Saturday, October 26, 2019

கைது செய்யும் "கைதி"

இன்று "கைதி".



ஒரே இரவில் துவங்கி முடியும் படம்.

முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை நம்மை இருக்கையில் கட்டிப் போடுகிற, பதட்டத்தில் ஆழ்த்துகிற படம்.

போலீசாரால் பறிமுதல் செய்து பத்திரமாக வைக்கப்பட்டுள்ள 800 கோடி ரூபாய் போதைப் பொருளையும் அக்கும்பலின் தலைவனையும் மீட்க வெறியோடு புறப்பட்டுள்ள கூட்டம் ஒரு புறம்.

காவல்துறை அதிகாரிகள் யாரும் வராமல் கமிஷனர் அலுவலகத்தின் காவலர்கள் நைஸாக வெளியேறி விட, தற்செயலாக மாட்டிக் கொண்ட ஒரு காவலரும் சில மாணவர்களும் நிலைமையை சமாளிப்பது மறு புறம்.

இதற்கு நடுவில்தான் ஐ.ஜி அளிக்கும் விருந்தில் மதுவில் ஒரு கறுப்பாடால் போதை மருந்து கலக்கப்பட்டதால் மயங்கி விழுந்த அதிகாரிகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போதைப் பொருள் மீண்டும் கொடியவர்கள் கையில் சிக்காமல் இருக்க பயணிக்கும் ஒரு நேர்மையான காவல் அதிகாரி.

பத்து வருடம் சிறைத் தண்டனைக்குப் பிறகு அனாதை விடுதியில் உள்ள மகளை முதல் முறையாக மகளைப் பார்க்கச் செல்லும் கைதி டெல்லி, இந்த பணியில் லாரி ஓட்டி தன்னை ஈடுபடுத்திக் கொள்ள, படம் வேகமாய் பறக்கிறது. 

வேண்டா வெறுப்பாய் லாரி ஓட்டத் தொடங்கினாலும் நிகழ்ச்சிப் போக்குகள் டெல்லியை முழுமையாய் இறங்க வைக்கிறது. 

கடைசியில் கொஞ்சம் வழக்கமான சினிமாத்தனங்களுடன் படம் முடிகிறது.

எப்படி என்பதை படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

கைதி டெல்லியாக கார்த்திக்கு தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. முழுமையாக பயன்படுத்தியுள்ளார்.

பாடல்களோ, காதல் காட்சிகளோ இல்லாத படம். பின்னணி இசை அதை ஈடு செய்கிறது. 

அஞ்சாதே நரேன், கலக்கப்போவது யாரில் வரும் பையன், எஏ, பிபீ வாத்தியார் ஆகியோரும் கலக்குகிறார்கள். 

நிச்சயம் தைரியமாக செல்லலாம். கொடுத்த காசுக்கு சரக்கு உண்டு.

நாளை "பிகில்"

2 comments:

  1. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பார்க்கத் தூண்டும் விமர்சனம்

    ReplyDelete