நேற்றைய தினத்தந்தி நாளிதழில் வெளியான மதி கெட்டவரின் கார்ட்டூனில் அறிஞர் அண்ணாவின் சிலையின் தலையில் கொரோனா வைரஸை போட்டு வரையப்பட்டிருந்தது.
அந்த கார்ட்டூனுக்கு விளம்பரம் தர வேண்டிய அவசியமில்லை என்பதால் இங்கே பகிர்ந்து கொள்ளவில்லை.
திமுகவும் மற்றவர்களும் தெரிவித்த கண்டனத்தால் தினத்தந்தி இன்று வருத்தம் தெரிவித்துள்ளது. எந்த அரசியல் தலைவரையும் மனதில் கொண்டு வரையவில்லை என்று சொல்லி இருப்பது வடி கட்டிய பொய்.
அறிஞர் அண்ணாவை தன் கட்சியின் பெயரிலும் கட்சியின் கொடியிலும் தாங்கி இருக்கிற அ.இ.அ.தி.மு.க ஏன் வாய் திறக்கவே இல்லை?
மதி என்றால் அவ்வளவு பயமா?
அண்ணாவைத்தானே நக்கலடித்துள்ளார், எஜமான் மோடியை அல்லவே என்று அலட்சியமா?
மதி சொன்னது போல கட்சிக் கொடியிலும் அண்ணாவின் முகத்தை மாற்றாமல் இருந்தால் அதுவே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment