Showing posts with label போலிச்சாமியார்கள். Show all posts
Showing posts with label போலிச்சாமியார்கள். Show all posts

Wednesday, February 5, 2025

சாமியார்களுக்குள் சண்டை சகஜமப்பா

 Pant போட்ட காரணத்துக்காக ஒரு சாமியார் இன்னொரு சாமியாரை தாக்கிய காணொளியை காலையில் பகிர்ந்திருந்தேன்.

 ஏதோ ஒரு தனித்த சம்பவத்தை பொதுப்படையாக்குவது சரியா என்று ஒரு தோழர் கேட்டார். சாமியார்கள் சண்டை போடுவதெல்லாம் ஒன்றும் அரிய விஷயம் கிடையாது. அடிக்கடி நடப்பதுதான் என்று சொன்னேன். அப்போதுதான் இரண்டு வகுடங்களுக்கு முன்பு எழுதிய நூல் அறிமுகத்தை மீண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றிது.

 திரேந்திர ஜா எழுதி தோழர் இ.பா.சிந்தன் தமிழாக்கம் செய்த “ஆன்மீக அரசியல்” நூல்தான் அது. அவசியம் படியுங்கள்.

 வடக்கத்தி சாமியார்களின் சண்டைகள் பற்றித்தான்  அந்த நூல் பேசுகிறது. தமிழ்நாட்டு ஆதீனங்களில் நடைபெறும் சண்டைகள், அதிகாரப் போர், கொலை முயற்சிகள் பற்றி யாராவது எழுத வேண்டும். அது திடுக்கிடும் திருப்பங்களோடு  இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கும்.

சாமியார்களின் நிழல் உலகம் அறிய . . .

 அவன் சாகட்டும், செத்து ஒழியட்டும்”

என்று சொல்லிக் கொண்டே தரையில் காயங்களுடன் படுத்துக் கிடந்த ஒரு முதியவரின் வயிற்றில் தன்னுடைய காலால் ஓங்கி மிதித்தார் ஒரு துறவி.

 இது எந்த திரைப்படத்தின் முதல் காட்சியுமல்ல, திரேந்திர கே.ஜா எழுதி தோழர் இ.பா.சிந்தன் தமிழாக்கம் செய்த “ஆன்மீக அரசியல்” நூலின் தொடக்கமே இப்படித்தான் அமைகிறது.

 அயோத்தியின் பெரிய அரசியல் மையமான துறவிகள் குழுவான நிர்வானி அகாரா குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள  அனுமார் கோயிலின் வாசலில்  அந்த அகாராவின் துறவி, வாடகை கொடுக்காத பூக்கடை வைத்திருந்த முதியவரைத்தான் அப்படித்தான் தாக்கினார்கள். அந்த குழு மிகவும் பிரசித்தி பெற்ற குழுதான். அந்த குழுவைச் சேர்ந்த அபிராம்தாஸ் என்ற துறவிதான் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்தவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

 இந்த நூல் இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு நூல். ஆன்மீக அரசியல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நூல் சாமியார்களின் நிழல் உலகை அம்பலப்படுத்துகிற நூல். சாமியார்கள் எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் விஸ்வ ஹிந்து பரிஷத் மூலமாக வளைக்கப்பட்டார் என்பதை சொல்கிற நூல்.

 உங்களை படிக்கத் தூண்டுவதற்காக நூலிலிருந்து சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

 துறவிகள் குழுக்கள் அகாராக்கள் என்று அழைக்கப்படுகிறது. சைவத்தை, வைணவத்தை, சீக்கியத்தையும் கூட பின்பற்றும் அகாராக்கள் உண்டு. அவற்றுக்குள் பிரிவினைகள் உண்டு, அவைகள்தான் கோயில்கள், மடங்களை நிர்வகிப்பவை. அகாராக்களின் தலைவர்களாக இருக்கும் மகந்துகள் என்பவர் அதி முக்கியமானவர்கள். அகாராக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு அகில இந்திய அகாரா பரிஷத். உபி முதல்வர் யோகி கூட கோரக்பூர் மடத்தின் மகந்து என்பதை நினைவில் கொள்க..

 மல்யுத்தம் கற்றுக் கொள்வதற்காக அகாராக்களில் இணைபவர்கள் உண்டு. முகலாய ஆட்சிக் காலத்திலும் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அகாராக்கள் கூலிப்படை நடத்தி மன்னர்கள் சார்பாக போர்களுக்குச் செல்வார்கள். இதிலே அவர்களுக்கு எந்த கொள்கையும் கிடையாது. ஒரு வருடம் ஆதரித்த அரசரை அடுத்த வருடம் எதிர்த்த கதையும் உண்டு. காரணம் பணம்.

 ஒரு மடத்தின் வாரிசாக வருவது என்பதற்காக கொலையெல்லாம் நடந்துள்ளது. குருவை சீடன் கொல்வதும், ஒரு மடத்து விஷயத்தில் தலையிட இன்னொரு மடம் கொலையாட்களை அனுப்புவது ஆகியவையெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்துள்ளது என்பதை நூலின் பல பக்கங்கள் சொல்கிறது.

 ஒரு சாமியார் இறந்து போய் விட்டார். அவரை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு கோஷ்டிகளுக்குள் கம்பு, கத்தி, வாள் ஆகியவற்றைக் கொண்டு சண்டை நடக்கிறது. இந்த சண்டையில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாக சண்டையிட குதிரையில் வந்த ஒரு சாமியார் தன்னை பாதுகாத்துக் கொள்ள, எதிரணியினரை தாக்க ஆயுதமில்லாமல் தவித்து புதிய ஆயுதத்தை கண்டறிகிறார். இறந்து போன சாமியாரின் சடலத்தை கால்களைப் பிடித்து தூக்கி, அதனைக் கொண்டே அனைவரையும் தாக்குகிறார்.

  இது போல ஏராளமான சம்பவங்கள் நடக்கும் இடம்தான் அயோத்தி.

 அனைத்து அகாராக்களுக்கும் முக்கியமான நிகழ்வு கும்ப மேளா, அவர்கள் குளித்த பின்புதான் மற்றவர்கள் குளிக்க முடியும். எந்த அகாராவில் அதிகமான நிர்வாண சாமியார்கள் உள்ளார்களோ, அவர்கள்தான் வலிமையானவர்கள் என்று கருதப்படுவார்கள், வருமானமும் அதிகரிக்கும் என்பதால் பிச்சைக்காரர்களையும் சாமியார்களாக அழைத்து வந்து கணக்கு காண்பிக்கிறார்கள் என்பதை சாமியார்களே வேதனையோடு பகிர்ந்து கொள்கிறார்கள். நாக சாதுக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அந்த சாமியார்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை நூலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

 அகாராக்கள் சில சாமியார்களுக்கு “மகா மண்டலேஸ்வரர்கள்” என்று பட்டம் தரும். அப்படி பட்டம் கிடைத்த சாமியாருக்கு பக்தர்கள் அதிகமாவார்கள், காணிக்கை பெருகும் என்பதால் பணம் வாங்கிக் கொண்டு பட்டம் கொடுக்க மகாமண்டலேஸ்வரர்கள் எண்ணிக்கை இப்போது பெருகி விட்டது. ராதா மே என்ற பெண் சாமியாருக்கு அப்பட்டம் தந்தது சர்ச்சையாகி உள்ளது. ஆனால் அப்படி எந்த சர்ச்சையும் நித்தியானந்தருக்கு அளிக்கப்பட்ட போது உருவாகவில்லை.

 இந்துக்களின் மிகப் பெரிய மதத்தலைவராக கருதப்படுகிற சங்கராச்சார்யார்களுக்குள் நடக்கிற சர்ச்சை, அரசியல், பிரச்சினைகள் குறித்து இந்த நூல் விரிவாக அலசுகிறது. ஆதி சங்கரர் உருவாக்கிய சங்கர மடங்கள் ஜோதிர்மத், துவாரகை, பூரி, சிருங்கேரி ஆகிய நான்கு இடங்களில் உள்ளதாக சொல்லப்படுகிறது. காஞ்சி மடம் தாங்களும் ஆதி சங்கரரால் உருவாக்கப்பட்ட மடம் என்று சொன்னாலும் இதனை மற்ற நான்கு மடங்கள் ஏற்பதில்லை. ஜோதிர்மத் மடத்தின் சங்கராச்சார்யாராக முடி சூட்டிக் கொண்ட அச்சுதானந்த தீர்த்தர் என்பவரை அகாராக்கள் எப்படி துரத்தியது என்பதை நூல் விவரிக்கிறது, அது மட்டுமல்ல இப்போது கிட்டத்தட்ட 100 சங்கராச்சார்யார்கள் உள்ளார்கள் என்பதையும் அம்பலப்படுகிறது.

 சாமியார்களின் துணை இருந்தால் அவர்கள் மூலம் பக்தர்களிடம் தங்கள் அரசியலை கொண்டு செல்லலாம் என்று வி.ஹெச்.பி எடுத்த முயற்சிகள், அதன் ஒரு பகுதியாக முன்னுக்குக் கொண்டு வரப்பட்ட ராமர் கோயில் பிரச்சினை, ஆரம்ப காலத்து முட்டுக்கட்டைகள், பின்னர் அவர்கள் எப்படி முன்னேறினார்கள் ஆகியவை விவரமாக எழுதப்பட்டுள்ளது.

 பாஜகவின் மத அரசியலை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதன் பின்புலத்தில் உள்ள சாமியார்களின் நிழல் உலகை புரிந்து கொள்ள வேண்டும். போதைப் பொருள் மாஃபியாவை விட மோசமான அந்த உலகை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார் நூலாசிரியர் திரேந்திர கே.ஜா. மொழி பெயர்ப்பு என்ற உணர்வு வராத வண்ணம் எப்போதும் போல மிகச் சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளார் தோழர் இ.பா.சிந்தன்.

 இப்படி ஒரு சர்ச்சையான நூலை தைரியமாக வெளியிட்ட பொள்ளாச்சி எதிர் வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள்.

Tuesday, February 4, 2025

Pant போட்டால்? காவியானாலும் அடி

கீழேயுள்ள காணொளியை பாருங்கள். எந்த இடம் என்று தெரியவில்லை. 30 பேர் நெரிசலில் இறந்து போன மொட்டைச்சாமியாரின் மாநிலமான உபியில் உள்ள அலகாபாத்தாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பின்புலம் அப்படித்தான் தெரிகிறது.

காவித்துணி அணிந்த சாமியாராக இருந்தாலும் அவர்களின் தேசிய உடையான அரையாடையை அணியாமல் Pant போட்டதற்காக எப்படி அடிக்கிறார்கள். காட்டுமிராண்டிக்காலத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்!

Thursday, July 4, 2024

மனிதனை கடவுளாக்கினால் ?????

உபி யின் பாலியல் குற்றங்களின் தலைநகர் பேரழிவு நகராகி விட்டது.

ஹாத்ராஸ் சம்பவத்தைத்தான் சொல்கிறேன்.

மயக்கும் பேச்சு, சில மேஜிக்குகள் தெரிந்தவர்களை கடவுளாகக் கருதி வழிபட்டால் இப்படிப்பட்ட பேரழிவுகள்தான் நிகழும்.

மனிதர்கள் தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை சிந்திக்காமல் இவர்களின் தேடுவதை என்றைக்கு நிறுத்துகிறார்களோ, அன்றைக்குத்தான் உருப்படுவார்கள் 

Thursday, February 29, 2024

பல்லக்கு தூக்கி ப்ளாக்மெயில் செய்

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனகர்த்தரை ப்ளாக்மெயில் செய்தமைக்காக பாஜக நிர்வாகிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் தலைமறைவாகி விட்டார்.

20 கோடி ரூபாய் பணம் தர வேண்டும், இல்லையென்றால் அவரது ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டியதுதான் பிரச்சினை.

இந்த போலிச்சாமியார்தான் மனிதர்கள் தூக்கும் பல்லக்கில்தான் பட்டிணப்பிரவேசம் போவேன் என்று அடம் பிடித்த இன்னொரு ஆதீனத்திற்கு வக்காலத்து வாங்கியவர். ஆட்டுக்காரனும் தலையிட்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஜனாதிபதி கூட அழைக்கப்படாத புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்ட ஜனநாயகக் காவலர் இந்த ஆசாமி. சில நாட்கள் முன்பாகக்கூட ஆட்டுக்காரன் அங்கே போயிருந்தானாம். ஒரு வேளை அப்போதுதான் கேமராவை வைக்கச் சொல்லி ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருப்பானோ!

யார் கண்டது! honey trap என்று ஆங்கிலத்தில் சொல்வது போல ஆபாச வீடியோவுக்கான ஏற்பாடே கூட சங்கிகளே செய்திருக்கலாம். ஏனென்றால் எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடிய கட்சி பாஜக, அதன் தலைவர்கள் மோடி முதல் ஆட்டுக்காரன் வரை எல்லோருமே கேவலமானவர்கள்தான்.

இப்படிப்பட்ட கிரிமினல்கள்தான் இந்து மதக் காவலர்கள் என்று நம்பும் முட்டாள்கள் திருந்த வேண்டும். இந்துக்களின் பாதுகாப்பு இவர்களால்தான் கேள்விக்குறியாகிறது.

இன்னொரு கேள்வியை கேட்காமல் இப்பதிவு நிறைவு பெறாது.

இருபது கோடி ரூபாய் கேட்டு மிரட்டும் அளவிற்கு என்ன தவறு செய்தீர்கள் ஆதீனகர்த்தரே? உங்களை நம்பும் பக்தர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. சொல்லுங்கள். 

Sunday, September 10, 2023

சாமியாரே, வட போச்சே!

உதயநிதி ஸ்டாலினின் சிகை அலங்கார ஸ்பெஷலிஸ்டான அயோத்தி சாமியார், இந்தியாவை அக்டோபர் 2 க்குள் இந்து ராஷ்டிரமாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய ஒரு செய்தியை படித்தேன்.

ஆஹா, அக்டோபர் 2 அன்று நல்ல சம்பவம் இருக்கிறதென்று நினைத்தால் புஸ்ஸென்று போய் விட்டது.

ஆமாம்.

அந்த செய்தி ரொம்பவே பழசு.

இரண்டு வருடங்களுக்கு முந்தையது,

"வட போச்சே" என்றுதான் தோன்றியது.

தீக்குளிப்பேன் என்று மிரட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர் சோடா பாட்டீல் ஜீயர் போல இந்தாளும் வெட்டி உதார்தான் போல . . .

Sunday, July 9, 2023

அமாவாசையும் கைலாசா பிரதமரும் . . .

கீழேயுள்ள செய்தியை படித்தவுடன் மேலே உள்ளதுதான் மனதில் தோன்றியது. 

Friday, June 9, 2023

செங்கோல் பஞ்சாயத்து ஓவர், கிளம்பு கிளம்பு

மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் கொடுத்ததற்கு எந்த ஆதாரமோ அது பற்றிய உறுதியான செய்தியோ இல்லை என்று திருவாடுதுறை ஆதீனம் கையை விரித்து விட்டோர். நாட்டை விட்டு வெளியே செல்பவரை விட நேருதானே அன்று முக்கியம் என்று சொல்லி அவர் கடையை மூடிவிட்டார்.

ஆகவே சங்கிகளே, ஆட்டுத்தாடி ரவி அவிழ்த்து விட்ட "அதிகார மாற்றம், ராஜாஜி சொன்னார், நேரு செஞ்சார்" கட்டுக்கதைகளை விட்டு விட்டு புதிய கதையை உருவாக்கி அசிங்கப்படுங்கள்.

இந்த செங்கோலால் ஒரே ஒருவருக்குத்தான் நிஜமான ஆதாயம், விளம்பரம்.

உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடை

Tuesday, May 30, 2023

ஓசி ப்ளைட்டுக்கு இம்புட்டு விசுவாசமா

டெல்லிக்கு ஓசியில் ஏரோப்ளேனில் கூட்டிப் போனதற்கு மதுரை ஆதீனம் காண்பிக்கும் விசுவாசத்தை பாருங்கள்.

டிமோவுக்கு பிடித்த மாதிரியே நேருவை திட்டறாரு. அதுல "லடாக்கை படாக்குனு" பிடிச்சுட்டாங்கன்னு எதுகை மோனை வேற. அல்லாத்தையும் டிமோதான் மீட்டாரு.

அவரு என்ன செய்வாரு!

செஞ்சோற்றுக்கடனுக்கு எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்டை பேசறாரு! இதில் ஆச்சர்யப்படவும் ஒன்றில்லை. அரசர்களை அண்டிப் பிழைப்பதுதான் சாமியார் மடங்களின் பாரம்பரியம். அதில் எப்போதாவது முரண்பாடு தோன்றினால்தான் ஜெயேந்திர, விஜயேந்திர கைதுப் படலங்கள் நிகழும். 

சீனா என்று சொன்னாலே டிமோவின் கால்கள் எல்லாம் டேன்ஸ் ஆடிடும்னும் டிமோ காலத்தில்தான் சீனா தான் ஆக்கிரமித்த இடத்துல வீடுகள் கட்டி ஊருக்கு பெயரெல்லாம் கூட வச்சிட்டாங்கன்னு பாவம் ஆதீனத்துக்கு தெரிய வாய்ப்பில்லை.

மிஸ்டர் ஆதீனம், நித்தி உங்க ஆதீனத்தைத்தான் படக்குன்னு பறிச்சிருந்தார். அது மட்டும் தொடர்ந்திருந்தா, நீர் பாய்ஸ் செந்தில் மாதிரி எந்த கோயில்ல எந்த வேளையில என்ன பிரசாதம் கிடைக்கும்னு அல்லாடிக்கிட்டு இருக்கனும். கிடைக்கிற சோத்தை தின்னுட்டு ஒழுங்கா வேலையைப் பாரும். உமக்கு எதுக்கு இந்த டிமோவுக்கு பல்லக்கு தூக்கற அரசியல்?

Sunday, January 29, 2023

வில்லங்க சாமியாருக்குதான் விருதா?

யாரோ ஒரு சாமியாருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்து இந்து மதத்தையே பெருமைப்படுத்தி விட்டார் என்று மத்யமர் குழுவில் சங்கிகள் பீற்றிக் கொண்டு இருந்தார்கள்.

யார் அந்த சாமியார் என்று பார்த்தால் நம்ம ஆன்டி இந்தியன் சாமியார். மோடியையும் ஆன்டி இந்தியனாக்கியவர். மோடிக்கு மயிலிறகு சால்வை போட்டவர். ஏற்கனவே அவர் பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. மீண்டும் பகிர்கிறேன்.

இந்த சாமியாருக்கெல்லாம் விருதா என்ற கேள்வி இப்பதிவை படித்த பின்பு உங்களுக்கு தோன்றலாம்.

மோடி ஆட்சியில் இவர் போன்றவர்களுக்குத்தான் கொடுப்பார்கள்.

காக்கா பிரியாணி துன்னா உண்ணிகிருஷ்ணன் வாய்ஸா வரும்!

Wednesday, February 9, 2022

வில்லங்க சாமியாரும் வில்லங்க சிலையும் . . .

மோடி பட்டை நாமம் போட்டுக் கொண்டு மயில் இறக்கைகளால் ஆன சால்வை (ஆமாம். அந்த மயிலிறகு சால்வை தயாரிக்க எத்தனை மயில்கள் தேவைப்பட்டிருக்கும்?) அணிந்து ராமானுஜர் சிலையை திறந்து வைத்தது நினைவில் உள்ளதல்லவா?

அந்த சிலையை அமைத்தவர் திருதண்டி சின்ன ஜீயர் எனும் சாமியார். மோடியை வரவைத்த சாமியார் என்றாலே வில்லங்க சாமியார் என்றுதானே அர்த்தம்! இதற்கு ஒரு பதிவு வேறு அவசியமா என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் நான் அறிந்த தகவல்களை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

சாமியார் தொழிலுக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவில் 13 பொறியியல் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருந்தவர். இப்போதும் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்.

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இவரது பக்த கோடி. வாஸ்து பார்த்து கே.சி.ஆர் கட்டிய புது முதல்வர் மாளிகையில் இந்த சாமியாரைத் தான் முதல்வர் நாற்காலியில் அமர வைத்து ஆசி வாங்கிய பின்பே அவர் அமர்ந்தார்.

திருப்பதி கோயில் வழிபாடுகள் குறித்து இவருக்கும் தேவஸ்தானத்திற்கும் நீண்ட காலமாக வரப்புத் தகறாரு உண்டு. தேவஸ்தானத்துக்காக பஞ்சாயத்துக்கு வந்த ஜெயேந்திர சரஸ்வதியை “தண்டத்தை தூக்கிப் போட்டு விட்டு தலைமறைவான நீயெல்லாம் பேசக் கூடாது” என்றது தனிக் கதை.

ஜாதி வெறி பிடித்த சாமியார் என்பதற்கு அவர் சமீபத்தில் உதிர்த்த தத்துவ முத்துக்களே உதாரணம். அந்த அரிய கருத்து கீழே . . .

“பன்றிக் கறி தின்பவர்கள் மூளையும் பன்றியைப் போலவே இருக்கும்”

“ஆட்டுக் கறி தின்பவர்களுக்கு ஆட்டைப் போலவே மந்த மூளைதான்”

முட்டை சாப்பிடுபவர்கள் கோழியைப் போலவே குப்பையிலே அலைந்து கொண்டு குப்பையில் கிடைப்பதைத்தான் உண்பார்கள்”

இப்படி ஒரு மட்டமான சிந்தனை கொண்டவர் சிலை அமைப்பதென்பது சமூக சீர்திருத்தவாதியான ராமானுஜருக்குத்தான் அசிங்கம். மேலும் அந்த சிலை உருவாக்கப்பட்டது சீனாவில். ஒரு புறம் சீனாவை திட்டிக் கொண்டே சீனத் தயாரிப்பை திறந்து வைத்துள்ளார் மோடி. ஆக அவரும் சிலையை வைத்த சின்ன ஜீயரும்தானே  ஆண்டி-இந்தியர்கள்?

Sunday, December 25, 2022

காவிக்கு களங்கம் எதனாலே?

காவியுடை அணிந்துதான் . . .
 
ஆலய வாசல்கள் முன்னே
பிச்சையெடுப்பது
காவியுடை அணிந்துதான்.
 
காசியில் கஞ்சா பிடிப்பது
காவியுடை அணிந்துதான். .
 
பாலியல் பலாத்காரம் செய்த
பாவிகள் சிலருக்கு
பாதுகாப்புக் கவசம்
 காவியுடைகள்தான்.
 
மிருகக் கொழுப்பை ஆயுர்வேத மருந்தென்று
ஏமாற்றி விற்பவன் அணிவதும் காவியுடைதான்.
 
அரசு நிலங்களை ஆக்கிரமித்து
கோயில் கட்டி கல்லா கட்டுபவர்
அணிவது காவியுடைதான்.
 
ஊழல்களை அம்பலப்படுத்தியவரை
வெட்டிச்சாய்க்க கொலையாளிகளை
அனுப்பியவர் அணிந்திருந்ததும்
காவியுடைதான்.
 
எல்லா குற்றங்களும் செய்து
தனி நாடு கண்டவர் பறந்ததும்
காவியுடையில்தான்.
 
காவிக்கு களங்கம் இதனாலா?
கால் நிமிட நடனத்தாலா

Sunday, June 19, 2022

சாமியார்களின் நிழல் உலகம் அறிய . . .

அவன் சாகட்டும், செத்து ஒழியட்டும்”

என்று சொல்லிக் கொண்டே தரையில் காயங்களுடன் படுத்துக் கிடந்த ஒரு முதியவரின் வயிற்றில் தன்னுடைய காலால் ஓங்கி மிதித்தார் ஒரு துறவி.

இது எந்த திரைப்படத்தின் முதல் காட்சியுமல்ல, திரேந்திர கே.ஜா எழுதி தோழர் இ.பா.சிந்தன் தமிழாக்கம் செய்த “ஆன்மீக அரசியல்” நூலின் தொடக்கமே இப்படித்தான் அமைகிறது.

அயோத்தியின் பெரிய அரசியல் மையமான துறவிகள் குழுவான நிர்வானி அகாரா குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள  அனுமார் கோயிலின் வாசலில்  அந்த அகாராவின் துறவி, வாடகை கொடுக்காத பூக்கடை வைத்திருந்த முதியவரைத்தான் அப்படித்தான் தாக்கினார்கள். அந்த குழு மிகவும் பிரசித்தி பெற்ற குழுதான். அந்த குழுவைச் சேர்ந்த அபிராம்தாஸ் என்ற துறவிதான் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்தவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த நூல் இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு நூல். ஆன்மீக அரசியல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நூல் சாமியார்களின் நிழல் உலகை அம்பலப்படுத்துகிற நூல். சாமியார்கள் எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் விஸ்வ ஹிந்து பரிஷத் மூலமாக வளைக்கப்பட்டார் என்பதை சொல்கிற நூல்.

உங்களை படிக்கத் தூண்டுவதற்காக நூலிலிருந்து சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

துறவிகள் குழுக்கள் அகாராக்கள் என்று அழைக்கப்படுகிறது. சைவத்தை, வைணவத்தை, சீக்கியத்தையும் கூட பின்பற்றும் அகாராக்கள் உண்டு. அவற்றுக்குள் பிரிவினைகள் உண்டு, அவைகள்தான் கோயில்கள், மடங்களை நிர்வகிப்பவை. அகாராக்களின் தலைவர்களாக இருக்கும் மகந்துகள் என்பவர் அதி முக்கியமானவர்கள். அகாராக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு அகில இந்திய அகாரா பரிஷத். உபி முதல்வர் யோகி கூட கோரக்பூர் மடத்தின் மகந்து என்பதை நினைவில் கொள்க..

மல்யுத்தம் கற்றுக் கொள்வதற்காக அகாராக்களில் இணைபவர்கள் உண்டு. முகலாய ஆட்சிக் காலத்திலும் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அகாராக்கள் கூலிப்படை நடத்தி மன்னர்கள் சார்பாக போர்களுக்குச் செல்வார்கள். இதிலே அவர்களுக்கு எந்த கொள்கையும் கிடையாது. ஒரு வருடம் ஆதரித்த அரசரை அடுத்த வருடம் எதிர்த்த கதையும் உண்டு. காரணம் பணம்.

ஒரு மடத்தின் வாரிசாக வருவது என்பதற்காக கொலையெல்லாம் நடந்துள்ளது. குருவை சீடன் கொல்வதும், ஒரு மடத்து விஷயத்தில் தலையிட இன்னொரு மடம் கொலையாட்களை அனுப்புவது ஆகியவையெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்துள்ளது என்பதை நூலின் பல பக்கங்கள் சொல்கிறது.

ஒரு சாமியார் இறந்து போய் விட்டார். அவரை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு கோஷ்டிகளுக்குள் கம்பு, கத்தி, வாள் ஆகியவற்றைக் கொண்டு சண்டை நடக்கிறது. இந்த சண்டையில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாக சண்டையிட குதிரையில் வந்த ஒரு சாமியார் தன்னை பாதுகாத்துக் கொள்ள, எதிரணியினரை தாக்க ஆயுதமில்லாமல் தவித்து புதிய ஆயுதத்தை கண்டறிகிறார். இறந்து போன சாமியாரின் சடலத்தை கால்களைப் பிடித்து தூக்கி, அதனைக் கொண்டே அனைவரையும் தாக்குகிறார்.

இது போல ஏராளமான சம்பவங்கள் நடக்கும் இடம்தான் அயோத்தி.

அனைத்து அகாராக்களுக்கும் முக்கியமான நிகழ்வு கும்ப மேளா, அவர்கள் குளித்த பின்புதான் மற்றவர்கள் குளிக்க முடியும். எந்த அகாராவில் அதிகமான நிர்வாண சாமியார்கள் உள்ளார்களோ, அவர்கள்தான் வலிமையானவர்கள் என்று கருதப்படுவார்கள், வருமானமும் அதிகரிக்கும் என்பதால் பிச்சைக்காரர்களையும் சாமியார்களாக அழைத்து வந்து கணக்கு காண்பிக்கிறார்கள் என்பதை சாமியார்களே வேதனையோடு பகிர்ந்து கொள்கிறார்கள். நாக சாதுக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அந்த சாமியார்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை நூலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

அகாராக்கள் சில சாமியார்களுக்கு “மகா மண்டலேஸ்வரர்கள்” என்று பட்டம் தரும். அப்படி பட்டம் கிடைத்த சாமியாருக்கு பக்தர்கள் அதிகமாவார்கள், காணிக்கை பெருகும் என்பதால் பணம் வாங்கிக் கொண்டு பட்டம் கொடுக்க மகாமண்டலேஸ்வரர்கள் எண்ணிக்கை இப்போது பெருகி விட்டது. ராதா மே என்ற பெண் சாமியாருக்கு அப்பட்டம் தந்தது சர்ச்சையாகி உள்ளது. ஆனால் அப்படி எந்த சர்ச்சையும் நித்தியானந்தருக்கு அளிக்கப்பட்ட போது உருவாகவில்லை.

இந்துக்களின் மிகப் பெரிய மதத்தலைவராக கருதப்படுகிற சங்கராச்சார்யார்களுக்குள் நடக்கிற சர்ச்சை, அரசியல், பிரச்சினைகள் குறித்து இந்த நூல் விரிவாக அலசுகிறது. ஆதி சங்கரர் உருவாக்கிய சங்கர மடங்கள் ஜோதிர்மத், துவாரகை, பூரி, சிருங்கேரி ஆகிய நான்கு இடங்களில் உள்ளதாக சொல்லப்படுகிறது. காஞ்சி மடம் தாங்களும் ஆதி சங்கரரால் உருவாக்கப்பட்ட மடம் என்று சொன்னாலும் இதனை மற்ற நான்கு மடங்கள் ஏற்பதில்லை. ஜோதிர்மத் மடத்தின் சங்கராச்சார்யாராக முடி சூட்டிக் கொண்ட அச்சுதானந்த தீர்த்தர் என்பவரை அகாராக்கள் எப்படி துரத்தியது என்பதை நூல் விவரிக்கிறது, அது மட்டுமல்ல இப்போது கிட்டத்தட்ட 100 சங்கராச்சார்யார்கள் உள்ளார்கள் என்பதையும் அம்பலப்படுகிறது.

சாமியார்களின் துணை இருந்தால் அவர்கள் மூலம் பக்தர்களிடம் தங்கள் அரசியலை கொண்டு செல்லலாம் என்று வி.ஹெச்.பி எடுத்த முயற்சிகள், அதன் ஒரு பகுதியாக முன்னுக்குக் கொண்டு வரப்பட்ட ராமர் கோயில் பிரச்சினை, ஆரம்ப காலத்து முட்டுக்கட்டைகள், பின்னர் அவர்கள் எப்படி முன்னேறினார்கள் ஆகியவை விவரமாக எழுதப்பட்டுள்ளது.

பாஜகவின் மத அரசியலை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதன் பின்புலத்தில் உள்ள சாமியார்களின் நிழல் உலகை புரிந்து கொள்ள வேண்டும். போதைப் பொருள் மாஃபியாவை விட மோசமான அந்த உலகை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார் நூலாசிரியர் திரேந்திர கே.ஜா. மொழி பெயர்ப்பு என்ற உணர்வு வராத வண்ணம் எப்போதும் போல மிகச் சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளார் தோழர் இ.பா.சிந்தன்.

இப்படி ஒரு சர்ச்சையான நூலை தைரியமாக வெளியிட்ட பொள்ளாச்சி எதிர் வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள்.

Thursday, May 5, 2022

பக்தர்கள் இதற்குத்தான் பொங்கனும் . .

"கோயில்களில் கடவுள் சிலைகளை பல்லக்கில் வைத்து தூக்குவதில்லையா? அது போலத்தான் ஆதீனத்தையும் பல்லக்கில் சுமப்பது. அவரை சுமக்க நானும் தயாராக இருக்கிறேன்"

இது ஆட்டுக்காரரின் அருளுரை.

கடவுளை வணங்கும் உண்மையான பக்தரை கேட்கிறேன்.

ஆட்டுக்காரர் சொன்னதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? நிலப்பிரபுத்துவத்தின் எச்சமாக, ஊழல் மற்றும் பாலியல் முறைகேடுகளில் சிக்கி கொலை வழக்குகளில் கூட மாட்டியுள்ள ஆதீனங்களும் நீங்கள் வணங்கும் கடவுளும் ஒன்றா?

மதுரை ஆதீனத்துக்கும் நித்திக்குமானது வடிவேலு பேக்கரி டீலிங் போல அசிங்கமான ஒன்றுதான். அந்த டீலிங்கில் சிக்கல் வரவில்லையென்றால் நித்திதான் இன்று மதுரை ஆதீனம். ஆட்டுக்காரர் கூற்றுப்படியும் நித்தியும் கடவுள் (அந்தாள் இப்பவும் தன்னை கடவுள் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறான். அதை ஒரு மூடக் கூட்டமும் நம்பிக் கொண்டு இருக்கிறது என்பது வேறு கொடுமை)

ஒரு பிற்போக்குத்தனமான செய்கையை நியாயப்படுத்த ஆதீனங்களை கடவுளாக சொல்வதை பக்தர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? அப்படியென்றால் நீங்கள் பொங்க வேண்டியது அண்ணாமலைக்கு எதிராகத்தான். 

அண்ணாமலை சொல்லியதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நீங்கள் பக்தர் அல்ல, மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் சங்கி. உங்களுக்கு தி.க, தி.மு.க பற்றி பேசும் அருகதை கிடையாது. 

Wednesday, May 4, 2022

பழைய பல்லக்கு காட்சி. இன்றைக்கும் . . .

பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தின் காட்சியை பாருங்கள்.

 நாம் பார்ப்பதை விட பல்லக்கில்தான் பட்டிணப்பிரவேசம் போவேன் என்று அடம் பிடிக்கும் ஆதீனங்களும் அந்த அடத்திற்கு பல்லக்கு தூக்கும் சில அரசியல் அல்லக்கைகளும் பார்ப்பது இன்னும் அவசியம்.

 பிகு: ஒரு அட்வான்ஸ்ட் சாமியார் பற்றி நாளை எழுதுகிறேன்.

Monday, April 4, 2022

சாமியாரென்றால் சட்டம் வளையும்

*நாளொரு கேள்வி: 03.04.2022*

தொடர் எண்: *672*

இன்று நம்மோடு நியூஸ் கிளிக் கட்டுரையாளர்கள் *அபிர் தாஸ் குப்தா, ரவி நாயர்* (தமிழில் சாரம் : இரமணன்)
###########################

*ஊரான் வீட்டு நெய்யே*
*பதஞ்சலி ராம்தேவ் கையே*

கேள்வி: ருசி சோயா நிறுவனம் பதஞ்சலி ராம்தேவ் கைகளுக்கு மாறியதும், அதற்கு அரசு வங்கிகளில் உள்ள மக்கள் சேமிப்புகள் பயன்படுத்தப்பட்டதும் சர்ச்சைக்கு ஆளாகி உள்ளதே. என்னதான் நடக்கிறது? 

*அபிர்தாஸ் குப்தா & ரவி நாயர்*

கசந்து போன "ருசி சோயா"... பதஞ்சலியின் கையில் இனித்த மர்மக் கதைதான் இது. 

சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ருசி சோயா. 2017ஆம் ஆண்டு அது திவால் அறிக்கை அளித்தது. 
ருசி சோயாவின் பங்குகளின் மதிப்பு அந்த நேரத்தில் ரூ.66 கோடிகள். ஆனால் அதன் சுத்திகரிப்பு ஆலைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்த அதன் மற்ற சொத்துக்கள் இந்த மதிப்பை விட பல மடங்குகள் இருக்கும். *மொத்த கடன் ரூ 12146 கோடிகள். அதில் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன் தொகை ரூ 9385 கோடிகள்.* 
கடன் கொடுத்த வங்கிகள் பெரும்பான்மையானவை நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளே.

மொத்தம் நான்கு நிறுவனங்கள் திவாலான ருசி சோயாவை எடுக்க முன்வந்தன. அதிக தொகைக்கு கேட்டிருந்த *அதானி வில்மர்* போட்டியிலிருந்து விலகிக்கொண்டது. இரண்டாவது உயர்ந்த தொகை சமர்ப்பித்திருந்த *பதஞ்சலி குழுவிற்கு நிறுவனம் கை மாற்றப்பட்டது.* பதஞ்சலியின் ஏலத்தொகை ரூ 4350 கோடிகள். அதாவது வங்கிகள் கொடுத்த கடன் தொகையில் சுமார் 50% மொட்டையடிக்கப்பட்டது. மக்கள் சேமிப்பு  பறி போனது. ஒரு திரைப்படத்தில் *வடிவேல் அரிசிக் கடையிலிருந்து எடைக்கற்களை திருடி 500 ரூபாய்க்கு விற்று விடுவார். அதன் மதிப்பு 5000 ரூபாய் என்று கடைக்காரர் மூலம் தெரிந்ததும் 'ஐய்யய்யோ ஏமாத்திட்டான்டா? என்று கத்துவார். இது நான பேச வேண்டிய டயலாக்குடா  என்று கடைக்காரர் அதிர்ந்து போவார்.*  அந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது. கடைக்காரர் நிலைமைதான் வங்கி சேமிப்புதாரருக்கு...

இந்த டீலிங் ஐ கடன் கொடுத்த வங்கிகளில் *டிபி.எஸ் வங்கியைத் தவிர மற்ற வங்கிகள் ஏற்றுக் கொண்டன.* திவால் சட்டப்படி, நிறுவனத்தின் சொத்துக்களை விற்றும் கடனை அடைக்கலாம். இந்த வழியில் போனால் தனக்கு 90% கடன் தொகை திரும்பக் கிடைக்கும் என டி பி எஸ் வங்கி வாதாடியது. ஆனால் அதை சொல்கிற முதுகெலும்பு  அரசு வங்கிகளுக்கு இல்லை. *தீர்ப்பாயம், மேல் முறையீட்டு தீர்ப்பாயம், உச்ச நீதி மன்றம்* என எல்லாப்படிகளிலும்
*டி பி எஸ்* வங்கி ஏறியது. எல்லா மன்றங்களுமே திவால் விதிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கின.

விசித்திரத்திலும் விசித்திரம் என்னவென்றால் வாராக்கடன் என்று வகைப்படுத்தப்பட்ட *ருசி சோயாவின் பங்குகளை வாங்க பதஞ்சலி நிறுவனத்திற்கு அதே நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் கடன் கொடுத்துதான்.* 

*ஸ்டேட் வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா சிண்டிகேட் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா*    ஆகியன ஆகும். இந்த வங்கிகளே ருசி சோயா கடன் தள்ளுபடியில் இழந்த வங்கிகளே. 

*இந்த 3300/ கோடி கடன் எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது?* அதே ருசி சோயா பங்குகள் அடமானத்தின் பேரில்தான். 

*அதுதான் செயல்படா சொத்தாயிற்றே என்கிறீர்களா?* 

இப்ப அது பாபா ராம்தேவ் கைக்கு வந்துவிட்டது. ஆகவே அதன் மீது கடன் கொடுக்கலாம் என்று வங்கிகள் வியாக்கியானம் கொடுக்கலாம். *பதஞ்சலி நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்தம் ரூ 4370 கோடியில் இந்தக் கடன் ரூ 3300 போக மீதி ரூ.1070 கோடியும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் பதஞ்சலி நிறுவனத்தின் பங்குகள், அதன் கச்சாப் பொருட்கள், தயாரிக்கப்பட்ட பண்டங்கள், ஆலைகள் போன்றவற்றின் மீது அடமானமாக கொடுத்துதான்.* அதாவது பைசா செலவில்லாமல் இன்று ரூ. 25000 கோடி மதிப்புள்ள சொத்திற்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் உரிமையாளராகிவிட்டது.

இந்த காலகட்டத்தில் *இக்ரா(icra), கேர்(care), பிரிக் ஒர்க் (brick work)* போன்ற பல்வேறு கடன் தர நிர்ணய நிறுவனங்கள் பதஞ்சலியின் கடன் பெறும் மதிப்பை குறைத்தன. அதனால் வங்கிகள் பதஞ்சலிக்கு கடன் தர சற்று யோசித்தன போலும். *இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இன்னல் என்றால் அரசியல் கூட்டாளிகள் கண்களில் உதிரம் கொட்டி விடுமே!* 2019அக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் *நிர்மலா சீத்தாராமன், சுய உதவிக் குழுக்கள், ஆன்மீகவாதிகள் தலமை தாங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வங்கிகள் கடன் கொடுக்க தயங்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.* இது பதஞ்சலிக்குக் கடன் கொடுப்பவர்களை நோக்கியே வீசப்பட்ட அம்பு என ஊகிக்கப்பட்டது.

திவால் நடவடிக்கைகள் முடிந்த டிசம்பர் 19,2019 அன்று ருசி சோயாவின் பங்கு மதிப்பு 98.9% குறைந்துவிட்டது. அதாவது *66கோடியாக இருந்தது 66 இலட்சமாக சரிந்தது.*

இதன்பிறகு பதஞ்சலி நிறுவனம் *இரண்டு விசயங்களை* செய்தது. 
*ஒன்று 18.67 மில்லியன் ருசி சோயா பங்குகளை தனக்கு அளித்துக் கொண்டது.* (preferential shares). அதன் விலை ரூ 7 என நிர்ணயித்தது. அதாவது 66 இலட்சம் மதிப்பை ரூ.1300 கோடியாக மாற்றி ஜால வித்தை புரிந்தது. ரூ 7 என எப்படி மதிப்பிட்டது? 26 வார சராசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதாக கூறியது. நடுவில் பங்குகள் விற்பனை நிறுத்தப்பட்டதையோ பங்குகளின் விலை தொடர்ச்சியாக இல்லை என்பதையோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. *இப்போது பதஞ்சலியின் கையில் 98.9% பங்குகளும் பொது மக்கள் கையில் 1.1% பங்குகளும்* இருந்தது.

*அடுத்த தகிடுதத்தம் என்ன தெரியுமா?* 

ஜனவரி 27-2020 அன்று ருசி சோயாவின் பங்குகள் சந்தையில் மீண்டும் பட்டியலிடப்பட்டது. அன்று *ஒரு பங்கின் விலை ரூ16.10 ஆக* உயர்ந்திருந்தது. *ஜூன் 2021 அன்று அதன் விலை ரூ. 1377ஆக* உயர்ந்திருந்தது. மிகக் குறைந்த பொது பங்குகள் (1%) மட்டுமே சந்தையில் இருந்ததே இதற்குக் காரணம். டிசம்பர் 2021 அன்று அது சமர்ப்பித்த கணக்கின்படி அதன் பங்கின் கணக்கு *புத்தக மதிப்பு ரூ 148.82 தான்.* மார்ச் 2022 அது பொதுமக்களுக்கு தன் பங்குகளை விற்க (follow on public offer) முன் வந்தது.

*ஒரு பங்கின் விலையை ரூ.615 முதல் ரூ.650 என* நிர்ணயித்தது.
பொதுப்பட்டியலிடப்பட்ட 19% பங்குகள் பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட பின்னரே சந்தை இயங்கியலின் மூலம் அதன் உண்மையான மதிப்பு வெளிவரும்.ஆனால் அதற்கு முன்பாக ரூ.615 முதல் ரூ.650 என்கிற விலையில் 19% பங்குகளை விற்று தான் பெற்ற கடன்களை அடைத்து, 

*எந்த வித மூலதனமும் போடாமல் ரூ.25000 கோடி மதிப்புள்ள நிறுவனதிற்கு ராம்தேவ் தலமையிலான பதஞ்சலி உடமையாளராக ஆகியிருக்கிறது.* 

*இது கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லலாம்.*

பொதுப் பட்டியலிடுவதற்கு ஊடாக இன்னொரு மலிவான விளம்பரப் பிரச்சாரத்தையும் பதஞ்சலி செய்தது. ஒரு காணொளியில் பாபா ராம்தேவ் *ருசி சோயா பங்குகளை வாங்கினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்* என்றார். (ஆதாரம் :மணி கன்ட்ரோல்). 

மேலும் இந்தப் பங்கு விற்பனை குறித்த தவறான விவரங்கள் கொண்ட எஸ் எம் எஸ் கள் பலருக்கும் கேளாமலேயே (umnsolicited) அனுப்பப்பட்டது. இதனால் இதைமறுத்து பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்; பங்கு வாங்க விண்ணப்பித்திருந்தவரகள் விரும்பினால் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்குமாறு *"செபி"* ஆணை பிறப்பிக்க வேண்டி வந்தது.

தீயேல்லாம் எரிந்து முடித்த பிறகு வந்து சேர்ந்த ஃபயர் பைட்டிங் லாரி மாதிரி...

*செவ்வானம்*

பிகு: குரங்குக் குளியல் = மங்கி பாத் = மனதின் குரல்

Saturday, February 19, 2022

இந்த சிரிப்புப் போலீசை நம்பியா?

 *நாளொரு கேள்வி: 18.02.2022*

 தொடர் எண் : *627*

 இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *.சுவாமிநாதன்*

########################

 *"செபி"யின் திகில் கதைகள்*

 கேள்வி: எல்..சி பங்கு விற்பனையின் மூலம் பங்குச் சந்தை கட்டுப்பாடு ஆணையத்தின் (செபிகண்காணிப்பிற்குள் வருவதால் அதன் செயல்பாடுகள் ஒழுங்கு செய்யப்படும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறதே!

 *சுவாமிநாதன்*

 கடந்த நான்கு  நாட்களில் இரண்டு கதைகள் வெளி வந்துள்ளன. இரண்டும் செபியோடு தொடர்புடையவை

 *ஒன்று* தேசிய பங்குச் சந்தை ஆணையத்தின் நம்பர் 1 ஆக அதாவது சி. . வாக இருந்த *சித்ரா இராமகிருஷ்ணா* அவர்கள் 2013 முதல் 2016 வரை *இமயமலை யோகி* ஒருவரின் ஆலோசனை பேரில்தான் முடிவுகளை எடுத்தார் என்பது. 280 லட்சம் கோடி மூலதனம் சுற்றி வரும் ஒரு பங்குச் சந்தை மூன்று ஆண்டுகள் எப்படி செயல்பட்டுள்ளது பாருங்கள். தேசிய பங்கு சந்தையின் (NSE) ஐந்தாண்டு மதிப்பீடுகள், நிதி தகவல்கள், டிவிடெண்ட் விகிதங்கள், இயக்குனர் அவை விவாத பொருள்கள், வணிகத் திட்டங்கள் ஆகிய *எல்லா ரகசியங்களும்* இமயமலை "சிரோன்மணி" யிடம் தெரிவிக்கப்பட்டதாம். இவரின் நடவடிக்கைகளை பெரிய பெரிய அரசுத் துறைகள், வங்கிகள் யாரும் ஆட்சேபிக்கவில்லையாம்.

 யோகி ஆலோசனையின் பேரில் தனது உறவினர் *ஆனந்த் சுப்ரமணியன்* என்பவரை நம்பர் 2 ஆக, தலைமை செயல் அலுவலர் ஆக, நியமித்து கொண்டு அவருக்கு இரண்டு ஆண்டுகளில் சம்பளத்தை 1.68 கோடியில் இருந்து 5 கோடி வரை சித்ரா இராமகிருஷ்ணா உயர்த்திக் கொண்டே போயிருக்கிறார். ஆனந்த் சுப்ரமணியம் வாரம் ஐந்து வேலை நாட்களில் மூன்று நாள் வந்தால் போதும் என்றும் "மலை"யில் இருந்து ஆலோசனை வந்துள்ளது. திகில் கதை போல வர்ணிக்கும் "இந்து பிசினஸ் லைன்" (13.02.2022) தலைப்பு செய்தியின் கிளைமாக்ஸ் தான் *திகிலின் உச்சம்.* "இவ்வளவும் செய்த சித்ரா இராமகிருஷ்ணாவுக்கு செபி தந்துள்ள தண்டனை மிக அற்பமானது". அவருக்கு வர வேண்டிய விடுப்பு பண்மாக்கல் மற்றும் நீட்டிக்கப்பட்ட போனஸ் ரூ 4.37 கோடியை நிறுத்த சொல்லி இருக்கிறது. *(இந்த தண்டனை எந்த யோகி யாருக்கு சொன்ன ஆலோசனையோ?)*

 இரண்டாவது, சி. . மற்றும் மேலாண்மை இயக்குநர் பதவிகளை ஒருவரே வைத்துக் கொள்ளாமல் பிரிப்பது என்ற செபியின் ஆணை. இது *உதய் கோடாக் குழுவின்* பரிந்துரை. 2020 ஏப்ரலுக்குள் செய்ய வேண்டுமென உத்தரவு. 2019 செப்டம்பர் வரை டாப் 500 நிறுவனங்களில் 50 சதவீத நிறுவனங்களே நிறைவேற்றி இருந்தன. *செபி சும்மா இருக்குமா? கோபம் வராதா?* வந்தது. ஆனாலும் "அடக்கிக் கொண்டு" காலக் கெடுவை 2022 ஏப்ரல் வரை இரண்டு ஆண்டுகள் நீடித்தது.

 காலக் கெடு நெருங்க நெருங்க நிறுவனங்களின் வயிற்றைக் கலக்க வேண்டும் அல்லவா! பிப்ரவரி 2022 துவங்கிய பிறகு செபி கணக்கை பார்த்தது. 2019 இல் 50 சதவீதம். இப்ப 54 சதவீதம். *வயிறு கலங்கியது. நிறுவனங்களுக்கு அல்ல. செபிக்கு...* கோபம் வராதா? வந்தது. அதனால் தடாலடி அறிவிப்பு. என்ன தெரியுமா? இரண்டு பதவிகளையும் பிரிப்பது என்பது கட்டாயம் அல்ல; அவரவர் விருப்பம். இப்போது நிறுவனங்கள் மீற முடியுமா

 இந்த *சிரிப்புப் போலிசுதான்* எல்..சி போன்ற நிறுவனங்களை பங்கு விற்பனைக்கு ஆளான பிறகு கண்காணிப்பை பலப்படுத்தி பாதுகாக்குமாம்!

 *செவ்வானம்*