Showing posts with label பி.எஸ்.என்.எல். Show all posts
Showing posts with label பி.எஸ்.என்.எல். Show all posts

Wednesday, October 23, 2024

காவியடிச்சா பி.எஸ்.என்.எல் ஓடாது

 


காலி செய்து விட்டு காவியா?

உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி அரசு வெற்று, வெட்டி நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டும் குறைச்சல் கிடையாது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லோகோவிற்கு காவிச்சாயம் பூசி விட்டு “கனெக்டிங் இந்தியா” என்ற வாசகத்தை “கனெக்டிங் பாரத்” என்று மாற்றியுள்ளது.

அப்படி லோகோவைற்கு காவி அடித்துள்ள மோடி அரசு,

பி.எஸ்.என்.எல்  நிறுவனத்தை  இழப்பின் பிடியிலிருந்து விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டிய பாக்கித் தொகையை வசூலித்துக் கொடுக்க எந்த  முயற்சியும் எடுத்தது இல்லை.

பி.எஸ்.என்.எல் தனது கட்டமைப்பை மேம்படுத்த தேவைப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.

பி.எஸ்.என்.எல் மீட்பிற்காக அறிவிக்கப்பட்ட தொகையை கொடுக்கவும் இல்லை.

4 ஜி  சேவை வருகிறது, வருகிறது என்ற சொல்லப் படுகிறதே தவிர, இன்னும் வந்த பாடில்லை.

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் ஒழுங்காக கொடுக்கப்படுவதில்லை.

“கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடாது” என்பது எந்த அளவு உண்மையோ அது போல லோகாவுக்கு காவிச்சாயம் பூசுவதன் மூலம் பி.எஸ்.என்.எல் நிலைக்காது, முன்னேறாது.

தான் வளர்த்த நாய் இறந்து விட்டது என்பதை நாகேஷிடம் வருத்தமாக சொல்லும் நண்பர் தான் அதற்கு பெயரெல்லாம் வைத்ததாக சொல்வார். அதற்கு நாகேஷ், “நாய்க்கு பேர் வச்சியே நாயே, சோறு வச்சியா?” என்று கேட்பார்.

“லோகோவுக்கு காவிச்சாயம் பூசினியே, பி.எஸ்.என்.எல் பிரச்சினைகளை தீர்க்க என்ன செய்தாய்” என்று நாம் கேட்க வேண்டும்.

Friday, April 29, 2022

5 G அவரும் சொல்லவில்லை, இவர்களும் . . .

 


"இன்னும் மூன்று நான்கு மாதத்தில் 5 ஜி சேவை அறிமுகமாகும். கட்டணம் தொடர்பாக தனியார் தொலைபேசி நிறுவனங்களோடு ஒரு உடன்பாடு விரைவில் வரும். முன்பு சொன்ன கட்டணத்திலிருந்து 30 லிருந்து 40 % வரை குறைத்துள்ளோம்"

இது தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் என்பவர் பத்திரிக்கையாளர்களிடம் சொன்னது.

5 ஜி க்காக தனியார் தொலைபேசி நிறுவனங்களோடு பேசிக் கொண்டிருப்பதாக சொன்ன மந்திரியும்

4 ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நடத்த எப்போது அனுமதி தரப் போகிறோம் என்று சொல்லவில்லை.

அப்படி ஏதாவது திட்டம் உண்டா என்று பத்திரிக்கையாளர்களும் கேட்கவில்லை. 

பிகு: முன்பு முன்மொழிந்த கட்டணத்திலிருந்து 90 % குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கடும் அதிருப்தியாம் . . . 


Sunday, October 18, 2020

எஸ்.பி.பி - நிறைவாக . . .


 

எஸ்.பி.பி க்கான இசையஞ்சலியின் நிறைவுப் பகுதி இது. 

இதற்கு முன்பாக ஒன்பது பதிவுகளில் அவர் பாடிய 151 பாடல்களின் காணொளிகளை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அவர் பாடல்களில் பதினொன்றை பாடும் நிலாவிற்கு வயலினில் அஞ்சலி

என்று என் மகன் வயலின் வாசித்ததையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இப்பதிவில் நடிகராகவும் முத்திரை பதித்த எஸ்.பி,பி அவருக்கே பாடிய பாடல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

மண்ணில் இந்த காதலன்றி



சின்ன கண்மணிக்குள்ளே



வழி விடு, வழி விடு, என் தேவி வருகிறாள்



காதலிக்கும் பெண்ணின்



வண்ணம் கொண்ட வெண்ணிலவே



மிதுனம் என்ற தெலுங்குத் திரைப்பாடல் (என்னைப் போன்ற உணவுப் பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்)



நாற்பதாயிரம் பாடல்களில் வெறும் 158 பாடல்கள்தானா என்று எனக்குள்ளே ஒரு கேள்வி வந்தது. பதிலும் உடனே மனதில் தோன்றியது. 

எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று பரிந்துரை கொடுத்த மல்ஹோத்ரா குழு அறிக்கையை அமலாக்கக்கூடாது என்று 1994 ல் கையெழுத்து நடத்துகிறோம்.  நாடெங்கிலுமாக ஐம்பத்தி ஐந்து லட்சம் மக்கள் கையெழுத்திடுகின்றனர். 25.08.1994 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி  அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அவர்களிடம் ஒப்படைக்கிறார். அப்போது நரசிம்மராவ் "100 கோடி மக்கட்தொகையில் ஐம்பத்தி ஐந்து லட்சமா?" என்று நக்கலாக கேட்கிறார். 

அன்று ஐம்பத்தி ஐந்து லட்சம் மக்களோடு துவங்கிய இயக்கம்தான் இன்று வரை எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்து வருகிறது. இத்தனை பாடல்களையும் நான் வேகமாக தரவிறக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இன்னொரு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆப்டிகல் பைபர் இணைப்பே காரணம்.

ஆக இந்த 158 பாடல்கள் என்பது அவரது பாடல்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறு.  அதன் ருசி அதிகம்தான்.

மற்ற கலைஞர்களை விட ஏன் எஸ்.பி.பி மீது மக்கள் அதிகமான நேசத்தைக் காண்பித்தார்கள். தங்கள் இல்லத்து இழப்பாக ஏன் இன்னும் வருந்துகிறார்கள்?

குரலினிமைக்கா?

பாடும் திறனுக்கா?

அவர் பாடல்கள் அன்றாட வாழ்வின் அங்கமான காரணத்தாலா?

இவை அனைத்தும் உண்மை. இதைத் தாண்டி இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. அதை சொல்வதற்கு முன்பாக இன்னொரு காணொளியையும் பார்த்து விடுங்கள்.





இரண்டு இசை விற்பன்னர்களும் கொஞ்சம் கூட அகந்தை இல்லாமல் ஒருவரை ஒருவர் மதிக்கும் பாங்கு இருக்கிறதே, இதிலே கொஞ்சம் கூட நடிப்பில்லை. உண்மையான உணர்வன்றி வேறெதுவும் இல்லை.

தன் கலையை, சக கலைஞர்களை, மனிதர்களை நேசிக்கிற ஒரு முழுமையான மனிதராக எஸ்.பி.பி வாழ்ந்தார். 

அவர் நினைவு என்றும் நம் மனதில் வாழும். 

.... இசையஞ்சலி நிறைவுற்றது




Thursday, October 1, 2020

BSNL பிறந்த நாள் தொடரட்டும்.

  


இன்று நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல, பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கும் பிறந்த நாள்.

 மத்தியரசின் அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத்துறையாக ஒன்றாக இருந்தது பிற்காலத்தில் தனித்தனித் துறைகளாக பிரிக்கப் பட்டது. பின்பு 2000 ம் ஆண்டு இதே நாள் பாரத் சன்சார் நிகாம் லிமிட்டெட் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனமாக மாற்றி அமைக்கப்பட்டது.

 தோன்றியது முதல் பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் நிறுவனம்  பி.எஸ்.என்.எல்.

 இந்தியாவில் அலைபேசி சேவை தொடங்கப்பட்டாலும் பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்திற்கு அனுமதி  வழங்கப்படவில்லை. மற்ற நிறுவனங்கள் நன்றாக கால் பதித்து நின்ற பின் அனுமதி கிடைக்கிறது. ஆனாலும் அவர்கள் அலைபேசி பிரிவில் மூன்றாவது பெரிய நிறுவனமாக வளர்கிறார்கள்.

 அவர்களது கட்டமைப்புக்கள், அதாவது அவர்களின் கேபிள்கள், டவர்கள், ஆகியவை தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கான கட்டணம் தரப்படாமல் ஏமாற்றப்படுகிறது. தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் போட்டாலும் அது வசூலிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது.

 மத்தியரசு செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கூட கட்டாமல் ஏமாற்றி வருகிறது. தன்னுடைய சேவையை சிறப்பாகச் செய்ய, புதிய டவர்களை அமைக்க, உபகரணங்கள் வாங்க திட்டமிடுகிறது. ஆனால் அப்படி வாங்குவது தடுக்கப்படுகிறது.

 எந்த வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து பி.எஸ்.என்.எல்.  உபகரணங்கள் வாங்குவது தேசப் பாதுகாதுப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறதோ, அந்த நிறுவனத்திடம் இருந்துதான் மற்ற தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கிறது. அப்போது பி.எஸ்.என்.எல்.  நிறுவன வளர்ச்சியை தடுப்பது மட்டும்தான் அரசின் நோக்கம் என்பது தெளிவாக்குகிறது.

 பி.எஸ்.என்.எல்.  தன்னுடைய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு அரசிடம் சில உதவிகள் கேட்டது. தொலை தொடர்புத்துறையின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்திற்கு மாற்றித்தரப் பட வேண்டும்.  கடன் வாங்க அனுமதி தர வேண்டும். 4 ஜி சேவை அளிக்கப்பட வேண்டும்.

 ஆனால் இது எதையுமே மோடி அரசு செய்யவில்லை.

 மாறாக பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை சீரமைக்கிறோம் என்ற பெயரில் ஆரவாரமாக ஒரு பெரிய பேக்கேஜை சில ஆயிரம் கோடிகளோடு விருப்ப ஓய்வுத்திட்டத்தோடு அறிவித்தது., அதற்கு சில மாதங்கள் முன்பிருந்தே சரியான தேதியில் ஊதியம் கொடுக்காமல் ஒரு அச்சத்தை ஊழியர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கு பல மாதங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவே இல்லை. அதனுடைய விளைவாக ஐம்பது சதவிகிதம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை நாடினார்கள். அவர்களும் வஞ்சிக்கப்பட்டனர் என்பது தனிக்கதை.

 அரசு சொன்ன பணமும் வரவில்லை. அரசு உறுதியளித்த 4 ஜி  சேவையும் இது நாள் வரை கிடைக்கவில்லை. ஜியோ வாழ பி.எஸ்.என்.எல்.  அழிய வேண்டும் என்பதே மோடியின் ஆசை.

 என்னுடைய அனுபவத்திற்கு வருகிறேன். கடந்த வருடம் நவம்பரில் ஒரு பெரிய இடி இடித்ததில் என்னுடைய ப்ராட் பேண்ட் மோடம் எரிந்து விட்டது. அதை சரி செய்ய எடுத்துக் கொண்டு போன போது, புதிய மோடம்தான் வாங்க வேண்டியிருக்கும். அதற்கு செலவு செய்வதற்குப் பதில் புதிய ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு பெறுவது நல்லது என்று ஆலோசனை சொன்னார்கள். அப்படியே பழைய இணைப்பை சரணடைந்து விட்டு புதிய ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு பெற்றேன்.

 ஒரு வருடமாக ஒரு நிமிடம் கூட இணைய வசதி தடை படவே இல்லை. வேகமும் மிகச் சிறப்பாக இருக்கிறது. பெரிய கோப்புக்கள் கூட உடனடியாக தரவிறங்கி விடுகிறது.  உண்மையிலேயே மன நிறைவடைந்த வாடிக்கையாளனாக பி.எஸ்.என்.எல் நீடுழி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 4 ஜி சேவையும் கிடைத்தால் பி.எஸ்.என்.எல் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்றே நம்புகிறேன். தொடர்ந்து பிறந்த நாள் கொண்டாடும் என்றும் நம்புகிறேன்.

 ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது.

 பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காகவே பிறக்கிறது என்று சொன்ன ஒரு படுபாவியை பிரதமராகக் கொண்டுள்ளது தேசம்.

 மக்களின் வியர்வையில் உருவான நிறுவனம் பி.எஸ்.என்.எல். தாமதர்தாஸ் மோடியின் சொத்தல்ல. மக்கள் அனைவரும் குரல் கொடுத்தால் நம்மால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நிச்சயம் பாதுகாக்க முடியும்.

 

HAPPY BIRTHDAY BSNL

 

Thursday, August 13, 2020

BSNL ஐ அழிக்கும் துரோகிகள் யார்?

 



அனந்த குமார் ஹெக்டே என்றொரு பாஜக வெறியன் பி.எஸ்.என்/எல் ஊழியர்கள் மீது விஷம் கக்கியுள்ளான்.

அரசாங்கம் எவ்வளவோ நிதி ஒதுக்கியும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலை செய்யாமல் அதை பாழடிக்கிறார்கள், துரோகிகள், அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு தனியார்மயமாக்குவோம் என்றெல்லாம் பிதற்றியுள்ளான இந்த முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி.

பி.எஸ்.என்.எல்லை முடக்கிப் போட்டு அம்பானியின் ஜியோவுக்கு சேவகம் செய்வது இந்த துரோகிகள்தான்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கென்று நிதி ஒதுக்குவதாக பீற்றிக் கொண்டு ஒரு பைசா கூட கொடுக்காமல் ஏமாற்றி வருவது மோடி அரசுதான்.

விருப்ப ஓய்வில் போன 88,000 ஊழியர்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய தொகையை கொடுக்காமல் ஏய்த்து வருவதும் மோடி அரசுதான்.

4 ஜி சேவைக்கான டெண்டரை நிறுத்தி வைத்து பழி வாங்குவதும் இந்த துரோகிகள்தான்.

ஒப்பந்த ஊழியர்களை தற்கொலை செய்ய வைப்பதும் இந்த துரோக அரசுதான். 

ஜியோவுக்கு எடுபிடியாக செயல்பட பி.எஸ்.என்.எல் ஐ அழிக்கும் ஆட்சியை நடத்திக் கொண்டே ஊழியர்களை துரோகிகள் என்று தூற்றுகிறான் இந்த மானங்கெட்டவன்.

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல தனியார்மயத்துக்கு முன்னோட்டமாக இவனை பேச வைத்துள்ளது மோடி அரசு.

இப்படிப் பட்ட பொய்ப்பிரச்சாரத்தை பி.எஸ்.என்.எல் ஊழியர் அமைப்புக்களின் கூட்டுக் குழு மிகச் சரியாக கண்டித்துள்ளது.

இந்த வெறியனை மட்டுமல்ல, இவனை தூண்டி விட்ட துரோகிகளையும் ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டும்.

Wednesday, March 15, 2017

ஒன்னா சேராதே- போய்யா வேலையைப் பாத்துகிட்டு






சமீப காலமாக தொழிற்சங்க உரிமைகளை முடக்குவதற்கான பல முயற்சிகளை மோடி அரசு செய்து வருகிறது. மத்தியரசின் கட்டளைகளை நிறைவேற்றும் ஆயுதமாக  பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களை மாற்றி வருகிறது.

இது குறித்த விரிவானதொரு கட்டுரையின் தமிழாக்கத்தை  நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்கு முன்பாக

பி.எஸ்.என்.எல்  நிர்வாகம் அங்கேயுள்ள அங்கீரக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்பிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

உங்கள் உறுப்பினர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறதோ, அதைத் தாண்டி வேறு பிரச்சினைகள் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. ஊழியர் சங்கங்களும்  அதிகாரிகள்  அமைப்புக்களும்  கூட்டு  இயக்கம் எதுவும் அமைக்கக்கூடாது. இணந்து  எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்பதே அக்கடிதத்தின் சாராம்சம்.

தொழிலாளியும் அதிகாரியும் ஏண்டா ஒற்றுமையா இருக்கீங்க? தனித்தனியா இருந்தா உங்களை அடிக்க வசதியா இருக்குமே என்பதுதான் அக்கடிதம் சொல்லும் செய்தி.

பி.எஸ்.என்.எல்  ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் அபிமன்யு கொடுத்துள்ள பதில் சூடானது.

ஊழியர் சங்கங்களும் அதிகாரிகள் அமைப்புக்களும் கூட்டு இயக்கம் அமைத்து போராடி வருவதால்தான் நிறுவனத்தை இதுநாள் வரை பாதுகாக்க முடிந்துள்ளது. சேவையை மேம்படுத்து. நுகர்வோரை மகிழ்ச்சிப்படுத்து என்று பல கூட்டியக்கங்கள் நடத்தி வருகிறோம். இதை விரும்பாத ஏதோ அதிமேதாவி மூளையில்தான் இப்படிப்பட்ட விபரீத யோசனைகள் உருவாகி இருக்கும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரு கடிதங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். 




மோடியரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.