Wednesday, October 30, 2019

ட்ரம்பை நினைச்சேன், சிரிச்சேன்


ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரான பாக்தாதி கொல்லப்பட்டுள்ளார். பெரும்பாலான தீவிரவாத இயக்கங்களின் தோற்றத்தில் அமெரிக்காவின் ஆசி உண்டு. அவர்களால் வளர்க்கப்படுபவர்கள் அவர்களாலேயே கொல்லப்படவும் செய்கிறார்கள்.

பாக்தாதி ஒரு அழிவு சக்தி என்பதிலோ ஐ.எஸ் இயக்கம் உலகத்திற்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் என்பதிலோ மாற்றுக் கருத்தில்லை. உலகின் மிகப் பெரிய அரசு பயங்கரவாதம் என்பது அமெரிக்கா என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் ஒரு மரணத்தை எப்படி அணுகுவது, விவரிப்பது என்பதில் குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாத காட்டு மிராண்டி டொனால்ட் ட்ரம்ப் என்பதை அந்த மனிதன் கூறிய வார்த்தைகளே நிரூபித்து விட்டது.

"அவன் பதுங்கியிருந்த குகையை சுற்றி வளைத்து முன்னேறிய போது தப்பிக்க வழி தெரியாத நாயைப் போல தவித்தான். பிறகு வெடிகுண்டை வெடிக்க வைத்து மூன்று மனைவிகளோடு நாயைப் போல செத்துப் போனான்"

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவின் ஜனாதிபதி பேசுகிற பேச்சு இது!

கொடுமை!

படு மொக்கைப் படமான அஞ்சானில் வில்லன், சூர்யாவையும் அவன் நண்பனையும் பார்த்து "பன்னியை சுடற மாதிரி சுட்டுடுவேன்" என்று சொல்ல அந்த படா வில்லனை சூர்யா கடத்தி வந்து உள்ளாடையோடு உட்கார வைப்பார்.

அது வெறும் சினிமா காட்சி.

நாயைப் போல செத்துப் போனான் என்ற வார்த்தைக்காக யாராவது ட்ரம்பை கடத்தி  வில்லனுக்கு சூர்யா கொடுத்த அதே ட்ரீட்மெண்டை கொடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்த போது சிரிப்பு வந்து விட்டது. 





No comments:

Post a Comment