Monday, October 28, 2019

பெரும்பான்மை பெற்றும் அந்தரத்தில் . . .



மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக-சிவசேனா கூட்டணி மஹாரஷ்டிர மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றது. ஹரியானாவில் பெரும்பான்மையை இழந்தது.

ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் அஜய் சவுதாலாவின் மகன் துஷ்யந்த் சவுதாலாவுடன் பேரம் பேசி, சிறையில் உள்ள அஜய் சவுத்தாலாவிற்கு பரோல் கொடுத்து, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான சுயேட்சை கோபால் கண்டாவின் ஆதரவைப் பெற்று மனோகர் லால் கட்டார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று விட்டார்.

ஆனால் மஹாராஷ்டிராவிலோ இரண்டு கூட்டணிக் கட்சிகளுக்குள் இது வரை எந்த உடன்பாடும் வரவில்லை. அதிலாரபூர்வமான பேச்சுவார்த்தை கூட இன்னும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக ஆளுனரை  சந்தித்துள்ளனர். தீபாவளி வாழ்த்து சொல்ல சென்றதாக வேறு கதைத்துள்ளனர்.

சிவசேனாவிற்கு முதல்வர் நாற்காலி மீது கண். ஐந்து வருடங்கள் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் இரண்டரை வருடங்களாவது அந்த பதவியின் சுகத்தை ருசி பார்க்க நினைக்கிறது.

வேறு கட்சியாக இருந்திருந்தால் இத்தனை நேரம் சிவசேனா எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியிருப்பார்கள், சி.பி.ஐ ரெய்ட் மூலம் மிரட்டி வழிக்கு கொண்டு வந்திருப்பார்கள்.

ஆனால் சிவசேனாவோ பாஜகவுக்கு நிகரான கிரிமினல் கட்சி, குண்டர் பலம் அதிகம். அதனால் அவர்கள் மீது கைவைக்கும் தைரியம் கிடையாது.

ஆகவேதான் இழுபறி தொடர்கிறது. என்ன காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிவசேனா காலில் விழுவதற்குப் பதிலாக இந்த இரண்டு கட்சிகளின் எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கிடலாம் என்று முயற்சி செய்யலாம்.

No comments:

Post a Comment