பழைய
செய்திதான். ஆனால் நான் இப்போதுதான் பார்த்தேன்.
அமைதிக்கான
நோபல் பரிசை சீசீ ரவிசங்கர் சாமியாருக்கு அளிப்பதற்காக அவரை அணுகினார்களாம். அதற்காக
சில ஆயத்த வேலைகள் செய்யச் சொன்னார்களாம்.
போயும்
போயும் பதினாறு வயசுப் பொண்ணு மலாலாவுக்கு கொடுத்த ஒரு விருதைப் போய் நானும் வாங்குவதா என்று மறுத்து
விட்டதாக ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.
ஆமாம்.
அமைதிக்கான நோபல் பரிசு பெறும் அளவுக்கு இவர் என்ன கிழித்திருக்கிறார்.
யமுனையின்
அமைதியை கலை நிகழ்ச்சி நடத்தி நாசமாக்கியதற்கா?
என்னை
ஜப்பானில ஜாக்கி சான் கூப்பிட்டாங்க,
அமெரிக்காவுல
மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாங்க.
நாந்தான்
வேண்டாம்னு சொல்லிட்டேன்
என்ற
கணக்காக நம்ம புளிச்ச மாவு ஜெமோதான் சொல்வாரு.
இப்போ
அந்த பட்டியலில் சீசீ சாமியாரும் இருக்காரு என்று இப்போதான் தெரிந்தது.
No comments:
Post a Comment