எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லா கான் எழுதிய கட்டுரையின் முதல் பத்தியின் தமிழாக்கம் கீழே உள்ளது. மிகவும் முக்கியமான அக்கட்டுரையின் முழுமையான தமிழாக்கத்தை முடித்து ஒரிரு நாட்களுக்குள் பகிர்கிறேன்.
இந்தியா கொண்டாடுகிறது. உலகமும் கூட மகாத்மா
காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இப்பூவுலகில் நடமாடிய அற்புதமான ஆளுமைகளில்
காந்தியும் ஒருவர் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. அதிகமாக மதிக்கப்பட்டவர் அவர்.
அதே நேரம் மிக அதிகமாக வெறுக்கப்பட்டவரும் அவர்தான். அவரை ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும்
எதிரான போராட்டத்தின் அடையாளமாக பார்ப்பவர்கள் உலகெங்கும் மதிக்கிறார்கள். இந்தியாவை
“இந்து ராஷ்டிரம்” ஆக மாற்ற முடியாமல் போனதற்கு முக்கியமான காரணமானவர் என்று கருதுபவர்களால்
அவர் வெறுக்கப்படுகிறார். இந்த சக்திகள் மகாத்மாவின் கொலைகாரனை கொண்டாடி அவனை வணங்க
கோயில்கள் கூட கட்டுகிறார்கள். அதே நேரம் அவர்களே குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக காந்தியை
பயம்படுத்திக் கொள்ளவும் தீவிரமாக முயல்வது ஒரு முரண்நகை. இந்த முயற்சியை முறியடித்து
அவர்களின் போலித்தனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு தேச பக்தன் என்று சொன்ன வெடிகுண்டு சாமியாரை போபால் எம்.பி யாக்கி அழகு பார்த்த கூட்டம் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
ஒழுக்கமோ, தார்மீகமோ, நெறி முறையும் இல்லாத சந்தர்ப்பவாத பல வேடக் கட்சியல்லவா அது!
மகாத்மா காந்தி அவர்களின் சிலையின் நிழலைக் கூட நெருங்க அருகதையற்றவர்கள் ஆட்சியில் இருப்பதும் அவர்கள் அவரின் 150 வது பிறந்த நாளை கொண்டாடுவதும்தான் மிகப் பெரிய துயரம்.
கீழே உள்ள புகைப்படங்கள் எங்கள் சங்கத்தின் சார்பில் வழக்கம் போல மகாத்மா காந்தி அவர்களின் சிலைக்கு மாலை அணிகையில் எடுக்கப்பட்டவை
வேலூர்
புதுவை 1 கிளை
விழுப்புரம்
சிதம்பரம்
திருவண்ணாமலை
புதுவை கிளை 2
கடலூர்
நெய்வேலி
No comments:
Post a Comment