Friday, February 2, 2018

மீம் மட்டும் போதாதென்பதால் . . .


பட்ஜெட் பதிவு 5

பட்ஜெட் தொடர்பாக முந்தைய சில பதிவுகளில் வெறும் மீம் மட்டும் போட்டிருந்தேன்.

ஆனால் இப்பிரச்சினை தொடர்பாக கொஞ்சம் விரிவாக எழுத வேண்டியுள்ளது.

குடம் பாலைக் கொடுத்து விட்டு அதிலே நஞ்சையும் கலந்துள்ள மோடியின் வஞ்சகத்தை அறிந்து கொள்ளூங்கள்.

அழிப்பதற்காக இணைப்பா?



1956 ல் ஆயுள் காப்பீட்டுத்துறை தேசியமயமாக்கப்படுகிறது. எல்.ஐ.சி நிறுவனம் துவக்கப்படுகிறது.

1972 ல் பொதுக்காப்பீட்டுத்துறை தேசியமயமாக்கப்படுகிறது. எல்.ஐ.சி போல ஒரே நிறுவனமாக துவக்குவதற்குப் பதிலாக நான்கு நிறுவனங்களாக துவக்கப்படுகின்றன. நேஷனல், நியூ இந்தியா, ஓரியண்டல், யுனைட்டெட் இந்தியா என்ற நான்கு நிறுவனங்களும் அவற்றைக் கட்டுப்படுத்தக் கூடிய விதத்தில் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனும் உருவாகிறது.

நான்கு பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக இணைத்திட வேண்டும் என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோரிக்கை. ஆனால் அதை அரசு புறக்கணித்து விட்டது.

இன்சூரன்ஸ்துறையில் தனியார் கம்பெனிகளை அனுமதித்த நிலையில் வாஜ்பாய் அரசு ஜி.ஐ.சி யின் கட்டுப்பாட்டிலிருந்து நேஷனல், நியூ இந்தியா, ஓரியண்டல், யுனைட்டெட் இந்தியா ஆகியவற்றை விடுவித்து சுயேட்சையாக செயல்படுமாறு கூறி விட்டது. ஜி.ஐ.சி நிறுவனத்தை மறு இன்சூரன்ஸ் மட்டுமே செய்யக் கூடிய நிறுவனமாக ஜி.ஐ.சி ரீ (GIC Re) மாற்றி விட்டது.

இச்சூழ்நிலையில் நான்கு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது. நான்கு கம்பெனிகளில் நிர்வாகமும் அக்கோரிக்கையை முன்வைத்தன. அவை நியமித்த சில மேலாண்மை ஆலோசகர் குழு( Management Consulltants) க்களும்  அதையே பரிந்துரைத்தது.

இவற்றை எல்லாம் விட முக்கியமாக

பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக்குழுவும் (Parliamentary Committee on Public Enterprises)  நான்கு பொதுத்துறை பொதுக்காப்பீட்டு  நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக இணைப்பதுதான் அவற்றின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது என்று ஒருமனதாக பரிந்துரைத்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.  தற்போது மோடியால் ஓரம் கட்டப்பட்டுள்ள முரளி மனோகர் ஜோஷிதான் அக்குழுவின் தலைவராக இருந்தார் என்பது கூடுதல் தகவல்.

இந்த பட்ஜெட்டில் நேஷனல்,  ஓரியண்டல், யுனைட்டெட் இந்தியா ஆகிய மூன்று நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஏன் மூன்று?

நியூ இந்தியா என்ன ஆனது?

இரண்டு மாதங்கள் முன்பாகத்தான் நியூ இந்தியா நிறுவனத்தின் பத்து சதவிகித பங்குகளை விற்றுள்ளது மத்தியரசு. அதனால் அதன் மீதான உரிமையை இழந்து விட்டதாக நினைக்கிறது போல, 90 % பங்குகள் தன் வசம்தான் உள்ளது என்பதை ஜெய்ட்லி மறந்து விட்டார் போல.

நியூ இந்தியா மட்டுமல்ல, ஜி.ஐ.சி ரீ நிறுவனத்தின் பத்து சதவிகித பங்குகளையும் தாரை வார்த்துள்ளது மோடி அரசு.

பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதற்கு மகிழ்ச்சிதானே அடைய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால் அப்படி மகிழ்ச்சியடைய முடியவில்லை.

ஏனென்றால்

ஒரே நிறுவனமாக மாற்றி அதன் பங்குகளை விற்கப் போவதாகவும் அறிவித்துள்ளார் ஜெய்ட்லி.

பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை வலிமைப்படுத்தி அதன் வளர்ச்சியை நாட்டுக்கோ மக்களுக்கோ பயன்படுத்திக் கொள்ள ஒரே நிறுவனமாக இணைக்கப்போவதில்லை. தனித்தனியாக மூன்று நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்குப் பதிலாக ஒரே நிறுவனமாக விற்றால் அவர்களுக்கு நல்லது என்று நினைக்கிறார் அந்த உத்தம புத்திரன்.

ஆட்டை வெட்டுவதற்கு முன்பாக அதன் கழுத்தில் போடப்பட்டுள்ள மாலையாகத்தான் இணைப்பை பார்க்க வேண்டியுள்ளது.


பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் கழுத்தை வெட்ட வாளை ஓங்கியுள்ள அந்த முரட்டுக்கையை உடைத்து எறிய வேண்டிய பணியை இப்போது துவக்கிட வேண்டியுள்ளது. 

3 comments:

  1. அன்சாரி முகம்மதுFebruary 3, 2018 at 8:07 AM

    வணக்கம் சார் , நலமா
    வங்கத்தில் கம்யூனிஸ்ட் 3 வது இடமாமே .. வங்கத்தில் பாஜக தோல்வியை கொண்டாட முடியாத நிலையில் இருக்கீங்க சார்
    அன்றைக்கு கம்யூனிச தோழர்களின் நிலைப்பாடு தொடர்பாக ஒரு கருத்தை சொல்லி இருந்தேன்
    அதுக்கு தளபதியை இழுத்து திசை திருப்புனீங்க
    ஆனால் இன்று நிலை
    காங்கிரஸ் கூட சேர முடியாது என்று கம்யூனிச தலைமை முடிவு இன்று பாஜக வங்கத்தில் இரண்டாவது இடம்
    எவ்வளவு அசிங்கம் தெரியுமா ?
    தமிழகத்தில் பாஜக இரண்டாவது இடம் வந்தால் எவ்வளவு அசிங்கமோ அதுக்கு இது எந்தவகையிலும் குறைந்தது அல்ல
    இது காரணம் கம்யூனிச தலைமை
    காங்கிரஸ் வெறுப்பு

    அது இருக்கட்டும்

    தளபதி என்றைக்குமே மதவாத கூடடணி இல்லை என்று சொல்லி இருக்கின்றார்
    உங்க தலைவர் சொல்லி இருக்கின்றார் பாஜக அராஜக கட் சி அல்ல என்று

    இப்போ சொல்லுங்க

    நட்புடன்

    அன்சாரி முகம்மது

    ReplyDelete
    Replies
    1. இன்று ஒரு பயணம் உள்ளது. உங்களுக்கான பதில் நாளை அளிக்கிறேன்.

      Delete
    2. தளபதி கொஞ்சம் EB பக்கம் பாருங்கண்ணா.

      Delete