Friday, October 25, 2019

அதிகாரத்தின் அராஜகம் செல்லாது . . .



நேற்றைய தேர்தல் முடிவுகள் குறித்து . . .

200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று ஆரவாரமாக ஒருவர் சொன்னார். ஆனால் ஏற்கனவே இருந்ததை இழந்துள்ளோம்.

எதிர்க்கட்சிகளை உடைப்பதன் மூலம் வெற்றி பெறலாம் என்ற நினைப்பிற்கு பெரும் அடி விழுந்துள்ளது. ஏராளமானவர்கள் விலகியதால் இனி எதிர்காலமே கிடையாது என்று நினைக்கப்பட்ட சரத் பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் கட்சி ஐம்பது இடங்களுக்கு மேல் பெற்றுள்ளது. தலைவரே இல்லாத காங்கிரஸ் கட்சி 44 இடங்களை பெற்றுள்ளது. சிறிய கட்சிகள் 25 இடங்களை பெற்றுள்ளது.

இது மக்கள் விழிப்போடு உள்ளார்கள் என்பதைக் காண்பிக்கிறது. அதிகாரத்தின் அராஜகத்தைக் காண்பித்தால் மக்கள் தக்க பதிலடி தருவார்கள் என்பதை இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.


இது எதிர்க்கட்சிகள் யாரும் சொன்ன அறிக்கை இல்லை.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பாஜக வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட சிவசேனா கட்சி தன் அதிகாரபூர்வமான பத்திரிக்கையான சாம்னா வில் இன்று எழுதியுள்ள தலையங்கம்.

பாஜக அராஜகம் என்று நாங்கள் சொன்னால் துள்ளிக் குதிப்பவர்கள், தங்களின் கூட்டாளியே சொன்னதற்கு என்ன பதில் அளிப்பார்கள்?

ஆனாலும் பாஜக எந்நாளும் அராஜகப் போக்கை கைவிடாது என்பதுதான் யதார்த்தம்.

No comments:

Post a Comment