Thursday, October 3, 2019

பறிமுதல் செய்யப்பட்ட அபாய சுவரொட்டி



மேலே உள்ள சுவரொட்டியை மதுரை நகருக்குள் ஒட்டக் கூடாது என்று மதுரை மாநகர் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

மதுரை நகரத்திற்குள் சுவரொட்டி ஒட்டாமல் நகரின் அழகை பாதுகாக்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் பறிமுதல் செய்துள்ளதாக போலீஸ் சொல்வதாக மதுரை கோட்டச் சங்க இணைச்செயலாளர் தோழர் தணிகை ராஜ் அவர்களோடு தொலைபேசியில் பேசிய போது அவர் சொன்னார்.

அதே நேரம் இன்னொன்றும் சொன்னார்.

அதிமுக கட்சியின் போஸ்டர்கள், திரைப்பட விளம்பர பேனர்கள் இவையெல்லாம் எந்த தடையுமில்லாமல் மதுரையில் ஒட்டிக் கொண்டுதான் உள்ளார்கள். ஏன் நாம் நடத்திய மாநாடு, பொதுக் கூட்ட போஸ்டர்களுக்கெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி அவர் சொன்ன இறுதியான தகவல்தான் அதிர்ச்சி அளித்தது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி தயாரித்த சுவரொட்டியைக் கூட இப்படித்தான் பறிமுதல் செய்தார்கள் என்றார் அவர்.

மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அண்ணல் காந்தியையும் பிடிக்காது, அண்ணல் அம்பேத்கரையும் பிடிக்காது. 

அந்த மன நிலையில்தான் எடுபிடி ஆட்சியும் உள்ளது. ஏவல் துறையும் உள்ளது.

பிளவு வாதிகளுக்கு "மக்கள் ஓற்றுமை" என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கத்தான் செய்யும்.

போலீஸ் சீருடையின் நிறத்தை  காக்கிக்குப் பதிலாக என்றைக்கு காவியாக மாற்றப் போகிறார்களோ?

1 comment: