இந்திய - பங்களாதேஷ் எல்லைப் பிரச்சினை என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு கருத்தரங்கத்தை நடத்துகிறது.
அதிலே மேற்கு வங்க ஆளுனர் கே.என்.திரிபாதியும் திரிபுரா ஆளுனர் தத்தகத்தா ராயும் கலந்து கொள்வதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்தது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்வில் ஆளுனர்கள் கலந்து கொள்வது சரியல்ல என்று கண்டனங்கள் எழுந்ததும் மேற்கு வங்க ஆளுனர் எச்சரிக்கையாகி தான் கலந்து கொள்ளப் போவதான தகவல்கள் தவறு என்று அறிவித்து விட்டார்.
ஆனால் திரிபுரா ஆளுனர் தத்தகத்தா ராய் அப்படியெல்லாம் அறிவிக்கவில்லை. மாறாக கலந்து கொண்டது மட்டுமல்ல,
"பங்களாதேஷிலிருந்து முஸ்லீம்கள் வருவதால் இரண்டு மாவட்டங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகி விட்டனர் (இது பொய் என்பதை 20111 மக்கட்தொகை கணக்கெடுப்பின் மூலம் முன்பே விளக்கமளித்து விட்டனர்). எனவே மற்ற மாவட்டங்களிலும் முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் ஹிந்துக்கள் ஒற்றுமையோடு இருந்து அவர்களை எதிர்க்க வேண்டும். அஸ்ஸாமில் உள்ள அஸ்ஸாமிய ஹிந்துக்களுக்கும் பெங்காலி பேசும் ஹிந்துக்களுக்கும் ஆபத்து உள்ளதால் அவர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்"
என்று கலவரத்துக்கு தூபம் போட்டுள்ளார்.
இவர் இப்படி பேசுவது கண்டனத்துக்குரியது. அரசியல் சாசனத்திற்கும் தேச ஒற்றுமைக்கும் எதிரானது.
கவர்னர் பதவியிலிருந்து இவரை நீக்க வேண்டும். ஆனால் அது நடக்காது என்பது யதார்த்தம்.
தேர்தல் களத்தில் உள்ள திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் இந்த மனிதன் மீது கவனமாக இருக்க வேண்டும். தான் ஒரு காவி என்பதை வெளிப்படையாக பிரகடனப் படுத்திக் கொள்கிற இந்த ஆபத்தான மனிதனை வைத்து பாஜக எப்படிப் பட்ட மோசடி வேலைகளையும் அரங்கேற்றும்,
எச்சரிக்கை, எச்சரிக்கை எச்சரிக்கை
No comments:
Post a Comment