குமரி மாவட்ட தோழர் ஷாகுல் அமீது அவர்கள் எழுதிய பதிவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நல்லதொரு பாரம்பரியம் நச்சுப்பாம்பை விட கொடிய ஆர்.எஸ்.எஸ் உள்ளே புகுந்த பின்பு எப்படி சிதைந்து போனது என்பதை இப்பதிவைப் படித்தால் புரியும்.
#நாங்களும். ..........
இது ஒரு பழங்கதை தான். ...........
ஏறத்தாழ, 60 வருடங்களுக்கு முந்தையகதை. ........
எனக்கு அப்போது 10 வயது இருக்கும். ..
எங்கள் ஊர், குமரி மாவட்டம், மார்த்தாண்டம். ...திருவனந்தபுரம் -கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் -அப்போது!
சிவராத்திரி அன்று நடைபெறும், சிவாலய ஓட்டம், வரலாற்றுப் புகழ் பெற்றது. ..
குமரி மாவட்டம், வேணாட்டின் ஒரு பகுதியாக இருந்து, பின்னர், திருவிதாங்கூர் சமஸ்தானம் என்று பெயர் மாற்றம் பெற்ற காலத்திலிருந்தே, சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருகிறது. .
முஞ்சிறை மகாதேவர் கோவில், திக்குறிச்சி, திற்பரப்பு, திருநத்திக்கரை, பொன்மனை, திருப்பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் போன்ற, 12 சிவாலயங்களுக்கு, ஏறத்தாழ, 120 கிலோமீட்டர் தூரத்தை, பக்தர்கள், ஓடிக்கொண்டே தரிசிப்பது தான் சிவாலய ஓட்டம் எனப் படுகிறது. .....
பக்தர்கள் கைகளில், பனை ஓலையில் செய்யப் பட்ட, விசிறிகளால், வீசிக் கொண்டே,பக்தி பரவசத்துடன், கோபாலா, கோவிந்தா என்று, உரக்க, கூவிக்கொண்டே ஓடுவதைக் காண நாங்கள், எங்கள் வீட்டிற்கு வெளியே, விடிய,விடிய,காத்திருப்போம். ........
காலையில், உச்சி வெயிலில், ஓடிக்கொண்டே இருக்கும், பக்தர்களுக்கு, தாகசாந்திக்காக, எங்கள் வீட்டுத் திண்ணையில், மிகப் பிரமாண்டமான, மண்பானைகளில், மோர், பானகம், சுக்கு காப்பி, வெந்நீர், ஆகியவை வைத்திருப்போம். .....
மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், கிடாரங்காய் ஊறுகாய் கூடவே இருக்கும்.
களைத்து வரும், பக்தர்களுக்கு, தாகத்தை தணிப்பது நமது கடமை என்பதை, எனது வாப்பா(தந்தை) தனது இறுதிக் காலம் வரை சொல்வதுண்டு என்று, எனது உம்மா(அம்மா)கூறி, நான் கேட்டிருக்கிறேன். .....
எனது தந்தையார், இறந்த பின்பும், எனது உம்மா, வைராக்கியமாக, சில வருடங்கள், அதைத் தொடர்ந்தார். ......
எனக்கும், நமது பக்தர்களுக்கு, மோர், பானகம், சுக்கு காப்பி, ஊற்றிக் கொடுப்பதில், அப்படி ஒரு ஆனந்தம்; அப்படி ஒரு பெருமை. ...........
காலம், மாறியது........
வீரபாகு என்ற பெயரில் ஒரு மனிதன் வந்தான், எங்கிருந்தோ. .......
ஏதோ, RSSஆம்.........
அலிசாகிப்(எனது வாப்பா) ஒரு துலுக்கன்...
இனி, #அந்த வீட்டில், தாகசாந்திக்காக, போகக் கூடாது என்று உத்தரவிட, கொஞ்சம் கொஞ்சமாக, அந்த பாரம்பரியம் நின்று போனது. .............
எனக்கு இப்போது ஏறத்தாழ 70 வயதாகிறது. ........
ஆனாலும், இன்றுவரை, எங்களை மக்களிடமிருந்து, வீரபாகுக்களால், பிரிக்க முடியவில்லை. .........
இன்றும், மக்களோடு மக்களாக, இரண்டறக் கலந்து தான் வாழ்கிறோம். ...
#சைவ,வைணவ,ஒற்றுமையை பறைசாற்றுவது தான், இந்த, சிவாலய ஓட்டத்தின் நோக்கம் என்பது, கவனிக்கத்தக்கது. ....
No comments:
Post a Comment