Monday, October 14, 2019

காந்தி தற்கொலைக்கான காரணங்கள் . .



காந்தி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று குஜராத்தில் மாணவர்களுக்கு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கான சரியான பதில் என்னவாக இருக்கும் ?

இன்றைய ஆட்சியாளர்களின் குருமார்களின் ஒருவனான கோட்ஸே, கொலைகாரன் என்று அவப்பெயர் பெறுவதை தடுக்க,

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை, அஹிம்சை வழி போராட்டம் போன்ற போராட்டம் போன்ற மோசமான சித்தாந்தங்களுக்காக இன்றைய ஆட்சியாளர்கள் அவர்களின் தர்மப்படி வழங்கவுள்ள கும்பல் படுகொலையிலிருந்து தப்பிக்க,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மோடிக்கு "இந்தியாவின் தந்தை" பட்டம் வழங்க தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக

பதினைந்து லட்சம் ரூபாய் கோட்டு போடும் கண்றாவிக் காட்சியை பார்க்காமல் தவிர்ப்பதற்காக

குஜராத்தின் ஒரே வீர மகன் மோடிதான் என்று உலகம் புகழ

மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டார்.

காந்தியை கோட்சே ஒரு முறை கொன்றான். மோடி வகையறாக்கள் ஒவ்வொரு நாளும் கொல்கிறார்கள்.

மோடியா கேள்வித்தாள் தயாரித்தார் என்ற கேள்வியோடு முட்டு கொடுக்க சில வெட்கம் கெட்ட ஜென்மங்கள் வரும் . . .

மோடி ஆட்சியில் உள்ள திமிர்தான் இப்படிப்பட்ட கேள்வியை கேட்கும் ஆணவத்திற்கான அடிப்படை.

மோடியை விட மோடியை ஆதரிப்பவர்கள் மிகவுமே ஆபத்தானவர்கள். 

தாங்கள் செய்வது என்னவென்று தெரிந்தே செய்யும் . . . . . . . . . . . . .


No comments:

Post a Comment