Showing posts with label நேர்மை. Show all posts
Showing posts with label நேர்மை. Show all posts

Sunday, April 21, 2024

பாஜகவில் நேர்மை இல்லை --சங்கி ஒப்புதல்

 


மதுரையில் பாஜக வேட்பாளராக தோற்றுப்போன போலிப் பேராசிரியர் ராம.சீனு பேசிய காணொளி கீழே உள்ளது.


இது கண்டிப்பாக புதிதல்ல. பழைய வீடியோ இது என்பது எனக்கும் நன்றாகத் தெரியும். அதனால் இது பழசு என்று எந்த அனாமதேயமோ போலிப் பெயர் உளவாளி துரோகிகளோ பின்னூட்டம் இட வேண்டாம்.

என் கருத்து ஒன்றுதான்.

நேர்மையான தலைவர் என்றால் சங்கியால் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு தலைவரைத்தான் உடனடியாக சொல்ல முடிகிறது. கம்யூனிஸ்டுகள்தான் நேர்மையோடு இணைக்கப்பட்டுள்ளனர்.

அவரால் ஆட்டுக்காரன் பெயரையோ, பொன்னார், டமில் மூசிக் என்றோ சொல்ல முடியவில்லை அல்லவா! அது போதும்,

Sunday, September 7, 2014

வி.கே.சிங்கை ஜனாதிபதி பணி நீக்கம் செய்ய வேண்டும்

 http://images.jagran.com/pranab_sl_31-03-2012.jpg
சர்ச்சைக்குரிய மத்திய மந்திரியும்  வயதை மாற்றி கூடுதலாக ஒரு வருடம்  பணி நீட்டிப்பிற்காக முயற்சி செய்த முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்கை ராணுவ தீர்ப்பாணையம்  கடுமையாக கண்டித்துள்ளது.

சுயநலம் காரணமாகவும் தனக்கு பிடிக்காதவர்  ராணுவ தளபதியாக வரக்கூடாது என்பதற்காகவும்  அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி  துறைவாரி நடவடிக்கை  எடுத்தார், அது வெறும் பழிவாங்கும்  நடவடிக்கை என்று ஏற்கனவே  வி.கே.சிங் பற்றி  ராணுவ அமைச்சகமே  பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்துள்ளது. அது அவர் மோடியின் அமைச்சராக பதவியேற்ற பின்பு அருண் ஜெய்ட்லியின் அமைச்சகம் தாக்கல் செய்ததுதான்.

இப்போது இன்னொரு உயர் அதிகாரி மீதும் பழிவாங்குதல் நடவடிக்கையை வி.கே.சிங்  செய்துள்ளார் என்று ராணுவ தீர்ப்பாணையம்  கண்டித்துள்ளது. 

வெட்கம், மானம் உள்ளவராக இருந்தால் அவர் முதல் சம்பவத்தின் போதே ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் எந்த நெறிமுறையையும் மோடியிடமோ  அவரது சகாக்களிடமோ எப்போதுமோ எதிர்பார்க்க முடியாதே!

இப்போதும்  தனது தவறை ஒப்புக் கொள்ளாமல் ராணுவ தீர்ப்பாணையத்தின் மீதுதான் வி.கே.சிங் பாய்ந்துள்ளார். இப்போதும் அவரை பதவியிலிருந்து நீக்க மோடி முன்வரப் போவதில்லை. 

அதனால்  தவறுக்கு மேல் தவறு செய்துள்ள வி.கே.சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டிய பொறுப்பு  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடையது. குறைந்தபட்ச நேர்மையையாவது உறுதிபடுத்த அவர் செயல்பட வேண்டிய தருணம் இது.