Showing posts with label வதந்தி. Show all posts
Showing posts with label வதந்தி. Show all posts

Thursday, February 26, 2026

முந்தித்தருவதில் என்ன அவசரம்? ஆர்வம்?


 சமூக வலைத்தளக் காலம் வந்ததிலீருந்தே ஒரு மோசமான போக்கு உருவாகி விட்டது.

"உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்று தொலைக்காட்சிகள் அறிவிப்பது போல 

பல செய்திகளை தாங்கள்தான் முதலில் தெரிவித்தோம் என்று பெருமை பெற பலரும் ஆசைப்படுகிறார்கள்.

மொக்கை செய்தி தொடங்கி மரணச் செய்தி வரை முதலில் தெரிவித்து R.I.P போடுவதில் பயங்கர ஆர்வம்.

அதிலும் ஆளுமைகள் யாராவது மோசமான நிலைமையில் இருந்தால் அந்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போய் விடுகிறது.

ஜெ விஷயத்தில் அந்த வேலையை ரங்கராஜ் பாண்டே செய்தார்.

தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு நேற்று முன் தினமே ஆர்.ஐ.பி போட ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படித்தான் டிசம்பர் இறுதியில்  இயக்குனர் பாரதிராஜா பற்றி வதந்தி பரப்பினார்கள். அவர் இன்னும்  மருத்துவமனையில் சிகிச்சையில்தான் உள்ளார்.

சமூக வலைத்தளத்தில் செயல்படுவோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

நீங்கள் பதிவிடும் எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டு பதியுங்கள்.

நீங்கள் ரங்கராஜ் பாண்டே கிடையாதல்லவா,  வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாமல் முதலைத் தோலுடன் செயல்பட . . .

Tuesday, February 11, 2025

ஆட்டுக்காரனையும் எச்.ராசாவையும் கைது செய்யுங்கள்

 


தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்ட காவிக்கயவர்கள் இப்போது திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து புதிய வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசின் சொதப்பல்கள் காரணமாக மதுரையில் ஒரு கூட்டத்தை கூட்டிய தெனாவெட்டில் மீண்டும் பல வதந்திகளை பரப்பத் தொடங்கி உள்ளனர்.

அந்த வதந்தி என்னவென்று கீழேயுள்ள படங்கள் சொல்லும். (படங்கள் உதவி திரு முகமது பஷித்)

மிக முக்கியமாக கடைசியில் உள்ள படங்களை பார்க்கவும்.











ஆக, காவிக்கயவர்கள் போட்டோஷாப் மோசடி செய்து மதுரையில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

முதலமைச்சர் உறுதியாக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சங்கிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்ய வேண்டும்.

சங்கி குணாம்சத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சேகர் பாபுவின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.

கலவரத்தை தூண்ட சதி செய்யும் எச்.ராசா, ஆட்டுக்காரன், காடேஸ்வரா சுப்புரமணி, அர்சுன் சம்பத் போன்றோரை கைது செய்து கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்கள் வெளியே வராதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியார் மண் என்பதை வாயால் மட்டும் சொல்லிக் கொண்டிராமல் செயலிலும் காண்பிக்க வேண்டும், 

Saturday, November 11, 2023

ஓயாத உருட்டுக்கள்.

 மூன்று வருடம் முன்பு எழுதிய பதிவையே மீண்டும் பகிர்கிறேன். ஏனென்றால் ராஜராஜனிடமிருந்து தோழர் ஹோசிமின் வீரத்தை கற்றுக் கொண்டதென்ற கட்டுக்கதை மீண்டும் சுற்றுக்கு வந்துள்ளது. அதனால் அப்போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் வந்துள்ளது.

 பொய்யை மீண்டும் மீண்டும் பரப்பி அதை உண்மை என நம்ப வைக்கும் முயற்சியை சங்கிகள் கைவிடவே மாட்டார்கள் போல. 

 இதுதான் ஹோசிமின் சமாதியில் ராஜராஜ சோழன் பற்றி எழுதியது என்று ஏன் இன்னும் போட்டோஷாப் செய்யவில்லை என்றுதான் தெரியவில்லை.

 

முன்னே சிவாஜி, இப்போ ராஜராஜன்



கீழே உள்ள செய்தியை  முதலில் படியுங்கள் . . .

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)

போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...

இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???

அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..

ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...

யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...

வேறு யாருமில்லை.. 

கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்... 

வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.

சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...

அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...

""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""

இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...

சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..

நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....

அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...

உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என  வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..

அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...

 இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...

இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...

இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..

 இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...

என்னாவது...???

ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. 
நம் சந்ததிக்கு.... .... 

படித்ததில் பிடித்தது

இது போன்ற செய்தியை இதற்கு முன்பாக படித்தது போன்ற நினைவு இருக்கிறதா?

இந்த செய்தியை படித்துள்ளேன். ஆனால் ராஜ ராஜ சோழனுக்குப் பதிலாக சத்ரபதி சிவாஜியின் கொரில்லா போர் தந்திரம்தான் என் வெற்றிக்கு காரணம் என்றல்லவா படித்திருக்கிறேன் என்றுதானே சொல்கிறீர்கள்!

ஆமாம். மூன்று வருடத்திற்கு முன்பாக இதே கதை சத்ரபதி சிவாஜி பெயரில் உலாவிக் கொண்டிருந்த்து. அதில் எக்ஸ்ட்ரா பிட்டாக அந்த வெளியுறவு அமைச்சர் ஒரு பெண் என்றும் சேர்த்திருந்தார்கள். இதெல்லாம் டுபாக்கூர் செய்தி என்றும் தோழர் ஹோ சி மின் சமாதியில் அப்படி சத்ரபதி சிவாஜி பற்றியெல்லாம் எதுவும் எழுதப்படவில்லை, வியட்னாம் வெளியுறவு அமைச்சராக எந்த காலத்திலும் ஒரு பெண் இருந்ததில்லை என்றும் வியட்னாம் அரசு தெளிவு படுத்தி விட்டது.

இப்போது அதே கதை ராஜ ராஜ சோழனைப் பற்றி உலவத் தொடங்கி உள்ளது. 

ஹோ சி மின் மார்க்ஸையும் லெனினையும் மாவோவையும் படித்துள்ளார் என்று தகவல் இருக்கிறது. சிவாஜி பற்றியோ ராஜராஜன் பற்றியோ அவர் அறிந்திருந்தாரா என்று தெரியாது. தெரியாவிட்டாலும் அது பெரிய விஷயமில்லை. 

எனக்கு ஒரே ஒரு கேள்விதான்.

சத்ரபதி சிவாஜிக்கோ, ராஜ ராஜ சோழனுக்கோ இப்படிப்பட்ட கட்டுக்கதைகள் மூலம் பெருமை சேர்க்க அவர்கள் என்ன மோடியா? 

அவர்கள் ஏற்கனவே வரலாற்று நாயகர்கள்தானே! 

பிகு ; வரலாற்று நாயகர்களை தத்ரூபமாக நம் கண் முன்னே நிறுத்தியவர் நடிகர் திலகம் அல்லவா! அதனால்தான் அந்த கதாபாத்திரங்களாக அவர் தோன்றியதை பயன்படுத்திக் கொண்டேன்.

பிகு 2 

தோழர் ஹோசிமின் உடல் புதைக்கப்படவில்லை, எரிக்கப்படவில்லை. மாறாக தோழர் லெனின் உடல் போல ஹனாய் நகரில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 

ஹனாய் நகரத்தில் உள்ள அவர் சிலையும் நினைவகமும் பாதுகாக்கப்பட்டுள்ள அவர் உடலும்  கீழே உள்ள புகைப்படங்களில் ...




Tuesday, November 7, 2023

கலவரத்துக்கு அலையும் காவிக்கயவர்கள்

 


சங்கிகள் நேற்று புதிதாக அவிழ்த்து விட்டுள்ள ஒரு வதந்தி கீழே . . .



மேலே உள்ளது மசூதி சின்னமா?

தலைக்கு மேலே கைகளை குவித்து வணங்குவது போல வடிவமைக்கப்பட்டது காவிப் பொறுக்கிகளுக்கு மட்டும் மசூதியாக தெரிகிறது. அவனுக்கு இன்னும் போதை தெளியவில்லை போல . . .

இந்த இலச்சினையை இப்போது திமுக அரசு மாற்றியதா?

1958 லிருந்தே இருக்கும் இலச்சினைதான்,

2017 ல் A1 காலத்தில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்று உள்ளது. இன்னொரு சான்றும் உள்ளது.



ஒரு சங்கி அயோக்கியன் வதந்தியை உருவாக்குவான். ஆயிரம் சங்கி முட்டாள்கள் அதை பரப்புவார்கள்.

அத்தனை கயவர்களையும் உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினால்தான் சரிப்படும்.

Sunday, January 16, 2022

சதிகாரர்கள் எங்கே? ஒளிந்தார்களா?

 


பிபின் ராவத் இறந்து போகக் காரணமான ஹெலிகாப்டர் விபத்து, திடீரென ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் நிகழ்ந்ததே தவிர, சதியோ அல்லது விமானியின் தவறோ அல்லது விமானத்தின் கோளாறோ கிடையாது என்று முப்படைகள் நடத்திய விசாரணை அறிக்கை தெளிவாகக் கூறி விட்டது.

பொது அமைதியை சீர்குலைக்க

பாகிஸ்தான் சதி, திமுக உடந்தை,

சீன நாட்டு சதி

என்றெல்லாம் வதந்தியை உருவாக்கிய அயோக்கியர்கள் மாரிதாஸ், ஸ்டான்லி ராஜன் போன்ற சதிகாரர்கள் இப்போது எங்கே?

அந்த அயோக்கியர்கள் உருவாக்கிய கட்டுக்கதையை நம்பி பரப்பிய முட்டாள் சங்கிகள் இப்போது எங்கே?

எல்லோரும் இப்போது எங்காவது பத்திரமாக ஒளிந்து கொண்டிருப்பார்கள். அடுத்த வதந்தி வரும் போது அதை பரப்புவார்கள். ஏனென்றால் சங்கிகள் என்பவர்கள் மூளை அற்ற முட்டாள்கள்.


Friday, January 14, 2022

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க!

 


 வாட்ஸப்பில் வந்த செய்தி கீழே உள்ளது. இது வரை நான்கு பேரிடமிருந்து வந்து விட்டது.



 ஆஹா, இது என்ன அற்புதம் என்றெல்லாம் இன்ஸ்டன்டாக வியக்காதீர்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பனிரெண்டு நாட்களில் இரண்டு நாட்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை. இந்த செய்திக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்க ஒரு ஓம் சிம்பல் வேறு.

 எந்த செய்தியை அனுப்பினாலும் அதை பார்வேர்ட் செய்வதற்கு நாலு பேர் இருந்தால் ஏப்ரல் முதல் நாள் மட்டுமல்ல, எல்லா நாள்களுமே முட்டாள் தினம்தான்.

 இது பரவாயில்லை மொக்கை செய்திதான். ஆனால் பிரிவினையைத் தூண்டுகிற  ஏராளமான  தவறான செய்திகள் வேண்டுமென்றே பரப்பப் படுகின்றன. பாஜக அதற்காகவே ஐ.டி செல் என்று தனியாக வைத்துள்ளது.

 வந்த அனைத்தையும் அப்படியே பார்வேர்ட் செய்வது என்ற வியாதி நம்மை பீடித்தால் ??????

 எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு

 என்ற குறளை வாட்ஸப்பில் வந்த செய்தியை பார்வேர்ட் செய்வதற்கு முன்பாக நினைத்து,  நிற்க அதற்குத் தக.

Saturday, April 3, 2021

த.நா ரெய்டு, மேற்கு வங்க வதந்தி . .

 


வதந்திகள் எப்படி பரப்பப் படுகிறது பாருங்கள்!

கீழே உள்ள படங்களை எங்களது மேற்கு வங்கத் தோழர் அனுப்பினார்.

 






அத்துடன் அனுப்பிய செய்திகளில்

 

700 கோடி ரூபாய் ரொக்கம்,

260 கிலோ தங்கம்

3000 கோடி ரூபாய்க்கு கணக்கில் வராத சொத்துக்களின் ஆவணங்கள்

 ஆகியவை நேற்று மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்டது என்ற தகவலும் சேர்ந்தே வந்தது.  இதுதான் அவரது பிரம்மாண்டமான மாளிகை என்றும் சொல்லப் பட்டிருந்தது.

 இது வெறும் வதந்தி, அங்கே இருந்த பணம் வெறும் ஒரு லட்சத்து சில்லறை என்றும் அதையும் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அது தனி மாளிகை அல்ல, ஒரு அபாட்மெண்ட் என்றும் அவருக்கு விளக்கினேன்.

 மேற்கு வங்கத்தில் இந்த செய்திதான் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார். எனக்கு செய்தி வந்த க்ரூப்புக்களில் உங்கள் செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் எத்தனை லட்சம் பேருக்கு இந்த செய்தி பரவியுள்ளதோ! அதை எத்தனை பேர் நம்பினார்களோ என தெரியவில்லை என்றார்.

 தமிழகத்தின் செய்தியை மேற்கு வங்கத்தில் ஏன் பரப்ப வேண்டும் என்ற என் கேள்விக்கு அவரே பதிலளித்தார்.

 இப்படிப்பட்ட கட்சியோடுதான் சி.பி.எம் கூட்டணி வைத்துள்ளது என்று இச்செய்திக்கு எதிர்வினையாக சிலர் பின்னூட்டம் போடுகிறார்கள். சி.பி.எம் மிற்கு எதிராக பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூட இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கலாம் என்று அவர் முடித்தார்.

 நல்ல செய்தி அடுத்த தெருவை அடையும் முன்பு வதந்தி உலகை மூன்று முறை சுற்றி வந்து விடுகிறது. பாதிக்கப்பட்டவர்களால் தங்கள் நிலையை விளக்கும் முன்பே அவர்கள் பெயர் டோட்டல் டேமேஜ். வதந்திகளின் நோக்கம் அதுதானே!

Monday, June 29, 2020

எவ்வளவு தடவைடா?

பாவம் எஸ்.ஜானகி அவர்கள்!



அவர் பாட்டிற்கு பாடிக் கொண்டிருந்தார். 

முதுமை காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். 

எவ்வளவு முறை அவருக்கு முடிவுரை எழுதி வதந்தி பரப்புவீர்கள்?

இது போன்று வதந்தியைப் பரப்பியவர்கள் அந்த நிமிடத்தில் அல்ப சந்தோஷம் அடையலாம். கடைசியில் அவர்களே அடையாளம் இல்லாமல் அழிந்து போவார்கள்.

Saturday, February 23, 2019

படம் எடுக்க விடுங்கய்யா . . .

நேற்று முன் தினம் இரவு.

கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் சமயத்தில் வானைப் பார்த்தால் 

தூரத்து நிலவும் அருகில் இருந்த தென்னையும் அழகாகத் தெரிந்ததால் 

அதை அலைபேசியில் கைப்பற்றி வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து (கண்ணில் தெரிந்த அழகு காமெராவில் வரவில்லை என்பது வேறு விஷயம்) 

போனை எடுத்தால்



அந்த கடைக்காரர் கல்லாவை அப்படியே விட்டு விட்டு ஓடி வந்து விட்டார்.

"என்ன சார், நிலாவுல பாபா படம் தெரியுதுன்னு சொல்றாங்களே சார், அதுக்குத்தானே போட்டோ எடுக்கறீங்க"

என்று அவர் கேட்க

பக்கத்து கடைக்காரரும் 

"ஆமாம் சார், வாட்ஸப்பில் கூட வந்தது"

என்று ஆமோதிக்க

"ஆளை விடுங்கப்பா, மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில நான் இனிமே நிலாவை  போட்டோவே எடுக்க மாட்டேன்"

என்று ஓடி வந்து விட்டேன.

வாட்ஸப்பில் வருவதெல்லாம் நிஜம்தான் என்று நம்பும் ஆட்கள், மோடி நல்லவர், வல்லவர் என்பதைக் கூட நம்பத்தானே செய்வார்கள்! 

பாவம் அப்பாவிகள் !!!!!


Saturday, January 26, 2019

மாலை மலரும் ஏமாந்து போச்சே!!!!




வதந்திகளை விரும்பிப் பரப்பும் வாட்ஸப்பில்தான் கீழே உள்ள இந்த செய்தியை சில மாதங்கள் முன்பாக பார்த்தேன்.



அப்போது இதை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை.

பிறகு இதே செய்தி எழுத்தாளர் சுஜாதா எழுதியதாக கொஞ்சம் வேகமாகவே வலம் வந்தது. பத்திரிக்கைகளில் கதைகளும் கட்டுரைகளிலும் எழுதிய ஸ்ரீரங்கத்துக்காரர் ஆன சுஜாதா, படித்து முடித்ததும்  அரசு வேலைக்குப் போய் விட்டார் என்பதும் அவர் தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எல்லாம் வேலை பார்க்கவில்லை என்பதும் தெரியாமல் ஃபார்வர்ட் செய்து கொண்டிருந்தது தமிழ்ச்சமூகம்.

இப்போது பார்த்தால் சுஜாதா சொன்னதாகவே மாலை மலர் பத்திரிக்கை பிரசுரித்துள்ளது. 

ஒரு பத்திரிக்கை இப்படி வாட்ஸப் செய்திகளை நம்பி பிரசுரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இதை ஒரிஜினலாக எழுதியவர் யாரோ? 

அவர் எழுதியதை சுஜாதா எழுதியதாக அவருக்கும் யாராவது ஃபார்வர்ட் செய்திருப்பார்கள் அல்லவா!

Monday, March 19, 2018

நிழலைக் கூட நெருங்க முடியாதவர்கள் ஏமாறுவார்கள் . . .




தமிழ்நாட்டில் உள்ளவர்களின் பெரும்பாலானவர்கள் கேள்வி கூட பட்டிராத ஒரு தொலைக்காட்சி சேனல் (அதன் பெயரை இங்கே குறிப்பிட்டு அதற்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை)  சில தினங்களுக்கு முன்பாக எல்.ஐ.சி நிறுவனம் பற்றி ஒரு அபத்தமான அவதூறு செய்தியை வெளியிட்டது.

இந்தியாவின் முதன்மையான நிதி நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீடுகள் பெரும்பாலும் மத்திய அரசின் பத்திரங்களில்தான். பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்படுகிறது. ஃபார்ச்சூன் 200 என்று அழைக்கப்படுகிற  வலிமையான நிலையில் உள்ள கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்யப்படுமே தவிர வெறும் லெட்டர்பேடு கம்பெனிகளில் எல்லாம் முதலீடு செய்யப்படாது.

பங்குச்சந்தையில் எல்.ஐ.சி யின் முதலீடு மிகவும் பழமையான (Conservative) அணுகுமுறை கொண்டதாக உள்ளதென்றும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து அது வெளி வந்தால்தான் தங்களுக்கு வசதி என்று பல பண முதலைகள் உமிழ் நீர் ஒழுக காத்திருக்கிற அளவு கடுமையானது.

எந்த ஒரு நிறுவனத்திலும் 15 % க்கும் மேலான பங்குகளை எல்.ஐ.சி வைத்திருக்கக் கூடாது என்று இன்சூரன்ஸ் ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணையம் நிபந்தனை போட்டுள்ளது.  இதன் காரணமாக 15 % க்கு மேல் இருந்த சில நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டிய கட்டாயம் கூட ஏற்பட்டது.

அதனால் ஒரு வேளை எல்.ஐ.சி  பங்கு வைத்திருக்கிற எந்த ஒரு நிறுவனம் திவால் ஆனால் கூட  எல்.ஐ.சி யின் இழப்பு என்பது 15 % க்கு மேல் இருக்காது.  கற்பனைக்குதிரையை தட்டி விட்டு கட்டுக்கதையை பரப்பிய அந்த தொலைக்காட்சிக்கு இந்த விதியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படி இருக்க இப்படி பொய்ச்செய்தி வெளியிட என்ன காரணம்?

இரண்டு காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு.

தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்தியாவில் கடை விரித்து பத்தாண்டுகளுக்கு மேலான பின்பும் அவற்றால் எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை. நம்பிக்கையின் மறு பெயர் எல்.ஐ.சி என்பதால் ஒரு சில அதி மேதாவிகளைத் தவிர வேறு யாரும் அவற்றை சீண்டுவதில்லை. இன்சூரன்ஸ் சந்தையில் (Market Share)  71 % எல்.ஐ.சி யின் வசம் உள்ளதென்றால் அதற்கடுத்த நிலையில் உள்ள நிறுவனத்தின் சந்தைப் பங்கு 2.1 % மட்டுமே. 

நடப்பு நிதியாண்டுக்கான புது வணிக இலக்கான 38,000 கோடி ரூபாய் முதல் பிரிமிய வருவாயை 15.03.2018 அன்றே எல்.ஐ.சி எட்டி விட்டது. வருடத்தின் இறுதி நாட்கள் எப்போதுமே பரபரப்பானவை. வணிகம் குவியும் காலகட்டம் அதுதான்.  ஏதேனும் வதந்தியை கிளப்பி அதன் மூலம் எல்.ஐ.சி வணிகத்தை சிதைக்க முடியுமா என்ற சதி ஒரு காரணமாக இருக்கலாம். உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் லாபத்திற்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் அல்லவா?  அந்த சதியின் கருவியாக  ஒரு சில எலும்புத்துண்டுகளுக்காக அந்த தொலைக்காட்சி அப்படி செயல்பட்டிருக்கலாம்.

யாராலும் சீண்டப்படாத அந்த தொலைக்காட்சி தன்னை பிரபலப் படுத்திக் கொள்ள, மொக்கை தொலைகாட்சியாக இருந்தாலும் தனக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தின் விளம்பரங்கள் கிடைக்க இந்த பிளாக்மெயில் வேலையை செய்திருக்கலாம்.

இரண்டு காரணங்களும் கூட இணைந்தே இருக்கலாம்.

கவிதைக்கு வேண்டுமானால் பொய் அழகாக இருக்கலாம்.
ஆனால் பொருளாதாரச் செய்திகளை தருவதில் பொய் என்பது இருக்கவே கூடாது.

“திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது” என்று பட்டுக்கோட்டையார் பாடியது போல

“இது திட்டம் போட்டு வதந்தியை பரப்புகிற கூட்டம்”

எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியாதவர்கள், இப்படி வதந்திகளை உருவாக்கி அதன் மூலமாவது ஆதாயம் அடைய முடியும் என்று நினைத்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக ஏமாந்து போவார்கள். 

ஏனென்றால் அவர்களை யாரும் எப்போதும் நம்பப் போவதில்லை. 

பொய்களை பரப்புகிறவர்கள் தங்களுக்கு வைத்திருக்கிற பெயர்தான் மிகப் பெரிய காமெடி!

Sunday, March 18, 2018

ஸ்டீபன் ஹாக்கிங்கை கொல்லாதீர் . . .



மறைந்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்க் பற்றி இரு கட்டுக்கதைகள் உலாவுகிறது

அவர் தனது இறுதித்தருணத்தில் போப்பாண்டவரைச் சந்தித்ததாகவும் அவரது கைகளைப் பற்றிக் கொண்டு 

"நான் இப்போது கடவுளை நம்புகிறேன்" என்று சொன்னதாகவும் 

அதுதான் அவருடைய கடைசி வார்த்தை 

என்பதாகவும் ஒரு கட்டுக்கதை.

தன் வாழ்நாள் முழுவதும் நாத்திகராகவும் கடவுள் மறுப்பாளராகவும் வாழ்ந்த ஒரு அறிவியலாளரை இப்படி சிறுமைப்படுத்துவது கேவலமான முயற்சி.

வாடிகனில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் அவர் போப்பாண்டவரை சந்தித்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு இந்த கதை பரப்பப் படுகிறது.

இன்னொரு கதை நம் செல்லூர் ராஜூவின் அண்ணனும் இந்திய அறிவியல் துறை அமைச்சருமான ஹர்ஷவர்த்தனால் பரப்பப் படுகிறது.

ஐன்ஸ்டினின் ரிலேட்டிவிட்டி தியரியை விட சிறந்த அறிவியல் கோட்பாடு வேதத்தில் இருப்பதாக ஸ்டீபன் ஹாக்கிங்க் சொன்னதாக அவர் இந்திய அறிவியல் மாநாட்டில் சொல்கிறார்.

அவர் எப்போதய்யா சொன்னார்? அப்படி வேதத்தில் எங்கே இருக்கிறது?

என்று கேட்டால்

நீங்கள்தானே ஊடகக் காரர்கள், நீங்களே கண்டுபிடியுங்கள் 

என்று பதில் சொல்கிறார்.

நல்ல வேளை, விஜயபாஸ்கர் போல நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லவில்லை.

ஸ்டீபன் ஹாக்கிங்க் ஏற்கனவே இறந்து விட்டார்.

அவர் வாழ்நாள் முழுவதும் கூறிய கொள்கைகளுக்கு முரணான கட்டுக்கதைகளைச் சொல்லி அவரை மீண்டும் கொலை செய்யாதீர்கள், தயவு செய்து.

பொய்கள் மூலம்தான் மதத்தை நிறுவ முடியுமென்றால் அதிலிருந்தே தெரிகிறது, அது எவ்வளவு பலவீனமானது என்று.


Monday, February 12, 2018

ஒவ்வொரு வருஷமுமா? முடியலை . . .


இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை மீண்டும் பகிர்கிறேன்.  இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை என்பது போல பிப்ரவரி மாதம் வந்தாலே வருகிற காதலர் தின காழ்ப்புணர்வும், பகத்சிங் மீதான போலிப் பாசமும் தாங்க முடிவதில்லை.

மக்களின் நினைவுத்திறன் குறைந்து கொண்டு வருவதும் பார்ப்பதையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வெறியும் காவிகளுக்கே சாதகமாகும் என்பதை பகத்சிங் பற்றிய தவறான தகவலை பகிர்ந்து கொள்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று காலை வந்த இந்த படம்தான் இந்த பதிவினை கோபத்தோடு எழுத வைத்தது.



இரண்டு மூன்று வருடங்களாகவே பிப்ரவரி மாதம் வந்தாலே சிலருக்கு சுதந்திர வேட்கையும் தியாகிகள் மீதான நேசமும் வந்து விடும்.

“பிப்ரவரி பதினான்காம் தேதி காதலர் தினம் என்று ஞாபகம் வைத்துள்ளவர்களே, உங்களுக்கெல்லாம் அன்றுதான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டார்கள் என்று தெரியுமா?” என்று உணர்வுகளை உசுப்பேத்தி விடும் போலி தேச பக்தர்கள் முகநூல், வாட்ஸப் என்று வியாபித்திருப்பார்கள். இந்த வருடமும் ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்களுக்கு பகத்சிங் மீதான பாசத்தை விட காதலர் தினத்தின் மீதான வெறுப்புதான் அதிகம்.

ஏனென்றால் அவர்களுக்கே பகத்சிங் என்று தூக்கிலிடப்பட்டார் என்பது தெரியாது.

ஆமாம் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் பிப்ரவரி 14 ம் தேதி ஒன்றும் தூக்கிலிடப்படவில்லை. 1931 ம் வருடம் மார்ச் மாதம் 23 ம் தேதி அன்றுதான் அவர்களை பிரிட்டிஷ் அரசு தூக்கிலிட்டது. ஆனால் காதலர் தினம் என்று இவர்கள் சொல்லிக் கொண்டு அலைகிறார்கள்.

ஆசிரியர் தினத்தை “குரு உத்ஸவ்”, கிறிஸ்துஸ் தினத்தை “நல்ல நிர்வாக(!) தினம் என்று மாற்றியவர்களின் தொண்டரடிப் பொடிகள் அல்லவா இவர்கள்!

இப்படி வரலாற்றை திரிக்கிறீங்களேப்பா? நியாயமா இது?

Saturday, November 18, 2017

எட்டு கோயில்கள் ஒரே நேர்கோட்டில் எனும் உடான்ஸ்





இப்போது வாட்ஸப்பில் பரபரப்பாக உலா வந்து கொண்டிருக்கும் ஒரு காணொளி

எட்டு சிவாலயங்கள் ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கிறது என்ற செய்திதான்.

உத்தர்கண்டில் உள்ள கேதார் நாத், ஆந்திராவில் உள்ள காலேஸ்வரம், காளஹஸ்தி நீங்கலாக மீதமுள்ள ஐந்து சிவாலயங்கள் தமிழகத்தில் உள்ளவை.

காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை,
சிதம்பரம்,
திருவானைக்காவல்
ராமேஸ்வரம்.

இதோ கீழே தமிழகத்தின் வரைபடம் உள்ளது. இந்த ஐந்து கோயில்களும் ஒரே நேர்கோட்டில்தான் இருக்கிறதா என்பதை நீங்களே பாருங்கள்.



இப்படியெல்லாம் பொய் சொல்லி மார்க்கெட்டிங் செய்யும் நிலையில்தான் கடவுள்கள் இருக்கிறார்களா?

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல  என்று சொல்லியே இப்போது உள்ளவர்களை முட்டாளாக்க முயல்கிறார்கள்.