Friday, October 4, 2019

FDFS மோகம் - வேலைக்கு ஆபத்து




ஆந்திராவில் நேற்று நடந்த சம்பவம் இது. சிரஞ்சீவி நடித்த “சீயாரா நரசிம்ம ரெட்டி” என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி நடித்து வெளியாகும் படம் என்பதால் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருந்துள்ளது.

“முதல் நாள், முதல் காட்சி” பார்த்திட வேண்டும் என்ற ஆர்வம்தான் ஒரு ஏழு பேருக்கு சிக்கலாகியுள்ளது.

கொயில குண்ட்லா என்ற ஊரில் உள்ள தியேட்டரில்  அதிகாலை 5.30 மணி சிறப்புக் காட்சிக்கு ஏழு சப் இன்ஸ்பெக்டர்கள் சென்றுள்ளனர்.  சென்றதோடு நின்றிருக்கக் கூடாதா! முதல் நாள் முதல் ஷோ பார்க்கிறோம் என்று போட்டோவோடு சமூக வலை தளங்களில் பதிவேற்ற அது வைரலாகி கர்னூல் மாவட்ட எஸ்.பி வரை செல்ல அவர் டென்ஷ்னாகி விட்டார்.

காந்தி ஜெயந்தி  அன்று சிறப்பு கிராமக் கூட்டங்கள் நடைபெறும் வேளையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், அனுமதியோ விடுப்போ இல்லாமல், மேலதிகாரி யாருக்கும் தகவல் சொல்லாமல் இப்படி ஏழு சப் இன்ஸ்பெக்டர்கள், அதுவும் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் கூடி வேலை நேரத்தில் சினிமா பார்த்துள்ளார்கள் என்பது அவருக்கு எரிச்சலூட்டியுள்ளது. அதனால் அவர்கள் இடை நீக்க்கம் செய்யப்பட்டுள்ளனர்

அவங்க சினிமா போனது தப்பில்லை. காந்தி ஜெயந்தி அன்று போனதுதான் தவறு. அதை போட்டோ எடுத்து வாட்ஸப்பில் போட்டதுதான் தவறு  என்று மற்ற காவல்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

வாட்ஸப்பினால் வந்த வினை இது !

No comments:

Post a Comment