Tuesday, October 15, 2019

தலைவர் கங்குலிதான். ஆனா ?????




இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் அணித் தலைவர் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வாகப் போகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி என்பது இந்திய அணி அல்ல. கிரிக்கெட் வாரியம் எனும் பெரிய கிளப்பின் அணி. அரசின் எந்த கட்டுப்பாடுக்கும் தங்களை உட்படுத்திக் கொள்ள தொடர்ந்து மறுக்கிற அமைப்பு கிரிக்கெட் வாரியம்.  கோடிக்கணக்கான ரூபாய் புழலும் அமைப்பு.  மத்திய, மாநில அரசுகளுக்கு தர வேண்டிய வரி, வாடகை பாக்கிகளை தராமல் அடாவடி செய்து கொண்டிருக்கிற அமைப்பு. தமிழ்நாடு அரசிற்கு சேப்பாக்கம் மைதானத்திற்கு தர வேண்டிய வாடகை (அடிமாட்டு வாடகை) பாக்கியே நூறு கோடி ரூபாய்க்கு மேல் உண்டு.

பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் இந்திய கிரிக்கெட் வாரியமும் ஊழலும் என்று தாராளமாக சொல்லலாம். சூதாட்ட புகழ் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் கட்டுப்பாட்டை விட்டு கிரிக்கெட் வாரியம் செல்லாது என்பதற்கு அவரது மகள் ரூபா தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவரானது ஒரு உதாரணம்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எந்த நடவடிக்கை பற்றியும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் கண்டு கொள்ளாது. ஏனென்றால் சர்வதேச அமைப்புக்கு படி அளக்கிற பகவானே இந்திய வாரியம்தான்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக வேண்டுமானால் கங்குலி தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் புதிய செயலாளர் யார்?

மூலதனம் ஏதுமின்றி, உழைப்பு ஏதுமின்றி பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்த மனிதன். அமித் ஷா வின் மகன் ஜெய்ஷா.

கங்குலி ஒரு கிரிக்கெட் போராளி. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

தலைவர் அவராக இருந்தாலும் அதிகாரம் என்னவோ சீனுவிடமும் அமித் ஷா மகனிடமும்தான் இருக்கப்போகிறது.

வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக அவரிடம் வேறொன்று சொல்ல வேண்டியுள்ளது.

இந்த ஒரு வருடம் எச்சரிக்கையாக இருங்கள் கங்குலி.

உங்கள் பெயரில் எந்த முறைகேடும் நடக்க அனுமதிக்காதீர்கள். 

1 comment:

  1. சரியா சொன்னீங்க

    ReplyDelete