Sunday, October 27, 2019

இரவல் கவிதையோடு வாழ்த்து




கொண்டாடும் அனைவருக்கும் 
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

எங்கள் தென் மண்டல துணைத் தலைவர் தோழர் கே,சுவாமிநாதன்
அவர்களின் அர்த்தமிக்க கவிதையை இங்கே இரவல் பெற்று
பகிர்ந்து கொண்டுள்ளேன். 


*என்னருமை தீபத் திருநாளே!*

*ஒளியேற்று என் தேசத்தில்...*
***********************************

என் தேசம் எனக்கு               நிரம்ப நிரம்ப பிடிக்கும்...

அது பன் மலர் குலுங்கும் பரவசமான தோட்டம் என்பதால்...

ஒற்றை இந்தியா என்பதாலல்ல...
ஒன்றுபட்ட இந்தியா என்பதால்...
__________

தீபத் திருநாளே !                
நீயே என் தேசப்  பன்மைத்துவத்தின் சாட்சியம்...

உன்னை கொண்டாடுகிற 
நாள் வேறு...
காரணம் வேறு...                   வெவ்வேறு...

நேற்று ஒரு இந்தியர்        
இன்று ஒரு இந்தியர்        
நாளை ஒரு இந்தியர்         
வெவ்வேறு நாளில்...
___________

நரகாசுரன் வதம் என            நம்புபவர் நிறைய உளர்...
ராமன்- சீதை வனவாசம் முடிந்து திரும்பிய நாளென்பாரும் உண்டு...
காளியின் நாள் என்பார்          வங்கத்து சோதரர்...

ஏற்றத்தாழ்வான தேசத்தில் என்னை எட்டிப் பார்க்க மாட்டாயா என லட்சுமியை வணங்குவார் ஏழைகள் பலர்...

மகாவீரர் எனும் அறிவு தீபம்           
முக்தி பெற்ற நாளென ஒளியேற்றுவார் சமணர்...
குரு ஹர் கோவிந்த சிங் விடுதலையான நாள் என சீக்கியர்...
நேபாள புத்த மக்கள் சிலரும் கொண்டாடுவார்...
___________

அவரவர்க்கு அவரவர் நம்பிக்கை...
வேறு வேறாய் காரணங்கள்...
வண்ண வண்ணமாய் சிதறும் வானத்தில் வாணங்கள்...
தேசமெங்கும் அழகாய்...

காற்றில் அசையும் சுடரின் ஒளி...
ஒன்றாய்ப் பாய்ச்சுகிறது
வேற்றுமையில் ஒற்றுமையெனும் வெளிச்சத்தை...
தேசத் தாயின் திருமுகத்தில்...
______________

நாமும் கொண்டாடுவோம்
தேசத்தின் பன்மைத்துவ பாரம்பரியத்தை....

*தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.*
*********************************

*க.சுவாமிநாதன்*

No comments:

Post a Comment