Showing posts with label சிற்பம். Show all posts
Showing posts with label சிற்பம். Show all posts

Wednesday, April 16, 2025

எரிக்கப்பட்ட “ராமையாவின் குடிசை” மீண்டும்.


 



 மதுரையில் நிறைவுற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற அனுபவம் குறித்து     என்ற பதிவில் ஏற்கனவே எழுதியிருந்தேன்.

 அந்த பதிவில் குறிப்பிட்டபடி  ஒரு முக்கியமான அம்சத்தை இப்பதிவில் எழுதுகிறேன்.

 கீழத்தஞ்சை மாவட்டம், வெண்மணியில் முதியவர்களும், பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர், கோபாலகிருஷ்ண நாயுடு என்ற வெறி பிடித்த மிருகத்தின் தலைமையில் குழுமியிருந்த பண்ணையார்கள் மற்றும் அவர்களின் அடியாட்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ராமையா என்பவரின் குடிசைக்குள் அடைக்கலம் புகுகின்றனர்.

 அந்த கொலைகாரக்கூட்டம் அந்த குடிசையை தீ வைத்து கொளுத்துகிறது. உள்ளே இருந்த அனைவரும் கருகி இறக்கிறார்கள். தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு தாய் அக்குழந்தையை வெளியே வீச, அக்குழந்தையை வெட்டி மீண்டும் தீக்குள் போட்டார்கள் தீயவர்கள். குஜராத் கலவரத்தின் போது வயிற்றுக்குள் இருந்த  சிசுவை வெளியே எடுத்து தீயில் போட்ட கொடூரத்திற்கு இவர்கள்தான் முன்னோடிகள்.

 எரிக்கப்பட்ட ராமையாவின் குடிசையை மதுரை மாநாட்டு கண்காட்சியில் வடிவமைத்து நம் உள்ளத்தை பதற வைத்திருந்தார்கள். எரிந்து போன குடிசை, கருகிக் கிடக்கும் உடல்கள், அடங்காத புகை என்று அன்றைய துயரத்தை  உணரக்கூடிய விதத்தில் அமைத்திருந்தார்கள்.



 அந்த தியாகிகளின் நினைவைப் போற்றுகிற வகையில்தான் தியாகிகள் ஸ்தூபியும் அமைந்திருந்தது.



 இந்த இரண்டு கலைப்படைப்புக்களை மட்டுமல்ல

 பிரதிநிதிகள் மாநாட்டு மேடையில் கம்பீரமாக இருந்த காரல் மார்க்ஸையும் உருவாக்கிய படைப்பாளி சிற்பி தோழர் கா.பிரபாகரன்.





 தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் மேலும் பல சிறந்த படைப்புக்களை அவர் உருவாக்குவார்.

 2022 ல் நாங்கள் வேலூரில் தென் மண்டல மாநாடு நடத்திய போது தியாகிகள் சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் அவர்தான். இப்போது அந்த தியாகிகள் சின்னம் வெண்மணி புதிய நினைவகத்தில் கம்பீரமாக உள்ளது. (முதலில் உள்ள புகைப்படத்தில் அச்சின்னத்தோடு இந்த ஆண்டு வெண்மணிக்கு சென்ற வேலூர் கோட்டத் தோழர்கள் உள்ளோம்)

 நமக்கு பழக்கமானவர் செய்த படைப்பு என்று வருகிற போது மனதுக்குள் அது ஒரு தனி மகிழ்ச்சிதான்.

Monday, December 26, 2022

வெண்மணியில் எங்களின் . . .

 


ஆகஸ்ட் மாதம் எங்களின் தென் மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்றது. மாநாட்டுப் பணிகள் தொடர்பாக திட்டமிட்டுக் கொண்டிருந்த போது எங்கள் கோட்டத் தலைவர் தோழர் எஸ்.பழனிராஜ் ஒரு ஆலோசனையை முன்வைத்தார்.

 “மாநாட்டு வளாகத்தில் அனைவரையும் ஈர்ப்பது போன்ற ஒரு கலை வடிவை அமைக்க வேண்டும். மாநாட்டிற்கு வருகிற அனைத்து தோழர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள தூண்டும் விதத்தில் அந்த வடிவம் அமைய வேண்டும். வேலூர் மாநாட்டின் நினைவாக அந்த புகைப்படம் இருக்கும்”

 என்பதுதான் அந்த ஆலோசனை.

 பல சகோதர அமைப்புக்களின் நிகழ்வுகளுக்கு சிலை வடித்துக் கொடுத்திருக்கிற சிற்பி தோழர் கா.பிரபாகரன் அவர்களை அணுகினோம். அவர் வடித்திருந்த ஒரு மாதிரி ஸ்தூபியைக் காண்பித்தார். இதை எந்த அமைப்பாவது ஃபைபரில் அமைத்துக் கொடுத்தால் கீழ்வெண்மணியில் அமைந்துள்ள புதிய வெண்மணி நினைவாலயத்தில் வைக்கலாம் என்று சி.ஐ,.டி.யு சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் அ.சவுந்தரராஜன் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார். நீங்கள் ஏன் இதனை மாநாட்டில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த பயன்படுத்திக் கொண்டு பின்பு வெண்மணிக்கு அளித்து விடலாமே என்ற முன்மொழிவை வழங்கினார்.

 தலைமையகத்தில் உள்ள பொறுப்பாளர்கள் விவாதித்த போது அந்த முன்மொழிவு முழு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கியது.

 மாநாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாகவே தியாகிகள் நினைவுச் சின்னம் அமைந்தது. அனைவராலும் பாராட்டப்பட்ட படைப்பு அது.  அவ்வளவு அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் தோழர் பிரபாகரன் வடிவமைத்துக் கொடுத்திருந்தார். 

 நேற்று வெண்மணி தினத்தன்று அந்த தியாகிகள் ஸ்தூபி வெண்மணி நினைவாலயத்தில் எங்களால் அர்ப்பணிக்கப்பட்டது.

 


வெண்மணிக்கு வந்த தோழர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாகவே அமைந்திருந்தது. வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சுலி செலுத்த வந்த எங்கள் வேலூர் கோட்டத் தோழர்கள் அனைவரோடும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி ஒரு அரை மணி நேரம் போல காத்திருந்தோம். அந்த நேரத்தில் மட்டும் குறைந்த பட்சம் 500 தோழர்கள் தனியாகவோ குழுவாகவோ படமெடுத்துக் கொண்டதை பார்க்க முடிந்தது. நிறைவாகவும் இருந்தது.

 




வெண்மணித் தீயில் மடிந்த 44 தியாகிகளின் நினைவைப் போற்ற எங்களால் முடிந்த சிறிய பணி என்ற உணர்வோடு வெண்மணியிலிருந்து புறப்பட்டோம்.

 

 

 

Thursday, July 30, 2020

நிஜமல்ல . . .


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த படம் இது.



இந்தப் படத்தில் நீங்கள் காண்பது நிஜப் பெண்மணி அல்ல. சிலை. தலை முடி மட்டும் ஒரு பெண்ணுடையது. ஆடை நிஜமான துணி. மற்றபடி சிலிக்கானில் செய்யப்பட்ட சிலை தத்ரூபாக ஒரு மூதாட்டியைப் போலவே சுருக்கங்களோடும் அவ்வளவு கச்சிதமாக உள்ளது.

இதை உருவாக்கிய சாம் ஜின்க்ஸ் என்ற கலைஞனைப் பார்த்து பிரமித்துப் போயுள்ளேன்.


Friday, February 10, 2017

மணல் கோட்டை - கின்னஸ் - நோ அரசியல்

கண்டிப்பாக இது அரசியல் பதிவல்ல. தமிழகத்தில் உள்ளவர்கள் மனதில் கட்டியுள்ள மணல் கோட்டைகளுக்கு கொஞ்சமும் தொடர்பு கிடையாது.

மணல் சிற்பக் கலைஞரான  ஒடிசா மாநிலத்தின்  சுதர்ஸன் பட்னாயக் உலகிலேயே மிகவும் உயரமான மணல் கோட்டையை பூரி கடற்கரையில் செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 

அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்