Thursday, April 2, 2020

சல்யூட் என் தோழனே!



கொரோனா  வைரஸ் தாக்குதலில் தேசம் தவிக்கும் சூழலில் இத்துயர் துடைக்கும் பணியில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்க வேண்டும் என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறைகூவல் அளித்துள்ளது.  இன்றுள்ள ஊரடங்கு நிலையால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள முறை சாரா தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஐந்து லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளது. தமிழகம், கேரளா, புதுவை உள்ளடங்கிய தென் மண்டலத்தினைச் சேர்ந்த தோழர்கள் ஒரு நாள் ஊதியம் அளிக்க வேண்டுமாறு எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.  அலுவலகம் வர இயலாமல் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழல் இருந்தாலும் இந்த அறைகூவலுக்கு எங்கள் கோட்டத் தோழர்கள் முழுமையாக தோள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

எங்கள் புதுவை 1 கிளைத் தோழர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள் சிலருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உள்ளனர்.  அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.






பெங்களூர், மசூலிப்பட்டிணம் உள்ளிட்ட இடங்களில் இது போன்ற பணி நடந்து வருகிறது. 






இப்பணிகள் குறித்து எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் அமானுல்லாகான் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள பதிவையும் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்களின் தமிழாக்கத்தையும் கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



*I am proud of my comrades in Bangalore and all other centres across the country for the wonderful work they are doing to provide relief to those severely impacted by the present day unprecedented crisis. It is a great sight to see our comrades helping the poor and unorganised risking their own safety. I salute all my comrades for their courage of conviction.*

*It is this conviction that has made AIIEA a unique trade union.*

*Long back, the great revolutionary and icon of working class movement, Che Guevara had said
 “what we have done is practicing charity, and what we have to practice is solidarity”.*

*Therefore, the work we are doing is not charity but an expression of solidarity. Solidarity does not end with immediate relief to the unfortunate but it leads to a demand for justice to them all. Solidarity means demanding a dignified life to these less fortunate citizens of our great country. Solidarity in real sense means holding the government responsible and accountable for its actions and forcing it to ensure a dignified life for the poorest of the poor.*

*Let us continue our good work with this understanding.*

*Greetings to all my comrades. Wish all of you the best. Please stay safe.*

*Amanulla Khan*


*சல்யூட் என் அருமை தோழர்களே!* -

*அமானுல்லா கான்*
**********************************

*இதுவரை கண்டிராத ஓர் அசாதாரண சூழலில் பெங்களூர் மற்றும் நாட்டின் பல மையங்களில் எனது அருமைத் தோழர்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறார்கள்.  அப்பணியை மேற்கொண்டு வரும் எனது அன்புத் தோழர்களை எண்ணி பெருமை அடைகிறேன்.*

*தங்கள் சொந்த உடல் நலனைக் கூட இடருக்கு ஆளாக்கி ஏழைகளுக்கும், அமைப்பு சாரா உழைப்பாளிகளுக்கும் நமது தோழர்கள் உதவுகிற காட்சி மிகப் பெரிது. இந்த துணிச்சல் மிக்க அர்ப்பணிப்பிற்காக அப் பணியில் ஈடுபட்டுள்ள அத்தனை தோழர்களுக்கும் தலை வணங்குகிறேன். இத்தகைய அர்ப்பணிப்பே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை தனித்துவம் மிக்கதாக திகழச் செய்துள்ளது.*

*நீண்ட காலத்திற்கு முன்பு, பெரும் புரட்சியாளரும் உழைப்பாளி மக்களின் ஆதர்ச ஆளுமையுமான சே குவாரா சொன்னார். நாம் கொடையாக செய்கிறோம்; ஆனால் தோழமை உணர்வாக அது அமைய வேண்டும் என்றார். ஆகவே நாம் செய்வதும் கருணை நிறைந்த பணி அல்ல. இது தோழமை ஒன்றிணைவின் வெளிப்பாடு.*

*தோழமை ஒன்றிணைவு உடனடி உதவிகளோடு முடிந்து விடக் கூடியதல்ல. அது அனைவருக்கும் நீதி கோருவதற்கு வழி வகுப்பதாகும். தோழமை மிக்க ஒன்றிணைவு என்பது இம் மாபெரும் நாட்டில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட எளிய மக்களுக்கு கௌரவமான வாழ்க்கையை கோருவதாகும். தோழமை மிக்க ஒன்றிணைவு என்பதன் மெய்யான பொருள், அரசாங்கத்தை அதன் செயல்களுக்கு பொறுப்பாக்குவதும், ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு ஆளாக்குவதும் ஆகும். அதன் மூலம் வறியவர்களிலும் வறியவர்க்கு கௌரவமான வாழ்க்கையை உறுதி செய்வதாகும்.*

*நம்முடைய நற்பணியை இப் புரிதலோடு தொடர்வோம். எனது தோழர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும். உடல் நலத்தோடு பாதுகாப்பாய் இருங்கள்.*

***********
*அமானுல்லா கான்*
முன்னாள் தலைவர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.




No comments:

Post a Comment