Showing posts with label அருவி. Show all posts
Showing posts with label அருவி. Show all posts

Sunday, July 12, 2020

மணமகள் அருவியும் குற்றால ஏக்கமும்



கீழே உள்ள காணொளி ஒரு தோழர் அனுப்பியது. 



பெருவில் உள்ளது. மணமகளின் தோற்றத்தில் இருப்பதால் அதற்கு மணமகள் அருவி (Bride Falls) என்று பெயராம். கூகிளில் தேடினால் பெருவில் மட்டுமல்ல, இன்னும் ஒரு பத்து அருவிகள் BRIDAL VEIL FALLS  (மண மகளின் முகத்திரை) என்று அழைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் அவை எவற்றிலும் இது போன்ற அமைப்பு இல்லாததால் விபரங்களுக்குள் செல்லவில்லை.

இதை எழுதும் நேரத்தில்  கேரளப் பயணத்திற்குப் பிறகு எழுதிய


என்ற பழைய பதிவுதான் நினைவுக்கு வந்தது. 

இந்த அருவிகள் எதிலும் கூட குளிக்க வாய்ப்பு கிடையாது.

குற்றாள அருவிகளில் தண்ணீர் ஓட்டம் அற்புதமாக இருக்கிறது என்றும் கொரோனா காலம் என்பதால் யாருக்கும் குளிக்க வாய்ப்பு கிடையாது என்று சில நாட்கள் முன்பு படித்த செய்தியும் ஏக்கம் அளித்தது. 


Monday, December 7, 2015

இத்தனை அருவிகள் இருந்து என்ன பயன்?



சென்னை வெள்ளம் காரணமாக கேரளப் பயணம் பற்றி எழுதுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்கிறேன்.

கேரளாவில் பல நீர்வீழ்ச்சிகளைப் பார்த்தோம்.

அவற்றின் எழில் கொஞ்சும் புகைப்படங்கள் கீழே.









இத்தனை அருவிகளுக்கு சென்றால் என்ன? ஆக்ரோஷத்தோடு அவை சீறிப் பாய்ந்தால்தான் என்ன?

இவற்றை வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்ததே தவிர, ஒரு அருவியிலும் கூட குளிக்க முடியவில்லை. அதிரப்பள்ளி அருவியை தூரத்தில் இருந்து பார்க்க முடியுமே தவிர, கிட்டவே நெருங்க முடியாது என்கிற போது எங்கிருப்பது குளிப்பது?

அதே போல்தான் மற்ற அருவிகளும். எதிலுமே குளிப்பதற்கான வாய்ப்பு கிடையாது.

ஆறு அருவிகளைப் பார்த்தும் அருவிக்குளியல் என்ற சுகானுபவம் எங்குமே கிடைக்கவில்லை.

அடுத்த வருடம் குற்றாலம் போக வேண்டியதுதான்.