நேற்று
பத்திரிக்கையில் பார்த்த செய்தி
உச்ச
நீதிமன்றத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக மற்ற
மூன்று நீதிபதிகளோடு நான் இணைந்ததற்கு நான் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவன் என்று
சிலர் பழி சொல்கிறார்கள். நான் நீதிபதியாக பொறுப்பேற்கையில் நான் ஒரு அரசியல் கட்சியில்
இணைந்திருந்ததை தெரிவித்திருந்தேன். நீதிபதியான
பின்பு அந்த இணைப்பை முழுமையாக துண்டித்து விட்டேன். ஏனென்றால் அப்படி இருப்பது என்
பொறுப்புக்களை, கடமைகளை நிறைவேற்ற தடையாக இருக்கும். என் மீது பழி போட்டவர்களால் தங்களுக்கும்
எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பே கிடையாது என்று சொல்ல முடியுமா?
இன்னும்
நான்கு மாதங்களில் ஓய்வு பெற்ற பின்பு, நான் வேறு எந்த பணிக்கும் செல்ல மாட்டேன் என்று
இங்கே பகிரங்கமாக கூறுகிறேன். ஏதாவது வாய்ப்பு
தாருங்கள் என்று அரசிடமோ அல்லது வேறு யாரிடமோ கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டேன். இந்த மாவட்டத்திலேயே நிம்மதியாக ஓய்வுக்
காலத்தைக் கழிப்பேன்.
விஜயவாடாவில்
நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி
சேலமேஸ்வர் பேசியதன் தமிழாக்கம்தான் மேலே உள்ளது.
அந்த
ஆணையம், இந்த ஆணையம், போதாக்குறைக்கு ஆளுனர் பதவி என்று ஆசையைத் தூண்ட ஆயிரம் வாய்ப்புக்கள்
உள்ள நிலையில்
எத்தனை
நீதிபதிகள் இப்படி சொல்வார்கள்?
அப்படி
சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் !!!
பி.கு ; நீண்ட காலமாக ட்ராப்டிலேயே இருந்தது என்றாலும் அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதால் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்
No comments:
Post a Comment