ஒரு சில மணி நேரங்களுக்குள் ஒருவரை கோபுரத்திலிருந்து குப்பைத் தொட்டிக்கு தள்ள முடியும் என்றால் அதற்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீதேவிதான்.
அவர் இறந்த செய்தி வந்ததும் வருத்தப்பட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பலர், அவர் வயிற்றில் மது இருந்தது என்ற தகவல் வந்ததும் அப்படியே பல்டி அடித்து நக்கலடிக்க துவங்கி விட்டனர்.
மட்டையான மயில்
குடி நாட்டிற்கும் மட்டுமல்ல, மயிலுக்கும் கேடு,
குளியல் தொட்டிக்கு பாதுகாப்பு,
துபாய் போகலாமா என்று மனைவியைக் கேட்ட கணவன்
என்று சமூக வலைத்தளம் மீண்டும் மீம்சூழ் உலகாக மாறி விட்டது.
எத்தனையோ தலைவர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் மதுப் பழக்கத்திற்கு ஆட்பட்டவர்கள். அவர்களின் இறப்பிற்கு மதுப் பழக்கமே காரணமாகவும் இருந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் யாருமே அவர்களின் மதுப்பழக்கத்தை நக்கல் அடித்து பேசியது கிடையாது. அது பற்றியெல்லாம் உபதேசம் செய்ததும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் தண்ணியடிப்பது பற்றி பெருமையாக எழுதுபவர்களும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள்.
மதுப்பழக்கமோ அல்லது வேறு எந்த கெட்ட பழக்கமோ அது ஆண், பெண் இருவருக்குமே பாதிப்பை உருவாக்கக் கூடியது. நிறுத்தப்பட வேண்டியதுதான்.
எந்த ஒரு ஒழுக்கமும் இரு பாலருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதை பெண்களுக்கு மட்டும் போதிப்பது
அப்பட்டமான ஆணாதிக்க மனோபாவம்தான்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அது பலருடைய மனதிலிருந்து வெளிப்படத்தான் செய்கிறது என்பதைத்தான் இச்சம்பவமும் உணர்த்துகிறது.
Well said...
ReplyDeleteநண்பரே சொல்வது சரிதான் ,
ReplyDeleteமீம்ஸ் கிரியேட் செய்து போற்றுவதும் ,
தூற்றுவதும் இன்றைய ஆண்ட்ரைடு உலகம்...
அன்று யாரையும் போற்றுவதோ தூற்றுவதோ
குறைவான ஒரு செயலே...
ஆணும் பெண்ணும் ஒன்றல்ல
ReplyDeleteஅல்லாஹ் ஆண்களை மேம்படுத்தியே படைத்துள்ளான்
அல்லா சொன்னாரா அல்லது அவரது பெயரில் மனிதர்கள் படைத்த பாரபட்சமா? ஏற்றுக் கொள்ள முடியாத பார்வை இது
Deleteநீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை
ReplyDeleteஅல்லாஹ் எங்களுக்கு அளித்த வேதத்தில் உண்டு
அது போதும் எங்களுக்கு
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.