Saturday, October 5, 2019

49 - காந்திக்கு நிகழ்ந்ததுதான்




பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எப்படி காந்தியின் மீது சதி மற்றும் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்களை சுமத்தினரோ அது போலவே இன்றைய ஆட்சியாளர்களை கேள்வி கேட்பவர்களும் தேசத்துரோகிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். காஷ்மீர் பிரச்சினையில் மோடி அரசு மீதான அணுகுமுறையை விமர்சித்த காரணத்தால் காந்தி அமைதி அறக்கட்டளையின் தலைவர் மீது காவல்துறை வழக்குகளை ஏவியுள்ளது.

மேலே உள்ளது எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் எழுதிய கட்டுரையின் ஒரு பத்தியின் தமிழாக்கம். (முழுமையாக நாளை பகிர்ந்து கொள்கிறேன்)

கும்பல் படுகொலைகளை தடுத்து நிறுத்துங்கள் என்று மோடிக்கு கடிதம் எழுதிய 49 ஆளுமைகள் (ஆமாம். மணி ரத்னம் நிஜமாகவே கையெழுத்து போட்டாரா இல்லையா? அவர் போடவில்லை என்று சங்கிகள் ஒரு தனி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்)  மீது  தேசத்துரோக  வழக்கை பாய்ச்சியது என்பது புதிதல்ல.

மகாத்மா காந்தி மீது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கடை பிடித்த அதே அணுகுமுறையைத்தான் மோடி அரசு தன்னை விமர்சனம் செய்தவர்கள் மீது கடைபிடிக்கிறது.

தாங்கள் காந்தி அளவிற்கு கருதப்பட்டுள்ளதால் அவர்கள் பெருமிதம் கொள்ளலாம்.

No comments:

Post a Comment