Wednesday, April 15, 2020

இன்னொரு நல்ல தங்காள் இனியும் வேண்டாம்


வறுமை தாங்க முடியாமல் தன் குழந்தைகளை கிணற்றில் வீசி எறிந்த நல்ல தங்காள் கதை படித்திருக்கும். பல விதங்களிலும் துயரம் துரத்தியதால் அப்படி வாழ்க்கையின் ஓரத்திற்கே கல்யாணி ஓடினாள் என்று கலைஞர் வசனத்தை நடிகர் திலகம் பேசியதையும் பார்த்துள்ளோம். 

சந்தனு ராஜாவிற்கு பிறந்த முதல் ஏழு குழந்தைகளை கங்கை, கங்கை நதியிலேயே வீசிக் கொன்றதாகத்தான் மகாபாரதமே துவங்கும்.

கதையாக, புராணமாக, திரைப்படமாக பார்த்தது நிஜத்திலும் நடந்துள்ளது.

யோகி சாமியார் அருள் பாலிக்கும் உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தாய் தன் ஐந்து குழந்தைகளை கங்கையில் மூழ்கடித்து கொன்றுள்ளார். தாள இயலாத பசியின் காரணமாக அந்த கொடுமையான முடிவிற்கு அவர் வந்துள்ளார்.

அவரது பிரச்சினையின் காரணம் வறுமை அல்ல, கணவருடனான மோதல்தான் என்று நிறுவ யோகி சாமியார் அரசு முயன்று கொண்டிருக்கிறது.

அப்படியே வறுமை என்றாலும் அது ஊரடங்குக்கு முந்தையது என்றாவது நிரூபிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்துகிறது அந்த அரசு.

திருவாளர் யோகி அவர்களே, 

மாடுகள் மீது காண்பிக்கும் அக்கறையில் ஒரு சதவிகிதத்தையாவது மக்கள் மீது காண்பியுங்கள்.

வாரணாசி தொகுதியில்  குழந்தைகள் புல்லைத் தின்ற அவலத்தை வெளியிட்ட பத்திரிக்கையாளர் மீது வழக்கு போட்ட சுறுசுறுப்பை,

உங்கள் தவறை விமர்சித்த பத்திரிக்கையாளரை மிரட்ட ஊரடங்கு காலத்தில் கூட லக்னோவிலிருந்து டெல்லி வரை போலீசை (அதை தனியாக எழுத வேண்டும்) அனுப்புவதில் காண்பிக்கிற வேகத்தை

கொஞ்சமாவது மக்களின் மீதும் காண்பியுங்கள்.

இன்னொரு நல்ல தங்காள் இனியும் வேண்டாம்.




No comments:

Post a Comment