நேற்று
சங்கப் பணியாக புதுவை, கடலூர் சென்றிருந்தோம்.
இரவு வேலூர் திரும்ப இரவு பதினொரு மணிக்கு மேல் ஆகி விட்டது. கோட்டச் சங்கப்
பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் செந்தில்வேலை அவர் வீட்டில் இறக்கி விடச் சென்றால்
வழியெங்கும் ஒவ்வொரு தெருவிலும் குறைந்த பட்சம் நான்கு நாய்கள். ஒரு தெருவுக்குள் நுழைந்தால்
கிட்டத்தட்ட பதினைந்து நாய்கள் சாலை மறியல் செய்வது போல சூழ்ந்து கொண்டது. காருக்குள்
அமர்ந்த படி பாதுகாப்பாக எடுத்த படம்தான் மேலே உள்ளது.
இரு
சக்கர வாகனத்திலோ அல்லது நடந்து வந்தால் அவர்களின் கதி அதோகதிதான்.
இது
அந்த பகுதி என்று மட்டுமல்ல, வேலூர் முழுதுமே இதே நிலைமைதான்.
இந்தியாவில்
பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் உயரவில்லை.. தெரு நாய்களின் எண்ணிக்கை மட்டும்
பல மடங்கு உயர்ந்துள்ளது.
விலைவாசி
உயர்வை கட்டுப்படுத்த முடியாதது போல, தெரு நாய்களின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த
முயலவில்லை. தெரு நாய்கள் மூலம் மக்கட்தொகையை குறைக்கும் ஹிட்டன் அஜெண்டா ஏதாவது இருக்கிறதா என்று
தெரியவில்லை.
வேலூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே இதேநிலைதான்.
ReplyDeleteதமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதே நிலைதான் .
ReplyDeleteஒரு காலத்தில் முனிசிபாலிட்டி நாய் வண்டி வைத்து தெரு நாய்களை பிடித்து போவார்கள் .
இப்போது அது முடியாது .
சுப்ரீம் கோர்ட் 2015 ல் உத்தரவு உள்ளது .
அதன் படி நாயை கொல்லக்கூடாது .
நாய் உடம்பு சரியில்லை என்றால் கருணை
அடிப்படையில் கொல்லலாம் .
இது மாதிரி ஒரு உத்தரவு PETA போன்றவர்களின்
பெருமுயற்சியின் பின் நடந்துள்ளது .
Rabies என்ற காரணம் காட்டி நாய் பிடிக்கலாம் .
ஆனால் PETA பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது .