Monday, February 5, 2018

“மோடி” பக்கோடாதான் மிச்சம்



“உங்கள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெளியே பக்கோடா விற்கிறார்கள். அதன் மூலம் இருநூறு ரூபாய் கிடைக்கிறது. பக்கோடா விற்பதும் கூட ஒரு வேலை வாய்ப்புதான்”

இப்படி மோடி திருவாய் மலர்ந்துள்ளதை நையாண்டி செய்யும் விதமாக பெங்களூரில் மோடி கலந்து கொண்ட கூட்ட மைதானத்துக்கு அருகே பல பட்டதாரி இளைஞர்கள், பட்டமளிப்பு விழாவில் அணிந்து கொள்கிற கவுன் மற்றும் தொப்பி அணிந்து பக்கோடா செய்து விற்றுள்ளனர்.



அந்த பக்கோடாக்களுக்கு

மோடி பக்கோடா,
அமித்ஷா பக்கோடா,
யெட்டி பக்கோடா (யெடியூரப்பா)

என்றெல்லாம் பெயர்கள் வேறு சூட்டியுள்ளார்கள்.

மோடி பக்கோடா விற்பனை அமோகமாக இருந்திருக்கிறதாம். 

“அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் மொமண்ட்” இதுவன்றி வேறெது?

அதனாலோ என்னவோ பக்கோடா விற்பனையை தடை செய்து அந்த இளைஞர்களை கைது செய்து விட்டார்கள். அவர்கள் இருநூறு ரூபாய் சம்பாதிப்பதையும் கூட. 

"உன்னை பெத்து வளர்த்தக்கு இந்த மாங்கொட்டைதான் மிச்சம்' என்று ஒரு படத்தில் கவுண்டமணி ரேவதியிடம் சொல்வார். அது இன்று மோடிக்கு கச்சிதமாக பொருந்துகிறது. 


பக்கோடா தொடர்பாக மோடியிடம் சீரியஸாகவே சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது. அவை அடுத்த பதிவில்.

No comments:

Post a Comment