Friday, February 16, 2018

கழுதை தேய்ந்த கதையாய் . காவிரி



காவிரி நடுவர் மன்றம்  தனது இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று ஆணையிட்டது.

அதே காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி தண்ணீர் தந்தால் போதுமானது என்று முடிவு செய்தது.

உச்ச நீதி மன்றமோ இப்போது 192 என்பதையும் குறைத்து 177.25 டி.எம்.சி தண்ணீர் தருவது மட்டுமே போதுமானது என்று உத்தரவிட்டுள்ளது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்ற  சொற்றொடரை நிரூபித்த பெருமை நமது உச்ச நீதி மன்றத்துக்கே பொருந்தும்.

இந்த தீர்ப்பிற்கு மேல்முறையீடு கிடையாது.
பதினைந்து ஆண்டுகளுக்கு இந்த தண்ணீர் அளவு பொருந்தும்.
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கர்னாடகம் புதிய அணைகள் கட்டக் கூடாது
ஆகியவை  இத்தீர்ப்பின் இதர முக்கியமான அம்சங்கள்.

205 வேண்டாம்
192 வேண்டாம்
இப்போது உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள 177.25 டி.எம்.சி தண்ணீரை கர்னாடக மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் சரியாக தருமா?  தமிழகம் மறுத்தாக்ல்

காவிரி நதி நீர்  மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு இனியாவது அமைத்திடுமா?

இது இரண்டுமே நடக்காவிட்டால் (நடந்தால்தான் அதிசயம்) உச்ச நீதிமன்றம் என்ன செய்யும்?

கர்னாடக அரசின் மீதோ அல்லது மத்தியரசு மீதோ நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உச்ச நீதி மன்றத்துக்கு இருக்கிறதா?

காவிரியில் ஓடும் தண்ணீரில் பெரும் பகுதி கர்னாடகா திறந்து விடுவதோ அல்லது தமிழகத்தில் பெய்யும் மழையோ அல்ல, தன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழகத்து விவசாயிகள் விடும் கண்ணீர் துளிகளின் சங்கமம்தான்.


கண்ணீர் துளிகள் தொடரும் என்பதுதான் சோகமான யதார்த்தம்

2 comments:

  1. 2015 டி.எம்.சி அல்ல 205

    ReplyDelete
    Replies
    1. ஆம். வேகமாக தட்டச்சு செய்கையில் தவறாகி விட்டது.
      நன்றி. திருத்தி விட்டேன்

      Delete