகனத்தை நடத்தி வைக்க வந்த புரோகிதர்.

 யாரையோ அலைபேசியில் அழைத்தார்.

 “நான் இங்க ஒரு கல்யாணத்துல (!) இருக்கேன். நீங்க மண்டபத்துக்கு கிளம்பரதுக்கு முன்னாடி வர முடியாது. அதனால யாத்ரா தான மந்திரத்தை (மண மகன் வீட்டினர் திருமணத்திற்கு முன்பு வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு செய்யும் சடங்கு)  போனில் சொல்றேன். நீங்க திருப்பிச் சொல்லுங்கோ”

 என்று  சொல்லி அந்த மந்திரங்களை சொல்லத் தொடங்கினார்.

 சுடுகாட்டில் சடலத்தையும் வைத்துக் கொண்டு திருமண மந்திரங்களை ஒருவரால் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சொல்ல முடிகிறது. இவர்கள்தான் சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் பிற்போக்குச் சிந்தனைகள் நிலைப்பதற்கு காரணமாக இருப்பவர்கள்.

 ஏதோ ஒருவர் அப்படி செய்தால் எல்லோரையும் அப்படி பொதுமைப் படுத்தலாமா என்று நீங்கள் கேட்கலாம். திருமணம் முதல் இறப்பு வரை அனைத்து சடங்குகளுக்கும் இன்று பேக்கேஜ் வந்து விட்டது. தானம் கொடுக்கப்படும் பொருட்கள் ரீசைக்கிள் ஆகிறது. ஒரு க்ரூப்பிலிருந்து இன்னொரு க்ரூப் போகிற போர்ட்டபிளிட்டி எல்லாம் செல்லுபடியாகாது. இன்றைய  காலத்தில் இதுதான் யதார்த்தம்.  

 இன்னொரு சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 நாளை

 மயானக் கூட்டாளிகள்

Monday, December 7, 2020

அன்னா ஹசாரே எங்கே?

 


இந்த படத்தைப் போட்டு பலரும் அன்னா ஹசாரே எங்கே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கான பதில் இதுதான்.


மோடி பிரதமரானவுடனேயே அன்னா ஹசாரேவின் அவதார நோக்கம் முடிந்து விட்டது.

இப்போதைக்கு காவிகளுக்கு அவர் தேவையில்லாத லக்கேஜ்.

அவ்வளவுதான்

Saturday, November 21, 2020

முருக பக்தர்கள் ஏற்கிறார்களா?

 


இந்த பதிவில் ஒரு காணொளியை இணைக்க எனக்கு மிகவும் வ்ட்கமாகவும் அசிங்கமாகவும் இருந்தாலும் சங்கிகள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை உணர்த்த அவசியமாகிறது.

பாஜகவும் எடுபிடி அரசும் "வேல் யாத்திரை" என்ற பெயரில் தினம் தினம் வடிவேலுவுடன் முத்துக்காளை நடத்திய "செத்து செத்து விளையாட்டு" ஒன்றை நடத்துகிறது.

அந்த விளையாட்டில் மக்களை ஈர்க்க பாஜக கையாளும் ஒரு நடவடிக்கையின் காணொளி கீழே உள்ளது.



மற்ற கட்சிகள் இது போன்ற நிகழ்ச்சிகளை தங்கள் கூட்டங்கள் துவங்குவதற்கு முன்பு நடத்துவதில்லையா என்று சிலர் கேட்கலாம். 

பாஜக வேல் யாத்திரை என்பதை என்ன பெயர் சொல்லி நடத்துகிறது?

தோழர் தொல்.திருமா, மனு தர்மத்தில் பெண்கள் பற்றி சொன்னதை வெளியே சொன்னதால் இழந்து போன பெண்களின் பெருமையை மீட்க, முருகக் கடவுளின் ஆசியோடு நடத்தப்படுவதாக சொல்கிறது.

ஒவ்வொரு நாளும் முருகன் கோயிலில் இருந்துதான் நாடகத்தை துவக்குகிறது. முருகனின் ஆயுதமான வேல் பிரச்சார ஆயுதமாக மாறி இருக்கிறது.

முருக பக்தர்களே, முருகனின் பெயரில் நடைபெறும் ஒரு நிகழ்வில் இப்படி பெண்களை "குத்து டான்ஸ்" ஆட வைப்பது முருகனுக்கு இழிவில்லையா?

இவர்களின் "பக்தி வெறும் பகல் வேஷம்" என்று உங்களுக்கு புரியவில்லையா?

முருகனின் பெயரில் நடைபெறும் இந்த கீழ்த்தரமான நடவடிக்கையை நீங்கள் இன்னும் எத்தனை நாள் அனுமதிக்கப் போகிறீர்கள்?

பக்தி என்ற பெயரில் நீங்கள் அனுமதித்தால் "உங்கள் கடவுளே உங்களை மன்னிக்க மாட்டார்"

Friday, December 6, 2019

பாஜக லட்சணம் மீண்டும் அம்பலம்



பிஜேபி அரசின் முகத்திரையை

கிழித்து தொங்கவிட்ட

#சாதி_மறுப்பு திருமண தம்பதியினருக்கு மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறித்த கேள்வியில் மத்திய அரசு அதிர்ச்சியளிக்கும் பதில்


சாதி மறுப்பு திருமணங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கத் தொகைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் பல கேள்விகளை எழுப்பினார்.

சமூக ஒருமைபாட்டிற்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொள்ளும் ஒவ்வொரு மணமக்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகை எவ்வளவு? என்றும்

2015-16 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகளில் எத்தனை பேர் ஊக்கத் தொகை வேண்டி விண்ணப்பம் அளித்து இருந்தனர்? என்றும்

மேற் சொன்ன காலக்கட்டத்தில் ஊக்கத் தொகை எத்தனை தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது? என்றும்

ஒரு நிதியாண்டில் 500 சாதி மறுப்பு தம்பதிகளுக்கு வழங்கப்படும் அளவிற்கான ஊக்கத்தொகை கிடைத்ததா? என்றும்

இத்திட்டத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகையினையும் பயனாளிகளின் எண்ணிக்கையினையும் அதிகரிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா? என்றும் கேள்விகள் எழுப்பியிருந்தார்.

இக்கேள்விகளுக்கு எல்லாம் சமூக நலத் துறையின் இணை அமைச்சரான திரு.ரத்தன் லால் கடாரியா அவர்கள் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.

சமூக ஒருமைபாட்டிற்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொள்ளும் ஒவ்வொரு மணமக்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ. 2.5 லட்சம் என்றும்

2015-16 ம் ஆண்டு 544 சாதி மறுப்பு தம்பதியினர் விண்ணபித்து இருந்தனர். இதில் 54 பேருக்கு மட்டும் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது.

இதே போல்
2016-17 நிதி ஆண்டில் 711 விண்ணப்பங்களில் 67 தம்பதியினருக்கும்,

2017-18 நிதி ஆண்டில் 582 விண்ணப்பங்களில் 136
தம்பதியினருக்கும்,

2018-19 நிதி ஆண்டில் 493 விண்ணப்பங்களில் 120 தம்பதியினருக்கும்

மட்டுமே வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு வருடத்திற்கு 500 எனும் இலக்கு என்பது 2013-14, 2014 -15 ஆகிய இரு ஆண்டுகளுக்கு பரிசோதனை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மட்டுமே.2015 ம் ஆண்டையும் தாண்டியும் இத்திட்டத்தை தொடர வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் மையம் முடிவெடுத்தது.

வருடத்திற்கு 500 எனும் இலக்கு அடையாளபூர்வமானது மட்டுமே என்றும் இலக்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயமில்லை என்றும் அமைச்சர் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

ஊக்கத் தொகையினை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அப்பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தோழர் கே.சாமுவேல்ராஜ் முகநூல் பதிவு

Friday, August 16, 2019

அத்திவரதரெல்லாம் அப்பாலதான் !!!!!


நாற்பத்தி எட்டு நாட்கள் பரபரப்பாக இருந்த அத்தி வரதர் திருவிழா   கடைசியில் இந்த புகைப்படங்களால் 
ஆன்டி-கிளைமாக்ஸாக மாறி விட்டது.



சமூக ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு விஷயம் கடைசியில் அதே சமூக ஊடகங்களாலேயே  காமெடி ஆகி விட்டது.

அத்தி வரதரை புகைப்படம் எடுக்க வந்த காமெராவின் கோணம் திசை மாறியது நல்ல காமெடி.



Tuesday, February 26, 2019

ஒரு தேசியவாதி என்பவர் ??????




எட்டு வயது பெண் குழந்தையை கோயில் வளாகத்தில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன் புணர்ச்சி செய்து முதுகெலும்பை உடைத்து கொலை செய்த உத்தமர்களை விடுதலை செய் என்று ஊர்வலம் போகும் போது கூட கையில் தேசியக் கொடியை ஏந்திச் செல்பவர்கள்.

ஒரு சாதாரண பாலியல் வன் புணர்ச்சி வழக்கை பெரிது படுத்தினால் சுற்றுலா மூலம் வரும் வருமானம் குறைந்து போகும் என்று கவலைப் படுபவர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விடாமல் கலவரம் செய்து, குற்றச் செயல் புரிந்த உத்தமர்களுக்காக வாதாடி, அரசு வழக்கறிஞர் பதவி பெறுபவர்.

ஆசிபாவுக்கு நிகழ்ந்த கொடுமையைப் பற்றி நீங்கள் பேசினால் மோடியை ஆதரிக்க வேண்டும் என்ற என் உணர்வுதான் பெருகும் என்று உத்தமர்களால் வாழ்விழந்த அந்த சின்னஞ்சிறு பெண் மீது இரக்கத்தைப் பொழிந்தவர்.

இவர்கள்தான் தேசியவாதிகள், தேச பக்தர்கள்.

இப்படியெல்லாம் செயல்பட்டு “தேசியவாதி” “தேச பக்தர்” என்ற முத்திரையை போலிகளிடமிருந்து  பெறுவதைக் காட்டிலும்

மக்களின் துயரங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமானவர்கள் யாரோ, அவர்களுக்கு எதிராக போராடி “தேசத் துரோகி” பட்டம் பெறுவதே  மேலானது. சிறந்தது.

Thursday, April 13, 2017

தினமும் தரும் மூதேவியே . . . .





நேற்றைய இரவு முழுதும் வெட்டித்தனமாக விதண்டாவாதக்காரர் ஒருவருக்கு பதில் சொல்வதிலேயே கழிந்தது.

பீப் சாங் வந்தாலோ, லெக்கின்ஸ் போடலாமான்னு கேட்டாலோ பொங்குகிற மாதர் சங்கங்கள் இப்ப இருக்கிற இடமே தெரியல.....

எதாச்சும் குரல் கொடுத்தா அந்தக்காவுக்கு விழுந்த மாதிரி நம்ம கன்னத்துலயும் பளார்னு விழுந்திருமோன்னு பயந்திருப்பாங்களோ?”

என்று ஒருவர் முக நூலில் எழுதியிருந்ததைப் பார்த்ததும் கோபம் வந்தது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை வெறும் பீப் சாங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்பு என்று சுருக்கிக் கொள்ள வேண்டாம் என்று மரியாதையாகவே பின்னூட்டம் இட்டிருந்தேன். இப்பிரச்சினையிலும் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப்போகிறது என்றும் குறிப்பிட்டிருந்தேன். கடலூர் மாவட்டத்தில் மாதர் சங்கத்தின் தலையீடு குறித்த எனது அனுபவம் குறித்த பீப் சாங்கிற்கு எதிராக மட்டுமல்ல என்ற எனது சமீபத்திய பதிவையும் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அத்தனைக்குப் பிறகும் விதண்டாவாதமாக பல்வேறு கேள்விகள்.
இந்த வழக்கில் அதைச் செய்தாயே, இதில் ஏன் அப்படி இல்லை.
இதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்று மீண்டும் மீண்டும் வன்மத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள். அதற்கு கூஜா தூக்கிய வேறு சிலர்.

சரி, நீங்கள் என்ன செய்தீர்கள், உங்கள் அமைப்பு எது? அது என்ன செய்தது என்றெல்லாம் கேள்வி கேட்டால் அதற்கெல்லாம் பதில் கிடையாது.

,மாதர் சங்கத்தையும் இதர முற்போக்கு சக்திகளையும் “இதற்கு என்ன செய்தாய், அதற்கு என்ன செய்தாய்” என்று கேட்கிற முக நூல் போராளிகள், அவர்கள் முகனூலைத் தாண்டி வேறு எந்த களத்திற்கும் சென்றிருக்க மாட்டார்கள். வேறு எந்த ஒரு அமைப்பிடமும் வாய் திறக்கவே மாட்டார்கள். நாம் நாகரீகமாக பதில் சொல்வது போல அல்லாமல் அவர்கள் வீட்டிற்கு ஆட்டோ அனுப்புவார்கள் என்ற அச்சம் கூட காரணமாக இருக்கலாம்.

ஒரு கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு வீட்டில் மாமியார் எதுவும் கிடையாது என்று திட்டி துரத்தப்பார்ப்பார். ஆனால் மருமகள் தினமும் ஏதாவது பிச்சை போடுவார். ஒரு நாள் மாமியார் துரத்த, அன்று ஏதோ சிந்தனையில் இருந்த மருமகளும் எதுவும் கிடையாது என்று மறுத்து விட்டார்.

உடனே அந்த பிச்சைக்காரனுக்கு கோபம் வந்து விட்டது.

“எப்பவுமே முடியாதுன்னு சொல்ற அந்த மகராசி, இன்னிக்கும் முடியாதுன்னுட்டாங்க. தினமும் போடும் மூதேவி, உனக்கென்ன கேடு”

என்று பொறிந்து தள்ளி விட்டான்.

அந்த பிச்சைக்காரனைப் போலத்தான் சிலர் சிந்தனையும் இருக்கிறது. உண்மையாக பணி செய்பவர்களை மட்டுமே பார்த்து நீளும் வெட்டி வாய், மக்களின் அனைத்துப் பிரச்சினைகளிலும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் பெரிய மனிதப் போர்வை போர்த்தியவர்களைக் கண்டாலோ பயந்து ஒதுங்கி விடுகிறது.

பாவம், முக நூல் மட்டும் இல்லையென்றால் இந்த போராளிகள் எல்லாம் எங்கே போய் புரட்சி நடத்துவார்களோ?

பின் குறிப்பு 1 : இந்தியாவில் உருவாகும் அத்தனை பிரச்சினைகளிலும் மாதர் சங்கம் தலையிடவேண்டும் என்று சொல்வதன் மூலம் மற்ற கட்சிகள், அவர்களின் அமைப்புக்கள் எல்லாம் வேஸ்ட் பீஸ்கள் என்று ஒப்புதல் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.

பின் குறிப்பு 2: அடி வாங்கிய பெண்ணுக்கு ஆதரவாகத்தான் இப்படி பொங்குகிறார் போல என்றுதான் நினைத்திருந்தேன். அந்த நபர் இன்று ஒரு பதிவு போட்டிருந்தார். பீப் சாங்கில் எந்த ஒரு வார்த்தை பீப் சத்தத்தால் மறைக்கப்பட்டு இருந்ததோ, அந்த வார்த்தையை எழுதாமல், ஆனால் அதை நீங்கள் புரிந்து கொள்ள உதவும் விதத்தில் வேறு ஒரு வார்த்தையை (சம்பந்தமே இல்லாமல்) பயன்படுத்தியிருந்தார். இதிலே உலகத்தரமான அரசியல் பற்றியெல்லாம் உபதேசம்.

பிறகுதான் புரிந்தது. அவர் கோபமெல்லாம் பீப் சாங்கிற்கு எதிராக போராடியதுதான். அவ்வளவு நல்ல தரம் வாய்ந்த ரசிகர். இவங்க எல்லாம்தான் அரசியலில் தரம் வேண்டும் என்று எழுதுவாங்க. போலிகள்.  

பின் குறிப்பு 3 : நான் குறிப்பிட்ட நபர் மட்டுமல்லாமல் பல்வேறு பீப்சாங் பார்ட்டிகள், மீம்ஸ் போடுமளவு பொங்கியுள்ளனர் என்பது தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் பதிவு மூலம் தெரிந்தது. அவர் கொடுத்த பதிலடிதான் மேலே உள்ள படம்.

Tuesday, September 6, 2016

ஒரிஜினல் கலைஞருக்கு பாராட்டுக்கள்

கீழேயுள்ள புகைப்படத்தை முக நூலில் ஒரு நண்பர் பகிர்ந்து கொண்டிருந்தார்.




எழுபது நாட்கள் காத்திருந்தது இந்த நொடிக்காக என்று அந்த படத்தை முதலில் பதிவு செய்தவர் எழுதியிருந்தார்.

ஆஹா, அற்புதமாக இருக்கிறதே என்று பார்த்தால் அங்கேயே ஒரு கமெண்ட்.

இந்தப் படம் இந்த வருடத்தின் துவக்கத்தில் இந்த இணைய தளத்தில் இருந்தது என்று. 



அடுத்தவர் உழைப்பை காப்பியடித்து தனது போல காண்பித்துக் கொள்ள நினைப்பவர்கள் எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை. 

இந்த படத்தை எடுத்த ஒரிஜினல் கலைஞர் யாரோ அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

Tuesday, July 19, 2016

கடவுளை அங்கஹீனம் செய்பவர்கள் பக்தர்களா?

 
மரம் வெட்டிகள் என்ற பட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து பறிக்க இந்து முன்னணி தீவிரமாக முயற்சிக்கிறது என்று கீழே உள்ள கடிதம் சொல்கிறது. 
 
 
 
இயற்கையை நாசமாக்குவதில் எவ்வளவு ஆர்வம் பாருங்கள்.  கானகத்தை பாதுகாக்க முயற்சிப்பவர்கள் மீது அபாண்டமாக பழி போடுவதற்கும் அதன் மூலம் மக்கள் மத்தியில் நச்சைக் கக்கவும் தயாரால இருக்கிறார்கள்.
 
அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டியுள்ளது. 
 
திருவண்ணாமலை மலை முழுவதுமே சிவனின் வடிவம் என்று சொல்லித்தான் கிரிவலம் செல்கிறார்கள். மலையில் உள்ள மரங்களை வெட்டுவது என்பது சிவனின் அங்கங்களை வெட்டி அவரை முடமாக்கும் வேலை அல்லவா? 
 
கடவுள் பெயரால் பிழைப்பு நடத்தும் ஒரு அமைப்பு கடவுளை அங்கஹீனம் செய்யலாமா? 
 
இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். 
 
இவர்களின் பக்தி என்பது எவ்வளவு பெரிய மோசடி என்று.