Saturday, October 19, 2019

அது அவர்களின் தவறல்ல . . .


ஒவ்வொரு முறை மகனை சென்னைக்கு ரயிலேற்றும் வேளையில் பார்க்கும் காட்சி ஒன்று உண்டு.

ரிசர்வ்ட் கோச்சுகளில் முன் பதிவு செய்யாத பயணிகள் வேக வேகமாக ஏறி எங்கே காலியிடம் உள்ளது என்று தேடி இடம் பிடித்து அமர்வார்கள் அல்லது படுப்பார்கள். பெரும்பாலும் காட்பாடி வரை முன்பதிவு செய்தவர்களின் இருக்கை எண்ணில்தான் காட்பாடியிலிருந்து சென்னைக்கு  முன் பதிவு செய்தவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படும்.

அநேகமாக இவர்கள் அமர்ந்த அல்லது படுக்கையில் முன் பதிவு செய்த பயணிகள் வந்து இது தன் இடம் என்று சொல்லும் போது அசடு வழிந்து கொண்டோ அல்லது கடுப்போடோ எழுந்து செல்வார்கள்.

ரிசர்வ் செய்யாதவர்கள் ரிசர்வ் பெட்டியில் ஏன் ஏற வேண்டுமென்ற கேள்வி வரலாம்.

அதற்குக் காரணம் அடிப்படையில் அவர்கள் அல்ல. முன் பதிவு செய்யாத பயணிகளுக்கான பெட்டிகளை தேவைக்கேற்றார் போல அதிகரிக்காமல் அப்படிப்பட்ட பயணிகளை அலட்சியம் செய்யும் ரயில்வே துறையைத்தான் முதலில் குறை சொல்ல வேண்டும்.

அன்ரிசர்வ்ட் பெட்டிகளை அரசு அதிகரித்து  இருக்கை கிடைத்தால் அப்பயணிகள் ஏன் ரிசர்வ்ட் பெட்டிக்கு வரப் போகிறார்கள்!

சமீப காலத்தில் நீங்கள் இன்னொன்றையும் கவனித்திருக்கலாம். எந்த அளவிற்கு முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்கு, ஏன் அதை விட அதிகமாக மூன்றாம் ஏ.சி வகுப்புப் பெட்டிகள் அதிகமாகி உள்ளது.

இப்போதே இந்த நிலைமை!

தனியாருக்கு ரயில்களை தாரை வார்க்க தொடங்கியுள்ளார்கள். அது வேகமெடுக்கிற போது பயணிகளின் நிலைமை இன்னும் மோசமாகும்.

ஆனால் அது பற்றியெல்லாம் உணர்ந்தது போல தெரியவில்லை. முதல் தனியார் ரயில் பற்றிய செய்தி அப்படி. அது பற்றி நாளை எழுதுகிறேன்.

No comments:

Post a Comment