இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை மீண்டும் பகிர்கிறேன். இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை என்பது போல பிப்ரவரி மாதம் வந்தாலே வருகிற காதலர் தின காழ்ப்புணர்வும், பகத்சிங் மீதான போலிப் பாசமும் தாங்க முடிவதில்லை.
மக்களின் நினைவுத்திறன் குறைந்து கொண்டு வருவதும் பார்ப்பதையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வெறியும் காவிகளுக்கே சாதகமாகும் என்பதை பகத்சிங் பற்றிய தவறான தகவலை பகிர்ந்து கொள்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இன்று காலை வந்த இந்த படம்தான் இந்த பதிவினை கோபத்தோடு எழுத வைத்தது.
இரண்டு மூன்று வருடங்களாகவே பிப்ரவரி மாதம் வந்தாலே சிலருக்கு சுதந்திர வேட்கையும் தியாகிகள் மீதான நேசமும் வந்து விடும்.
“பிப்ரவரி பதினான்காம் தேதி காதலர் தினம் என்று ஞாபகம் வைத்துள்ளவர்களே, உங்களுக்கெல்லாம் அன்றுதான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டார்கள் என்று தெரியுமா?” என்று உணர்வுகளை உசுப்பேத்தி விடும் போலி தேச பக்தர்கள் முகநூல், வாட்ஸப் என்று வியாபித்திருப்பார்கள். இந்த வருடமும் ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்களுக்கு பகத்சிங் மீதான பாசத்தை விட காதலர் தினத்தின் மீதான வெறுப்புதான் அதிகம்.
ஏனென்றால் அவர்களுக்கே பகத்சிங் என்று தூக்கிலிடப்பட்டார் என்பது தெரியாது.
ஆமாம் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் பிப்ரவரி 14 ம் தேதி ஒன்றும் தூக்கிலிடப்படவில்லை. 1931 ம் வருடம் மார்ச் மாதம் 23 ம் தேதி அன்றுதான் அவர்களை பிரிட்டிஷ் அரசு தூக்கிலிட்டது. ஆனால் காதலர் தினம் என்று இவர்கள் சொல்லிக் கொண்டு அலைகிறார்கள்.
ஆசிரியர் தினத்தை “குரு உத்ஸவ்”, கிறிஸ்துஸ் தினத்தை “நல்ல நிர்வாக(!) தினம் என்று மாற்றியவர்களின் தொண்டரடிப் பொடிகள் அல்லவா இவர்கள்!
இப்படி வரலாற்றை திரிக்கிறீங்களேப்பா? நியாயமா இது?
No comments:
Post a Comment