Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Saturday, March 29, 2025

அந்த 36 % எங்கடா?

 


அடுத்த முதலமைச்சர் யார் என்றொரு கருத்துக் கணிப்பு நடந்ததாக ஒரு தகவலை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளது.


இதுதான் ஊடக தந்திரம்.

நால்வருடைய வாக்குகளை கூட்டிப்பார்த்தால் 64 % தான் வருகிறது. மீதமுள்ள 36 % எங்கே போனது? இறுதி முடிவு முன்னே பின்னே வந்தால் அதை சமாளிப்பதற்காக இவர்கள் விட்டு வைத்துள்ளதுதான் அந்த 36 %.

இந்த கருத்து கணிப்பை மட்டும் ஆட்டுக்காரன் கண்களில் காண்பித்து விடாதீர்கள். முதல்வர் கனவில் மிதப்பவனின் இதயம் நொறுங்கி விடப் போகிறது.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் சிகண்டிகள்,  புதிய தலைமுறைக்கு (பாஜக கூட்டணியில் பச்சைமுத்து எனும் பாரிவேந்தர் இருந்த போதிலும் கூட)  என்ன முத்திரை குத்தப் போகிறார்களோ!

Sunday, February 9, 2025

டெல்லி : முட்டாள்தனமான தோல்வி

 


டெல்லி தேர்தலில் பாஜக வென்றுள்ளது. வழக்கமான மோசடி வேலைகள், ஜூம்லாக்கள், வெறுப்பு மற்றும் பொய்ப்பிரச்சாரம் இவற்றையும் தாண்டி பாஜக வெல்ல ஒரு முக்கியக்காரணம் இந்தியா கூட்டணியின் ஒற்றுமையின்மை.

ஆணவமும் முட்டாள்தனமும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் என இரு கட்சிகளையுமே ஆட்கொண்டதன் விளைவு.

கடந்த சில வருடங்களாகவே ஆம் ஆத்மி அரசுக்கு எண்ணற்ற இடைஞ்சல்கள், 

கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஊழல் பேர்வழிகள் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.

மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஏழு தொகுதிகளிலும் பாஜக வென்றது.

இதை விட முக்கியமாக பாஜகவின் முக்கியக் கூட்டாளி தேர்தல் ஆணையம்.

இவையெல்லாம் தெரிந்திருந்தும் தனித்து போட்டியிட்டதை ஆணவம் என்றோ முட்டாள்தனம் என்றோதான் குறிப்பிட முடியும்.

அந்த மூடத்தனத்தின் விளைவை  கீழேயுள்ள புள்ளி விபரம் சொல்லும்.

கட்சி                                  வெற்றி பெற்ற தொகுதிகள்            வாக்கு சதவிகிதம்

பாஜக                                                 48                                                            47.2 %

ஆம்ஆத்மி                                       22                                                            43.6  %

காங்கிரஸ்                                        0                                                               6.3 %

மற்றவர்கள்                                      0                                                              2.9 %

ஆக வழக்கம் போல பாஜக எதிர்ப்பு வாக்குகள்தான் அதிகம். அவை சிதறுண்டதால் வழக்கம் போல பாஜக வென்று விட்டது. அவ்வளவுதான்.                 

Saturday, January 18, 2025

தேர்தல் ஆணையம் வேஸ்டா ஆட்டுக்காரா?

 


ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவும் போட்டி போடவில்லை. விஜய் கட்சியும் போட்டி போடவில்லை. பாஜகவும் போட்டி போடவில்லையாம்.

 தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் போட்டியிடப் போவதில்லை என்பது ஆட்டுக்காரனின் வாதம்.

 திருமங்கலம் ஃபார்முலா படிதான் இடைத்தேர்தல் நடக்கும் என்பது ஊரறிந்த உண்மை. அப்படி முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டியது யார் பொறுப்பு?

 முழுக்க முழுக்க தேர்தல் ஆணாய்யத்தின் பொறுப்பு.

 தேர்தல் ஆணையம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? தேர்தல் பாதுகாப்புகளுக்காக அனுப்பப்படும் துணை ராணுவப் படைகள் யார் கட்டுப்பாட்டில் உள்ளது?

 தேர்தல் ஆணையம் சுயேட்சையான அமைப்பு என்றால் அதை விட குரூரமான நகைச்சுவை எதுவுமில்லை. மோடி “பொறுக்கி” எடுத்த தேர்தல் ஆணையர்கள் அதனை மோடி ஆணையமாக எப்போதோ மாற்றி விட்டார்கள்.

 துணை ராணுவப்படைகள் மத்தியரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

 ஆளும்கட்சி முறைகேடுகள் செய்யுமாயின் அதனை கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத அமைப்புதான் தேர்தல் ஆணையம் என்பது ஆட்டுக்காரன் அறிக்கையில் ஒளிந்திருக்கிற உண்மை.

 தமிழ்நாட்டு மக்களை அரசுக்கு எதிராக மாறி விட்டார்கள். 2026 ல் திமுக முற்றிலுமாக அழிக்கப்படும் என்றுதான் ஆட்டுக்காரனும் சங்கிகளும் அன்றாடம் பிதற்றி வருகிறார்கள்.

 அப்படி தமிழ்நாட்டு மக்கள் திமுக மீது வெறுப்பாக இருக்கிறார்கள் என்றால் அதை பயன்படுத்திக் கொள்வதுதானே ஒரு எதிர்க்கட்சி செய்ய வேண்டிய வேலை!

 பிறகு ஏன் பதுங்குகிறார்கள்?

 இடைத்தேர்தலில் கண்டிப்பாக தோற்று விடுவோம் என்பது ஆட்டுக்காரன், எடப்பாடி, விஜய் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். இடைத்தேர்தல் தோல்வி 2026 பொதுத்தேர்தலையும் பாதிக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

 அந்த பயத்தை காண்பித்துக் கொள்ளாமல் முறைகேடுகளின் மீது பழியைப் போட்டு தோல்வியிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்பதுதான் உண்மை.

 

 

Wednesday, December 18, 2024

ஆளில்லா கடையில், வாய்ப்பில்லா மசோதாவை மோடி???

 


அரசியல் சாசனத்தை திருத்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்பதும் அப்படி நிறைவேற்ற வாய்ப்பில்லை என்பதும்  தெரிந்தும் ஏனய்யா மோடி, "ஒரே நாடு, ஒரே தேர்தல் " மசோதாவை கொண்டு வந்தீர்? 

உங்க ஆட்களிலேயே எத்தனை பேர் ஓடிப் போவார்கள் என்பதை அறிந்து கொள்ளவா?

பிகு: இது ஒற்றை மீமோடு முடிக்கிற விஷயமில்லை. விரிவான பதிவு விரைவில் . . .

Sunday, November 24, 2024

நான் வேலூர் எம்.பி. Meta AI காமெடி

 


முகநூலைப் பார்த்தால் ஒரே Meta AI யிடம் தங்களைப் பற்றி கேள்வி கேட்டு அது சொல்லும் பதிலை பதிவு செய்வதுதான்.

ஆசை யாரை விட்டது!

நானும் முயற்சி செய்தேன்.

அது சொன்ன பதிலை பாருங்கள்

இதில் மிகப் பெரிய காமெடி என்னவென்றால் 2009 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறவே இல்லை. திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் வேட்பாளராக நின்ற எம்.அப்துல்ரஹ்மான் வெற்றி பெற்றார். 

பெயர், கட்சி என்று எதுவுமே சரியில்லை. இந்த நுண்ணறிவை முழுமையாக எதற்கும் நம்ப வேண்டாம் என்றுதான் சொல்ல விழைகிறேன்.

Meta இத்தேர்தல் குறித்த சில நினைவுகளை கிளறி விட்டது.

2009 மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு நுண் பார்வையாளராக சென்றிருந்தேன். நான் அமர்ந்திருந்த மேஜையில் மொத்தம் 18 சுற்றுகளில் முதல் சுற்றில் மட்டும்தான் அதிமுக வேட்பாளர் எல்.கே.எம்.பி வாசு முன்னிலை பெற்றிருந்தார். மற்ற அனைத்து சுற்றுக்களிலும் முஸ்லீம் லீக் வேட்பாளர்தான் முன்னிலை பெற்றார்.

சில மோசடிப்பேர்வழிகள் தேர்தலை பயன்படுத்தி அவரிடமிருந்து லம்பாக ஒரு தொகையை ஆட்டையப் போட்டிருந்தார்கள் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். பாவம் அவர்!

பிகு: Meta AI ஐ ஏன் நம்ப வேண்டாம் என்பதற்கு இன்னொரு உதாரணமும் சொல்கிறேன். வாட்ஸப்பில் அறிமுகமான போது அதை கேட்ட கேள்விக்கு அப்போது சொன்ன பதிலும் அதே கேள்விக்கு இப்போது சொன்ன பதிலும் கீழே






Tuesday, October 8, 2024

வென்றாலும் மோடிக்கு தோல்விதான் . . .

 


ஊடகங்களின் கருத்துத் திணிப்பு முடிவுகள் பாதி சரி, பாதி தவறு என்றாகி விட்டது. ஹரியானாவில் பாஜக ஜெயித்து விட்டது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ்- சி.பி.எம் கூட்டணி வென்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் காண்பித்த அநியாய கால தாமதம், பாஜக வழக்கமான மோசடிகளை அரங்கேற்றியதா என்ற சந்தேகத்தை உருவாக்கியது.

ஜம்மு காஷ்மீரில் பாஜக தோற்றது மகிழ்ச்சியான ஒன்று. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வெற்றி பெற முடியாது என்பதற்காக இந்து மத உணர்வுகளை உசுப்பேற்றி வெற்றி பெறலாம் என்பதால் மறு சீரமைப்பு என்ற பெயரில் ஜம்மு பகுதியில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கியது. ஆனால் அந்த சதி வெற்றி பெறவில்லை.

அரசியல் சாசனப் பிரிவு 370 ஐ நீக்கியதை காஷ்மீர் மக்கள் ஏற்கவில்லை என்பதுதான் தேர்தல் முடிவு சொல்லும் தீர்ப்பு. அதனால் இது மோடிக்கு மிகப் பெரிய தோல்வி.

அதனை விட மோடியை மன ரீதியாக பாதிக்க வைக்கும் தோல்வி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் வெற்றி. நாட்டின் பெருமையை விட காம வெறியனே முக்கியம் என்று மோடி வகையறாக்களால் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பறிக்கப்பட்ட வினேஷ் போகத் ஹரியானா சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராகியுள்ளார். 

மக்கள் பிரதிநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

 பிகு: ஒரு அனாமதேய அறிவு கெட்ட முண்டம் பாஜகவிற்கு பாதகம் என்றாலும் அது எப்படி கருத்து திணிப்பு என்று கேட்டிருந்தது.  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் எல்லாமே மோடி மீடியாக்களால் மோடிக்கு ஆதரவான மன நிலையை மக்கள் மனதில் உருவாக்குவது என்று அந்த தத்திக்கு புரியவில்லை. இந்த தத்தி முட்டாள்கள் எல்லாம் பெயர் சொல்ல தைரியமில்லாத கோழைகள். அடையாளம் தெரிந்தால் அடி வாங்கி மிதி படுவோம் என்ற அச்சத்தில் ஒளிந்து கொள்ளும் இரண்டு கால் தெரு, சொறி நாய்கள். 

Sunday, October 6, 2024

கருத்துத் திணிப்பே பாஜகவிற்கு பாதகமென்றால்?

 


ஹரியானா மாநிலம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் (இப்படி சொல்ல வைத்தது மோடியின் அயோக்கியத்தனங்களில் ஒன்று) தேர்தல் முடிவுகள் நாளை வரும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இரண்டு மாநிலங்களிலும் (மோடி ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்கினால் நாமும் அப்படித்தான் எழுத வேண்டுமா என்ன!) காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.

எப்போதுமே எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவிற்கு ஆதரவான கருத்துத் திணிப்பாகத்தான் அமைந்துள்ளது.

அப்படிப்பட்ட கருத்துத் திணிப்பே பாஜக வெற்றி பெறாது என்று சொன்னால் உண்மை நிலவரம் இன்னும் மோசமாக இருக்குமோ!

நாளைய முடிவுகள் பாஜகவிற்கு மரண அடியாய் அமையட்டும். 

Monday, September 23, 2024

இலங்கையின் திருப்பம் இனிதாகட்டும்

 


இலங்கையின் அரசியலில் ஒரு மிகப் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட ஒருவர் ஜனாதிபதியாகி உள்ளார்.  ஜே.வி.பி மற்றும் 27 இடதுசாரிக் கட்சிகள், ஜனநாயக அமைப்புக்கள்,  NPP என்ற பெயரில்  இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி கண்டன. அனுராகுமார் திஸநாயகா புதிய ஜனாதிபதியாகி உள்ளார். கொல்லப்பட்ட  முன்னாள்  ஜனாதிபதி சஜித் பிரேமதாசாவும் தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கேயும் தோற்றுப் போயுள்ளனர். ராஜபக்சே குடும்ப வாரிசு எங்கோ ஒரு மூலையில் . . .

ஜே.வி.பி யின் கடந்த காலம் களங்கமானது. இடதுசாரிக் கட்சியாக துவங்கி அதே தடத்தில் கால் பதித்து பின் தடம் மாறி இனவெறி அமைப்பாக தமிழர்களை வேட்டையாடிய ரத்த வரலாறு அவர்களுடையது. ஆனால் ஆயுதங்களை கைவிட்டு ஜுஅனநாயகப் பாதைக்கு திரும்பினார்கள். ராஜபக்சே குடும்பத்திற்கு எதிரான கோபத்தை மக்களின் போராட்டமாக ஒருங்கிணைத்ததுதான் இன்று அனுரா குமார் திஸநாயகாவை ஜனாதிபதி  ஆக்கியுள்ளது.

ஆனாலும் தமிழர்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை வரவில்லை என்பதால்தான் அப்பகுதிகளில்  அனுராவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரிடத்திலும் ஒற்றுமையை உருவாக்குவதும் அனைருக்குமான வளமான எதிர்காலத்தை கட்டமைப்பதே புதிய அரசின்  இலக்கு என்று சொல்லியுள்ளார்.

மிகவும் சிறந்த சொல் செயல் என்பார்கள். எனவே சொல் செயல் வடிவம் காணட்டும்.

புதிய ஜனாதிபதிக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. இலங்கையின் பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும். சர்வதேச நிதி அமைப்பின் விதிகளுக்கு முந்தைய அரசுகள் செய்த சரணாகதிகள் இன்னும் ஒரு மிகப் பெரிய சவால். ஊழல் மலிந்து போன நாட்டில் அதனை கட்டுப்படுத்துவது ஆகப் பெரிய சவால்.  இந்த முடிவை விரும்பாத இந்தியா கொடுக்கப் போகும் சிக்கல்கள் எத்தனையோ?

இந்த சவால்களை சந்திக்கும் திறனை மக்களின் ஆதரவு என்ற ஆயுதம் கொடுக்கும்.

இந்த ஆட்சி சோஷலிச ஆட்சியாக மலரும் என்ற அதீத எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு கிடையாது. ஒரு மக்கள் நல ஆட்சியாக இருந்தாலே போதும்.

அந்த இலக்கை  நோக்கி ஆட்சி முன்னேறட்டும். இலங்கையின் இடதுசாரி துருப்பம் இனிதாக  அமையட்டும்.

Monday, September 16, 2024

ப்ளாக்மெயிலா மோடி?

 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மாநில அந்தஸ்தை மோடியால்தான் தர முடியும் என்று பில்லா ரங்கா கிரிமினல்களில் இளைய கூட்டாளியான அமித்ஷா முதலில் கூற, பிறகு முதல் கிரிமினலுமான மோடியும் சொல்லி விட்டார்.

ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறித்தவர்களே அவர்கள்தான். அந்த குற்ற உணர்வே இல்லாமல் இப்படி பேசுகிறார்கள் என்று எரிச்சல் படுவதோடு மட்டும் நிற்க முடியாது.

பாஜகவுக்கு வாக்களிக்கவில்லையென்றால் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை தர மாட்டோம் என்று மோடியும் அமித்ஷாவும் காஷ்மீர் மக்களுக்கு விடுக்கும் மிரட்டலாகத்தான் தெரிகிறது.

அதிகாரத்திற்காக எந்த அளவும் கீழிறங்கக் கூடிய கட்சி பாஜக.

காஷ்மீர் மக்கள் அவர்களை தோற்கடிக்க வேண்டும். 

Tuesday, July 16, 2024

பத்ரிநாதரும் பாஜகவை கைவிட்டார்

 


தெய்வங்கள், அவர்களுக்கான கோயில்கள் ஆகியவற்றை வைத்து அரசியல் செய்யும் பாஜகவிற்கு முக்கியமான கோயில்கள் அமைந்துள்ள தொகுதிகளிலேயே தோல்விதான் கிடைத்து வருகிறது. முந்தைய சம்பவம் அயோத்தியில். தற்போதைய சம்பவம் உத்தர்கண்டில் உள்ள பத்ரிநாத்தில்.

13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் 11 தொகுதிகளில் இப்போது பாஜக தோற்றதல்லவா! அதில் ஒன்று பத்ரிநாத்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு ராஜேந்திரசிங் பண்டாரி என்பவர் தாவினார். அதனால் அங்கே இடைத்தேர்தல். இப்போது பாஜக சார்பாக நின்ற பண்டாரியை வாக்காளர்கள் தோற்கடித்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்துள்ளார்கள்.

மக்கள் அருள் மட்டுமல்ல, கடவுள் அருள் கூட பாஜகவிற்கு குறைந்து கொண்டே வருகிறதே!


Friday, July 5, 2024

இங்கிலாந்தில வட போச்சே!

 


பாவம் சங்கிகள்,  சோகத்தில் மூழ்கி விட்டார்கள்

"எங்காளு ஒத்தரு நம்மை ஆண்ட இங்கிலாந்தையே ஆளுகிறாரு பார்த்தாயா" என்று யாரை வைத்து வெட்டி உதார் விட்டுக் கொண்டிருந்தார்களோ, அந்த ரிஷி சுனக் தோற்றுப் போய் விட்டார். அவரும் தோற்று அவர் கட்சியையும் தோற்க வைத்து விட்டார்.

தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று விட்டது என்றும் மகிழ்ச்சியடைய முடியாது. ஏனென்றால் கட்சியின் பெயரில்தான் தொழிலாளர் உள்ளதே தவிர, தொழிலாளர் ஆதரவு கொள்கைகள் எல்லாம் எப்போதோ காணாமல் போய் விட்டது.

அக்கட்சியின் முற்போக்கு முகமாக இருந்த ஜெர்மி கோர்பின் சுயேட்சையாக வெற்றி பெற்றதுதான் ஆறுதல். 

ரிஷி சுனக், அவரது மனைவி, வாரம் முழுதும் வேலை பார்த்து கம்பெனிக்காகவே சாகனும் என்று சொன்ன அவர் மாமனார் ஆகியோரைக் கொண்ட பீற்றல் பதிவுகள் வராது என்பது மகிழ்ச்சி.  

Tuesday, June 11, 2024

நாற்பதினால்தான் இதெல்லாம் சாத்தியம் . .

 


முந்தையதொரு பதிவில் சொல்லியிருந்தது போல நாற்பது எம்.பிக் களால் என்ன பயன் என்பது பற்றி கல்வியாளர் தோழர் இரா.எட்வின் எழுதியிருந்த பதிவை பகிர்ந்து கொள்கிறேன்

40/40 எடுத்து என்ன கிழித்துவிடப் போகிறீர்கள் என்ற கேள்வி பரவலாக வைக்கப்படுகிறது

இந்தக் கேள்வியைத்தான் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டு மக்களிடத்திலே கொண்டுபோகப் போகிறார்கள்

இதன் மூலம் எங்களால் மந்திரியாக்கக்கூட முடியவில்லை. எங்களுக்கு வாய்ப்புத் தந்தால்தானே அமைச்சராக்கி உங்களுக்கு நல்லது செய்ய முடியும்

என்ற நேரேஷனைத்தான் அவர்கள் ஆரம்பிக்கிறார்கள்

வேறொன்றும் இல்லை

முதலில் நாங்கள் நாற்பதல்ல

இருநூற்றி முப்பத்தி சொச்சம் நாங்கள்

இந்த எண் என்ன செய்திருக்கிறது என்றால்

என்ன சொன்னீர்கள்?

நானூறு கொடுங்கள்

ஒரே நாடாக்குகிறோம் என்றீர்கள்

அதை எங்கள் எண் உடைத்திருக்கிறது

அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றத் துடித்தீர்கள்

இப்போது அதுகுறித்துப் பேசிப் பாருங்கள்

சந்திரபாபு நாயுடு சாரே பதில் சொல்வார்

நாட்டின் பெயரை மாற்றுவோம் என்றீர்கள்

எங்கே முயற்சி செய்யுங்கள்

இஸ்லாமியர்களை அடக்குவோம் என்றீர்கள்

பாங்குச் சத்தமே இல்லாமல் செய்வோம் என்றார் ஒரு முதல்வர்

தைரியம் இருந்தால் இப்போது அப்படிப் பேசிப் பாருங்கள்

மதத்தின் பெயரால் இட ஒதுக்கீடு கூடாது என்றீர்கள்

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று தேர்தல் அறிக்கையில் சொன்னவர் கருணை இருக்கும்வரைதான் நீங்கள் பதவியில்

பிரதமர், அது இது எல்லாம் எங்களுக்குத் தேவை  இல்லை

எங்கள் எண்ணத்திற்கு மாறாக  நீங்கள் ஆசைப் பட்டதை செய்ய முடியாமா உங்களால்

 இப்போது சொல்லுங்கள்

 வென்றது நீங்களா? நாங்களா?        

Sunday, June 9, 2024

தமிழ்நாட்டிலிருந்து வெளியேறுங்கள்

 


ஆட்டுக்காரன் ஒரு மினி அவதார புருஷன் என்று நம்பி தமிழ்நாட்டில் அனைத்து இடங்களையும் பாஜகவே வெல்லும் என்று வாயில் உமிழ்நீர் வடிய காத்துக் கொண்டிருந்த சங்கிகளுக்கு இறுதி முடிவு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. நாற்பது இடங்களையும் இந்தியா அணி வெற்றி கொண்டதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தங்களின் துயரத்தை, ஏமாற்றத்தை, விரக்தியை, வெறுப்பை  வழக்கம் போல வசை பாடி, கேலி செய்து, சிறுமைப்படுத்தி  தணித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

இந்த  ஐந்து நாட்களில் நான் பார்த்த சில …

தேங்காயை உருட்டிக் கொண்டிருக்கும் நாய் படத்தை போட்டு அதன் மேலே 40/40 என்று எழுதுவது.

யானை தன் தலையில் மண்ணை வாரி இறைப்பது போன்ற காணொளியை போட்டு அதற்கு தமிழ்நாட்டு மக்கள் என்று தலைப்பு கொடுப்பது.

“இவங்களை யாருய்யா மறுபடியும் மறுபடியும் வர வைப்பது” என்று நாடாளுமன்ற கேண்டீன் ஒப்பந்ததாரர் சொல்வது போல மீம்.

நாற்பதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி.

தமிழக முடிவு மீண்டும் விழலுக்கு இறைத்த நீர் என்றொரு பதிவு.

டாஸ்மாக், கஞ்சா போதையில் மூழ்கியுள்ள தமிழன் 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டு விட்டான்.

சந்திரபாபு நாயுடுவும்  நிதீஷ் குமாரும் மு.க.ஸ்டாலினை நக்கலாக பார்ப்பது போன்றதொரு மீம்.

மீனாட்சியம்மன் கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கறதுக்கெல்லாம் லட்சம் லட்சமா குவியறாங்க, ஆனா கடவுள் இல்லைன்னு சொல்ற கம்யூனிஸ்டுக்கு வோட்டு போடறாங்க . . .

இப்படி ஏராளம், ஏராளம்.

இப்படிப்பட்ட பதிவுகள் மூலம் சங்கிகள் சாதிக்க நினைப்பது என்ன?

“ஆப் கி பார், சாக்கோபார்” என நானூறு இடங்களுக்கு மேல் பெறுவோம் என்று கொக்கரித்தவர்கள்  தனிப் பெரும்பானமையை பெற முடியாததை, . .

 கருத்துக்கணிப்பு என்ற பெயரில் வெளியான கருத்து திணிப்பை நம்பி குதூகலித்து கொண்டாடியதை . . .

 இந்தியா அணி உருவாகும் வரை ஓரத்தில் ஒதுக்கி வைத்திருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கட்சிகளின் தயவை நம்பியே ஆட்சி நடத்த வேண்டிய அவலத்தை . . .

 கடந்த முறை நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வித்தியாசத்தில் வென்ற மோடி இந்த முறை லட்சத்து சொச்சம் வித்தியாசம் என்ற அளவிற்கு குறைந்ததை, . . .

 முதல் மூன்று சுற்றுக்களில் பின்னடைவு ஏற்பட்டு மரண பயம் உருவானதை, . ..

 சீதையாய் தோன்றிய முன்னாள் நடிகை ஸ்மிர்தி இராணி உட்பட 13 மத்திய அமைச்சர்கள் தோற்றதை . . .

 காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அணி வென்றதன் மூலம் அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்பட்டதை அம்மக்கள் ஏற்கவில்லை என்பதை . . .

 மணிப்பூர் மாநிலத்தின் இரண்டு தொகுதிகளிலும் இந்தியா அணி வென்றதன் மூலம் கலவரக்காரர்களுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்ததை . . .

 ராமர் கோயில் அமைந்த அயோத்தியிலேயே பாஜக தோற்றதை . . .

 காங்கிரஸ் இல்லாத பாரதம், கழகம் இல்லாத தமிழகம் என்ற கூச்சலை மக்கள் கொஞ்சமும் மதிக்காததை . . .

 பாஜக இல்லாத தமிழ்நாடு, பஞ்சாப், புதுச்சேரி என்ற நிலை ஏற்பட்டதை . . .

 இப்படி  இந்த தேர்தல் சங்கிகளுக்கு கொடுத்த அடி மிகவும் பலமே. மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் மறைக்கவே

 சங்கிகள் தமிழ்நாட்டு முடிவுகளை நக்கல் செய்கிறார்கள்.

 நாற்பது என்ன செய்யும் என்று கல்வியாளர் தோழர் இரா.எட்வின் எழுதிய பதிவை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

 தமிழ்நாட்டு மக்கள் சங்கிகளை நிராகரித்து விட்டனர். அதை அவர்கள் ஜனநாயகத்தை பயன்படுத்தி செய்தனர்.

 கடந்த மூன்றாண்டுகளில்  எத்தனை எத்தனை பொய்களை உலவ விட்டீர்கள்!

 2000 கோயில்கள் இடிக்கப்பட்டதாக பதிவு போட்ட ஒருவர் கூட பட்டியலை கொடுடா என்றவுடன்  பதில் பேசாமல் பதுங்கி விட்டனர்.

 தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேரும் எந்நேரமும் போதையிலேயே இருப்பதாக பிதற்றிக் கொண்டிருந்தார்கள்.

 தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் வேலை வெட்டி செய்ய விரும்பாத சோம்பேறிகள் என்பதால்தான் வெளி மாநில தொழிலாளிகள் இங்கே வருகின்றனர் என்று அந்த உழைப்புச் சுரம்டலுக்கு  புதிய வர்ணம் அடித்தார்கள்.

 இப்படி சங்கிகள் தமிழ்நாட்டில் பிடுங்கியது எல்லாமமே தேவையில்லாத ஆணிகள்தான்.

 அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை  தோற்கடித்து விட்டார்கள். இதை உணராமல் மேலும் மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வக்குழந்தை ஒடிஷாவில்  திருட்டுப்பட்டம் கட்டி இழிவு படுத்தியது போல நீங்களும் மீண்டும் மீண்டும் தமிழர்களை இழிவு படுத்திக் கொண்டுதான் இருப்பீர்கள் என்றால் உங்களுக்கு இரண்டு  வார்த்தைகளை மட்டும் சொல்கிறேன்.

 தமிழ்நாட்டிலிருந்து வெளியேறுங்கள்.

 எங்களை இழிவுபடுத்திக் கொண்டு, எங்களிடம் பொய்களை பேசிக் கொண்டு, எங்களுக்கிடையில் பிரிவினையை தூண்ட முயலும் சில்லறைகளான நீங்கள் இங்கே தேவையே இல்லை.

 வெளியே போ . . .

 

Thursday, June 6, 2024

மோடியை கைவிட்ட ராம் லல்லா

 


மக்களவைத் தேர்தலில் மிகச்சிறப்பான, மகிழ்ச்சியான ஒரு முடிவு உத்தரப் பிரதேச மாநிலம் ஃபைஸாபாத் தொகுதி முடிவுதான்.

இந்துக்களுக்கு மத உணர்வுகளை தூண்டி, இல்லையில்லை மத வெறியூட்டி தன் பக்கம் ஈர்க்க பாஜக பயன்படுத்திய முக்கியமான விஷயம் அயோத்தி ராமர் கோயில்தான். பாபர் மசூதியை இடிக்க ரத்த யாத்திரை போனார்கள். பின்பு பாபர் மசூதியை இடிக்கவும் செய்தார்கள்.

அனைத்து நீதிமன்றங்களும் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. பாபர் மசூதி இடிப்பு குற்ற வழக்கிலிருந்தும் தப்பினார்கள். மசூதி இருந்த இடமும் அவர்களுக்கே தரப்பட்டது.

ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லி போன தேர்தல் வரை ஓட்டு கேட்டார்கள். இந்த முறை ராமர் கோயில் கட்டிவிட்டோம் என்று சொல்லி ஓட்டு கேட்டார்கள்.

ஆனால்

ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி ஃபைஸாபாத் தொகுதியில் உள்ளது. அந்த தொகுதியில் பாஜக தோற்று சம்ஜ்வாடி கட்சியின் வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வென்று விட்டார்.

ராமர் கோயிலை வைத்து செய்த அரசியல் அயோத்தியிலேயே எடுபடவில்லை என்பதைத்தான் இது உணர்த்துகிறது.

அயோத்தி மக்களின் தேவை கோயில் அல்ல, தங்களின் வாழ்வியல் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதுதான்.

அதனால்தான் அங்கே சமஜ்வாடி பெருமளவு வென்றுள்ளது. புல்டோசர் ராஜாவிற்கு பிரேக் போட்டு விட்டார்கள்.

போன தேர்தலின் போது கங்கை தன் கனவில் சொன்னதால் வாரணாசியில் போட்டிட்டதாக கதை விட்டார். அவங்க கட்சிக்கு இந்த முறை ஓட்டு போடாதீங்கன்னு குழந்தை ராமர் உபி மாநில மக்களின் கனவில் சென்று சொல்லியிருப்பாரோ! தன்னை வைத்து அரசியல் செய்வதை அவரும் எத்தனை நாள்தான் சகித்துக் கொள்வார்!

பிகு : அயோத்தியில் தோன்றிய  வெறுப்பிற்கு காரணம் என்னவென்ற ஒரு தகவலை கீழே படியுங்கள்.


 

அயோத்தி தோல்வி காரணமாக அம்மக்கள் மீது எப்படி வெறுப்பு கொட்டப் படுகிறது என்பதை இந்த பதிவில் படியுங்கள்.