Sunday, October 27, 2019

"பிகில்" பிடிச்சிருக்கு . . .

இன்று பார்த்த படம் "பிகில்"



வழக்கமான விஜய் படம். முதல் பாதி கொஞ்சம் மொக்கையாகவும் இரண்டாவது பாதி விறுவிறுப்பாகவும் செல்கிற படம். வழக்கமான எல்லா விளையாட்டுப் படங்களைப் போலவே கடைசி நிமிடத்தில் நாயகனின் அணிக்கு வெற்றி கிடைக்கிறது.

ஆனாலும் இந்த படம் எனக்கு பிடித்திருந்தது.

ஆம்.

அதற்குக் காரணம் படம் சொல்லும் இரண்டு  செய்திகள்.

அமில வீச்சுக்கு உள்ளானவர்கள் விகாரமான தங்கள் முகத்தைக் காண்பிக்க அஞ்சி முடங்காமல் நம்பிக்கையோடு வெளியே வர வேண்டும் 

என்றும்

திருமணத்தோடு பெண்களின் கனவுகள் கருகக் கூடாது, படிப்போ, விளையாட்டோ, பணியோ தொடர வேண்டும்.

இன்றைக்கு அழுத்தமாக பரப்ப வேண்டிய செய்திகள் இவை என்பதால் மற்ற குறைகளை மறந்து விடலாம். 

ஆனாலும் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்.

நல்ல நடிகரான ஆனந்தராஜை வீணடித்திருக்க வேண்டாம். மாநகரக் காவல் படத்தை தொலைக்காட்சியில் போட்டால் அவருக்காகவே பார்ப்பேன். கொடூர வில்லனாக இருந்தாலும் ரசிக்க வைப்பார்.

1 comment:

  1. குண்டம்மா என்று உடல்ரீதியாக இழிவு படுத்திய காட்சியை கண்டித்திருக்க வேண்டும்

    ReplyDelete