Saturday, October 12, 2019

அசைவ உணவால் புனிதம் கெடவில்லையா?




மேலே உள்ளது நேற்று மோடி சீன அதிபருக்கு மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் வழங்கிய விருந்தில் இடம் பெற்ற உணவு வகைகளின் பட்டியல்.

ஆடு, கோழி, மீன் என்று எதற்கும் குறைவில்லை. 

ஆமாம்.

ஒரு கோயில் வளாகத்திற்குள் இத்தனை அசைவ உணவு வகைகள் பறிமாறப்பட்டதால் கோயிலின் புனிதம் கெட்டு விட்டது என்று எச்.ராசா வகையறாக்கள் ஏன் இன்னும் போர்க்கொடி எழுப்பவில்லை.

விமான நிலையத்தில் பூர்ண கும்ப மரியாதை கொடுக்க வந்த கூட்டத்தை வைத்து தீட்டு கழித்து தோஷ நிவர்த்தி செய்து விடலாம் என்ற நினைப்பாக இருக்குமோ?

அது கோயில் கிடையாது. வெறும் சுற்றுலாத்தளம் என்றெல்லாம் முட்டுக் கொடுத்து யாரும் வர வேண்டாம். இருபது வருடங்களுக்கு முன்பாக அங்கே சென்ற போது வழிபாடு எல்லாம் இருந்தது. பெருமாள் சன்னதியில் சடாரி வைத்து துளசி தீர்த்தம் எல்லாம் கொடுத்ததை வெளியில் நின்று வேடிக்கை பார்த்தது நினைவில் உள்ளது. 

காவிக்கயவர்களுக்கு கோயில், கடவுள், பக்தி என்று எதுவும் கிடையாது. 

கோயில் வளாகத்திற்குள் ஆசிபாவை வன் புணர்ச்சி செய்து கொடூரமாக கொலை செய்த கூட்டம்தானே இவர்கள்!

உ.பி யில் இவர்கள்தானே சாமி பிரசாதமாக குவார்ட்டர் பாட்டில் கொடுத்தவர்கள்!

அரசியல் ஆதாயத்திற்காக கடவுளின் பெயரைப் பயன்படுத்துபவர்களே தவிர இவர்கள் பக்தர்கள் அல்ல, வெறி பிடித்த பக்தாள். அவ்வளவுதான் . . .

பிகு: ராஜீவ் காந்தி உயிரோடு இருந்த காலத்தில் லட்சத்தீவில் அவர் அளித்த ஒரு விருந்தின் உணவு வகைகள் குறித்து சில மாதங்கள் முன்பு கூட சங்கிகள் திட்டிக் கொண்டு இருந்தார்கள். மோடி ஏன் சீன ஜனாதிபதிக்கு ஒரு எளிய விருந்தை அளித்திருக்கக் கூடாது?  ராஜீவ் காந்தியை திட்டிய வாய்கள் இப்போது என்ன பேசும்?

No comments:

Post a Comment