தனியொரு
மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடப்பட்ட தேசத்தில்தான்
ஒரு
கிலோ அரிசியை களவாடியதாக குற்றம் சுமத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் அடித்தே
கொல்லப்பட்டிருக்கிறான்.
கொன்றவர்களை
விலங்குகள் என்று சொல்லி தூற்றியுள்ளார்கள். அது விலங்குகளுக்கு செய்யப்படுகிற இழிவு.
ஏனென்றால்
எந்த விலங்குகளும் தாங்கள் வேட்டையாடுவதை கொண்டாடி செல்பி எடுத்து மகிழ்ந்ததில்லை.
உண்மையில்
அந்த கொலைகாரர்கள்தான் மன நிலை தவறியவர்கள். நாகரீகம் வளர்ச்சியடைந்து விட்டது என்பதை
பொய்யாக்கியவர்கள். உச்சபட்ச தண்டனையான மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்.
பதினோராயிரம்
கோடி ரூபாயை கொள்ளையடித்தவன் ஆணவத்தோடு பேட்டி கொடுக்கையில்தான் மதுவிற்கு மரணம் நிகழ்ந்துள்ளது.
உணவுக்கு
வழி இல்லாத தனி ஒரு மனிதன் கொல்லப்படும் வேளையில் எதற்கு ஒரு உலகம்?
மனசாட்சி
மறத்துப் போய், மனித நேயம் மறந்து போய், மனித உணர்வுகள் மறைந்து போன நிலையில் இனியும்
இந்த உலகம் தேவையா என்ன?
நாளை
ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்வதும் அதை புகைப்படம் எடுத்து பெருமை பேசும் நடைமுறைதான்
உருவாகும் என்றால் இந்த உலகத்தை இன்றே அழித்து விடலாமே?
மனம் வருந்தச் செய்த மாபாதகம் :(
ReplyDeleteWho has given the right to kill one's life?all gundas take Justice in their hands n giving only Injustice to others? I too join with ur feeling.
ReplyDeleteநன்றாக சொன்னீர்கள்.
ReplyDelete