Friday, October 18, 2019

வரலாறு முக்கியம்தான் அமித்து . . .



பழைய வரலாற்றை அழித்து விட்டு புதிய வரலாற்றை எழுதுங்கள் என்று அமித் ஷா அறைகூவல் விடுத்துள்ளார்.

வரலாற்றுக்கும் சங்கிகளுக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. ஏனென்றால் இந்திய வரலாற்றில் அதிலும் குறிப்பாக இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சொல்லிக் கொள்வது போல சங்கிகளுக்கு எந்த இடமும் கிடையாது. ஏனென்றால் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இரண்டு சங்கிகள் மட்டும் இடம் பெற்றுள்ளார்கள்.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளை காட்டிக் கொடுத்த துரோகியாக “அடல் பிஹாரி வாஜ்பாய்”

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு விடுதலை பெற்ற கோழையாக “சவர்க்கர்”.

எந்த வரலாறும் இல்லாததால் பழைய வரலாற்றை எழுதுங்கள் என்று புறப்பட்டுள்ளார் அமித் ஷா. பொய்களை வைத்துக் கொண்டு மட்டுமே பிழைப்பு நடத்தும் சங்கிகள் புது  வரலாறு எழுதினால் அது எப்படி இருக்கும்?

சவர்க்கர் இல்லையென்றால் 1857 சிப்பாய் புரட்சி பற்றி சவர்க்கர் எழுதாவிட்டால் யாருக்குமே தெரிந்திருக்காது என்று அமித் கூறியது ஒரு சாம்பிள்.

அட மங்குணி மந்திரியே

1857 சிப்பாய்கள் எழுச்சி நடந்த காலத்திலேயே அந்த ஆண்டிலேயே1857 செப்டம்பர் 16 நியூயார்க் ட்ரிபியூன் இதழில் "The Indian Revolt"   என்று   மாமேதை காரல் மார்க்ஸ் எழுதி விட்டார் தெரியுமா?

தனக்குத்தானே வீரன் என்று பட்டம் கொடுத்துக் கொண்ட சவர்க்கர் பெயரைச் சொல்வதற்கும் அந்த தேசத்துரோகிக்கு பாரத் ரத்னா பட்டம் தர வேண்டும் என்று சொல்வதிலேயே இவர்களின் வரலாற்று உணர்வு புல்லரிக்க வைக்கிறது.

வரலாறு என்பது உங்களின் டுபாக்கூர் போட்டோஷாப் மோசடி வேலை அல்ல. 

வரலாறு என்பது உண்மை. 
வரலாறு என்பது நிகழ்ந்தது.

ஆணழகனாய் எதிர்கால சந்ததியினர் நினைக்க வேண்டும் என்று இம்சை அரசன் தீட்டிய மோசடி  ஓவியம் அல்ல.

புதிய வரலாறு என்ற பெயரில் புதுக்கதை விடாதீர்கள் சங்கிகளே!

மோசடிப் பேர்வழிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பிரிவினைவாதிகள், நடிகர்கள், மத வெறியர்கள், தரகர்கள், ஆணாதிக்கவாதிகள் என்று இந்திய வரலாறு உங்களது பங்களிப்பை ஏற்கனவே மிகச் சரியாக பதிவு செய்துதான் வைத்துள்ளது

No comments:

Post a Comment