நேற்று வாட்ஸப்பில் வந்து நான் விழுந்து விழுந்து சிரித்ததை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.
படம் உபயம் என்னுடையது.
இன்னும் ஒரு செய்தி:
கூகுள் இமேஜிஸில் Thermacol என்று தேடினால் அண்ணனின் உலகப் புகழ் பெற்ற ஆராய்ச்சியின் புகைப்படம் கிடைக்கிறது.
படித்ததும் கண்கள் குளமானால் கம்பனி பொறுப்பல்ல 😂😂😜:-
இந்தியாவுக்கும்- சீனாவிற்கும் போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை சீன படைகள் சூழ்ந்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று
ஒரு வீரன் மட்டும் தன் மேல் கொசு வலை ஒன்றை சுற்றிக் கொண்டு, மறைவிடத்தை விட்டு வெளி வந்து சீன வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். நிலைகுலைந்த சீன வீரர்கள் ஓடி விட்டனர். இந்திய வீரரின் வீர செயலை பாராட்டிய எல்லோரும்,
கொசு வலையை போர்த்திக் கொண்டு எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டனர்.
அதற்கு அந்த வீரர் சொன்னார், "எல்லாம் கொசு வலையை போர்த்திக் கொண்டால் குண்டு துளைக்காது என்கிற தைரியத்தில்தான், இவ்வளவு சின்ன கொசுவினாலேயே இதனுள் நுழைய முடியவில்லையே, அதை விட பெரிய தோட்டா எப்படி நுழையும்" என்றார்..
அவர்தான் பின்னாளில் தி கிரேட் செல்லூர் ராஜூ என்று அழைக்கப்ப்ட்டார்.
No comments:
Post a Comment