நீரா ராடியா டேப் விவகாரம் வெடித்த போது சங்கிகள் யோக்கிய சிகாமணிகள் போல துள்ளி குதித்தார்கள்.
ஆனால் இப்போது என்ன நிலவரம்?
மோடியின் தொகுதியான வாரணாசியில் நீரா ராடியா கட்டியுள்ள ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையை முதல்வர் மொட்டைச் சாமியார் திறந்து வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை முதல்வரின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிந்து விட்டு அவசரம் அவசரமாக அகற்றி விட்டார்கள்.
அந்த அவசரத்தின் பின்னே உள்ள மர்மம் என்ன?
நீரா ராடியா அம்மையார் முதலில் திறந்த மருத்துவமனை மதுராவில். ரத்தன் டாட்டா தான் திறந்து வைத்துள்ளார்.
ரத்தன் டாடாவும் மோடியும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பின்னே நிற்பது யாரென்று தெரிகிறதா?
அதே அரசியல் தரகர் நீரா ராடியாதான்.
இப்போது அந்த அம்மையார் அமிர்தசரஸில் 2000 படுக்கை வசதி கொண்ட ஒரு மருத்துவமனை கட்டப் போகிறாராம்.
தரகு வேலை பார்த்து கஜானாவை நிரப்பிய இவரைப் போன்றவர்கள், மக்கள் சேவை செய்யவா மருத்துவமனை திறக்கப் போகிறார்கள்!
லாப நோக்கு என்பதைக் காட்டிலும் அங்கே மூளைச்சாவு என்று அறிவித்து உடல் உறுப்புகளை பறிக்கும் கிரிமினல் நடவடிக்கை ஏதாவது நடக்கிறதா என்று ஆராய்ந்தால் நல்லது.
தன்னை வசை பாடிய கட்சியின் தலைவர்களைக் கொண்டே தனது மருத்துவமனையை திறக்க வைப்பதுதான் இச்சந்தேகத்திற்கு காரணம்.
No comments:
Post a Comment